சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தமிழ் கடவுள் முருகன் | Tamil God Murugan
முருகக் கடவுளின் வரலாறு
முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சிவன் மற்றும் பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார்.
சிவபெருமான் தனது நெற்றிக் கண் நெருப்பினை வெளியிட அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் போது ஆறுமுகனாக முருகர் தோன்றினார்.
இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பி ஆவார்.
மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை மற்றும் குறத்தி பெண்ணான வள்ளி என்றும் பெண்ணும் மனைவியாவார்.
முருகக்கடவுள் குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார்.
முருகன் என்ற சொல்லிற்கு அழகு , இளமை என்று பொருள் படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும் .
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால் இவர் தமிழ் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் முருகப்பெருமானை நம் இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மேலும் பல நாடுகளில் கோவில்களை அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானை அதிகம் தமிழர்கள்தான் வணங்கி வருகின்றனர். இதனால் தான் இவரை தமிழ் கடவுள் முருகர் என்று அழைக்கின்றனர்.
முருகப்பெருமானின் வேறு சில பெயர்கள்
முருகன்
செய்யுள்
கந்தன்
ஆறுமுகன்
கலைவேந்தன்
குமரன்
குகன்
கந்தசாமி
சுப்பிரமணியம்
கார்த்திகேயன்
அயலவன்
சரவணன்
மயில்வாகனன்
வேலன்
சுவாமிநாதன்
வேலாயுதன்
தண்டாயுதபாணி
தண்டபாணி
சுரேஷ் சன்
கதிர் கிராமம்
வேலூர் ஆன்
மலையரசன்
முத்து வேலன்
ஆறுபடை ஐயப்பன்
செந்தில்நாதன்
வடிவேலன்
காங்கேயன்
சேனாதிபதி
முத்தையன்
செவ்வேல்
சிவகுமாரன்
ஆண்டியப்பன்
கந்தசாமி
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள்
முருகனின் ஆறுபடை வீடுகள் தமிழகத்தில் உள்ளன. இந்த ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும் குடும்பத்தில் ஒரு நல்ல மேன்மையான நிலை ஏற்படும், சிலருக்கு உடல் நலத்தில் உள்ள சில பிரச்சனைகள், தொழில் நஷ்டம் , கணவன் மனைவியிடையே தகராறு, குடும்பத்தில் கஷ்டம், வரவேண்டிய பணம் வராமல் தீர்ப்பது போன்ற பிரச்சனைகளுக்கு குடும்பத்துடன் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு ஒரே முறையில் சென்று வழிபாடு செய்துவிட்டு வந்தால் நிச்சயம் அனைத்து கஷ்டங்களிலிருந்து விடுபட்டு ஒரு நிம்மதியான சூழ்நிலை ஏற்படும் .
திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
பழனி
சுவாமிமலை
பழமுதிர்ச்சோலை
திருத்தணி
திருப்பரங்குன்றம்
ஆறுபடை வீடுகளில் முதன்மையான வீடாக திருப்பரங்குன்றம் கருதப்படுகிறது. இந்தக் கோயில் மதுரைக்கு தென்மேற்கில் ஒரு எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. திருப்பரங்குன்றம் கோயிலில் முருகப் பெருமான் எப்பொழுதும் மணக்கோலத்தில் தான் காட்சியளிக்கின்றார்.
திருச்செந்தூர்
அறுபடைவீடுகளில் இரண்டாவதாக அறியப்படுவது திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இந்த கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு உண்டான சிறப்பு என்னவென்றால் இங்கு தான் முருகன் சூரபத்மனை அளித்ததாக வரலாறு கூறுகின்றன. மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வந்தாள் வாழ்க்கை மேன்மை அடையும்.
பழனி
அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான பழனி பால தண்டாயுத திரு சுவாமி கோயில் இருக்கின்றது. இந்தக் கோவில் பழனியில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் நாரதர் சிவனுக்கு ஞானப்பழம் ஒன்றை வழங்கினார். இந்தப்பழம் முருகப்பெருமானுக்கு கிடைக்காத காரணத்தினால் முருகப்பெருமான் கோபமடைந்து ஆண்டி கோலத்தில் வந்து பழனி திருத்தலத்தில் தங்கியதாக புராணங்கள் கூறுகின்றது. மேலும் இந்த கோவிலின் சிலைக்கு தனி சிறப்பு உண்டு. இந்த சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. இந்த சிலையை வடிவமைத்தவர் போகர் என்ற ஒரு சித்தர் என அறியப்படுகிறது.
சுவாமிமலை
ஆறுபடைவீடுகளில் நான்காம் வீடாகக் கருதப்படுவது சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி திருக்கோவில் , இந்தக் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் முருகன் அவருடைய தந்தை சிவபெருமானுக்கு ஒரு மந்திரத்தின் பொருளை கூறியதால் அவரை சுவாமிநாதன் என்ற ஒரு பெயரால் அழைக்கப்பட்டார்.
திருத்தணி
ஆறுபடைவீடுகளில் ஐந்தாம் வீடாக பார்க்கப்படுவது திருத்தணியில் உள்ள முருகன் கோவில் இந்த கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்தான் முருகன் வள்ளியை திருமணம் செய்ததாக வரலாறு கூறுகின்றது. இந்தக் கோயிலின் தனி சிறப்பு என்னவென்றால் இந்த கோவிலில் அமைந்துள்ள படிக்கட்டுகள் 365 ஆகும். இது ஒரு வருடத்தின் 365 நாட்களை குறிக்கின்றது.
பழமுதிர்ச்சோலை
அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக கருதப்படுவது பழமுதிர்ச்சோலை இந்தக் கோவில் மதுரை மாவட்டத்திலுள்ள அழகர் கோவில் மலை மேல் பழமுதிர் சோலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் முருகப் பெருமான் தனது இரண்டு மனைவியான வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி அளிக்கின்றார். மேலும் இந்தக் கோவிலில் முருகனின் மூன்று அடி வேலுக்கு தனி சன்னதியும் உண்டு இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் முருகப்பெருமான் அவ்வையாரிடம்
சுட்டபழம் வேண்டுமா.. சுடாத பழம் வேண்டுமா..!
என்று கூறிதற்கான விளக்கத்தையும் அவரிடம் கூறியிருக்கின்றார்கள். இந்தத் தளத்தில் இருக்கின்ற மரம் நாவல் மரமாகும்.
முருகனுக்கு உகந்த நாள்
வருடம்
தைப்பூசம்
மாதம்
கிருத்திகை
சஷ்டி
வாரம்
செவ்வாய்க்கிழமை
வெள்ளிக்கிழமை
முருகனுக்கு உகந்த பூ
பச்சை மாலை
செவ்வரளி பூ