சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தீடீர் என தரையிறங்கிய 3 விமானங்கள்!
தற்போது 48 மணி நேரத்தில் 3 சர்வதேச விமானங்கள் இந்தியாவில் அவசரமாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச விமான நிறுவனங்களின் விமானங்கள் 3 கடந்த 48 மணி நேரத்தில் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் அவசரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதில், பல்வேறு விமானங்கள், தொழில்நுட்ப அவசரம் காரணமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கோழிக்கோடு, சென்னை மற்றும் கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கங்கள் செய்யப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். மேலும் அவர் கூறுகையில், சனிக்கிழமை வெளிநாட்டு ஆபரேட்டர்களை நாங்கள் இரண்டு அவசரமாக தரையிறக்கினோம். ஹைட்ராலிக் சிக்கல்கள் காரணமாக கொச்சினில் ஏர் அரேபிய மற்றும் கொல்கத்தாவில் எத்தியோப்பியன் ஏர்லைன் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவிட பட்டுள்ளது. மேலும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரைஇரக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.