சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
இந்தியவில் சமிப நாட்களாக நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் நோக்கில் பாஜகவின் நுபுர் சர்மா என்பவர் பேசியிருந்தார். அதைக்கண்டித்து பல்வேறு போராட்டங்கள் தேசமெங்கும் அமைதியான முறையில் நடைபெற்றன. இந்த நேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் என்ற பகுதியில் கன்னையா லால் என்பவர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கன்னையா லால் என்ற தையல் கடைக் காரர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கூறுகையில் ஒரு மதத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்கள் பதிவிட்ட கன்னையா லால் என்பவருடைய செயல் ஏற்புடையதல்ல என்றாலும் அவரை கொடூரமாக கொலை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு அமைதி வழியில் தான் போராட வேண்டும் என்பது தான் இந்திய முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். ஈவு இறக்கமற்ற இது போன்ற செயல்களை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்காது
இந்திய முஸ்லிம்களும் இதைஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் தங்களின் வலுவான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்திய தேசத்தின் இறையாண்மையையும், ஒருமைப் பாட்டையும் சீர்குலைக்கும் எவ்வித செயல்களையும் இந்திய இஸ்லாமியர்கள் ஏற்க மாட்டார்கள். ஒரு மனிதரைக் கொலை செய்பவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவரைப் போன்றவராவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்.
மதத்தின் பெயரைச் சொல்லி இது போன்ற கொடுஞ் செயல்களை யார்செய்தாலும் ஜாதி மத வேறுபாடின்றி அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசு இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்க வேண்டும். இந்தப் படுகொலையை அரங்கேற்றிய இரு கொலையாளிகளுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டுமென நீதித்துறையை கேட்டுக்கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கூறினார்.
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.