சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
குமரி பாடிபில்டர்யே புரட்டிப்போட்ட போதை!
குமரி மாவட்டம் நாகர்கோவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான ஜெயக்குமார். இவர் 2015 ஆம் ஆண்டு ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் ஜெயக்குமார். அந்த பகுதியில் ரோகித் என்ற பெயரில் ஜிம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று காலையில் மாஸ்டர் ஜெயக்குமார் வழக்கம்போல தனது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று அங்கு சில இளைஞர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென மயங்கிய விழுந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது மது வாடை வீசியதால், அவர் மது அருந்திய நிலையில் உடற்பயிற்சி செய்வதால் மயங்கி விழுந்திருக்கலாம் என்று அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உயிர் இறந்ததற்கான பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஜெயக்குமார் கடந்த சில மாதங்களாக மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது கடந்த 2ஆம் தேதி மிதமிஞ்சிய போதையில் வீட்டிற்கு சென்ற ஜெயக்குமாரை, அவரது மனைவி கடுமையாக கண்டித்துள்ளார். ஒரு காலத்தில் பாடிபில்டராக இருந்துவிட்டு குடியை மறக்க முடியாத நிலையில் இருப்பதை எண்ணி மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இதன் விளைவாக காலையில் விஷம் கலந்த மதுவை குடித்து விட்டு கடைசியாக உடற்பயிற்சி செய்து ஜெயக்குமார் உயிரை மாய்த்துக் கொண்டது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் கட்டுக்கோப்பான உடல் இருந்தாலும் உயிரைக் கொல்லும் நிஜமான மதுபோதைக்கு அடிமையானால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.