சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மயோன்னைஸ் செய்முறை | Mayonnaise Receipe in Tamil
மயோன்னைஸ் என்பது சாலட், சாண்ட்விச் போன்ற உணவுகளில் மேலை நாடுகளில் அன்றாட பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்தியாவிலும் மக்கள் அனைவரும் இதை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும்கிறது.இதை நாம் வீட்டிலே இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக தயார் செய்லாம் வங்க..
தேவையான பொருட்கள்:
முட்டை – 2
எண்ணெய் – 250 மில்லி லிட்டர்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – ¼ டேபிள் ஸ்பூன்
பூண்டு – 3 பல்
வினிகர் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
சர்க்கரை – ¼ டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் முட்டையின் வெள்ளைக்கரு மஞ்சள் கரு இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளவும் பின் ஒரு மிக்ஸி ஜாரில் தனியாக எடுத்துவைத்த முட்டையின் வெள்ளைக் கரு, மற்றும் சிறிதளவு எண்எணய் செர்த்து பின் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ¼ டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், ¼ டேபிள் ஸ்பூன்சர்க்கரை, தேவைக்கேற்ப உப்பு, அரைத்து எடுத்த 3பல் பூண்டு, 1டீஸ்பூன் வினிகர், சேர்த்து 30 நொடிகள் பல்ஸ் வைத்து அரைக்கவும் பின்பு கெட்டியான பதத்தில் வந்தவுடன் எடுத்தாள் மயோனைஸ் ரெடி.
இதில் வேறுசுவை வேண்டுமெனில் புதினா இலை அல்லது சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்துக்களாம். தயாரான மயோன்னைஸ் கூட பிரேட், சிக்கன் ரேசிபி, சாண்ட்விச் மற்றும் சாலட் போன்றவற்றுடன் செர்த்து பரிமாறலாம். நாம் வீட்டிலே சுலபமாக செய்துவிடக்கூடிய இந்த மயோனிஸ், ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும் மயோனிஸ் காட்டிலும் சுவை அதிகம், அதனால் நாம் கடைகளில் ரசாயனம் கலந்த சாஸ் போன்றவற்றை தவிர்த்து வீட்டில் சமைத்து சப்பிட்டு மகிழவும்.