சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
படத்தில் வருவதுபோல் திருடி படம் எடுத்த திருடன் | Thief Caught In Madurai In Tamil
சென்னை பூ கடை காவல் நிலையத்துக்கு எதிர்புறமாக இருந்த துணி கடை மற்றும் பை கடைகளில் கடந்த 1ம் தேதி 6 லட்சம் ரூபாய் காணாமல் போனது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கடைகளுக்கு சென்று பார்வையிட்டபோது கடைக்கு மேல் கூரையின் வழியாக கடைக்குள் புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் கொள்ளையனை கண்டுபிடிப்பது சிரமம் ஆனது. அக்கம்பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா சோதனை செய்து பார்க்கும்போது அப்போது கையில் ஒரு பையுடன் கடையின் பின் புறத்தில் வந்துள்ளார் அங்கு உள்ள பல அடி உயர சுவரை தாண்டி கூரை மீது ஏறி உள்ளே இறங்கி கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது பிறகு 3 மணி நேரம் கழித்து வெளிய வந்ததும் உறுதியானது அவர் தான் கொள்ளையர் என்று அவர் திருவல்லிக்கேணியில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கு இருந்து ஆட்டோ மூலம் இங்கு வந்ததும் அதன்பின் கண்காணிப்பு கேமரா மூலம் வண்டியின் பதிவு என்னை கண்டுபுடித்தனர் பிறகு சோதனை செய்து பார்த்ததில் அவர் பூக்கடையில் பகுதியில் லாட்ஜ்ல் தங்கியிருந்தது தெரியவந்தது பிறகு லாட்ஜ்க்கு சென்று விசாரித்த போலீசார் கொள்ளையடிப்பதற்காக கடந்த மாதம் 27ம் தேதி அறை எடுத்து தங்கி உள்ளார் அங்கு அவர் கொடுத்த ஆவணங்களை போலீசார் சோதித்து பார்த்தனர் அதை சோதித்தபோது அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஆனந்தன் என்று தெரிய வந்தது இவர் மீது ஒரு கொலை வழக்கு மொத்தம் 30 குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்தது 2013ல் இருந்து இவர் குற்ற வழக்குகள் சுமந்து வந்தார் 4 மாதங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளிய வந்தார் மேலும் லாட்ஜ்ல் அவர் கொடுத்த மொபைல் நம்பர் மற்றும் காரின் fastag மூலம் அவர் மதுரை சென்றது தெரிய வந்தது
பிறகு மதுரை சென்ற போலீசார் அங்கு கொள்ளையடிக்க ஒரு லாட்ஜ்ல் தங்கி இருந்த ஆனந்தனை கைது செய்தனர். இவர் ஊரில் உள்ள பெரிய கடைகளை குறிவைத்து திருடுவது வழக்கம் அதேபோல் எவளோ பெரிய சுவராக இருந்தாலும் அதை தாண்டிவிடுவான் என்பது இவனது சிறப்பம்சம். தனக்காக கொலை செய்தவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களுக்கு செலவு செய்ய பண தேவைபட்டதால் கொள்ளையடித்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் மேலும் அவனிடம் இருந்து 4 லட்சம் பணம் 3 மொபைல், முகமுடி மற்றும் அவனது கார் போன்றவற்றை பறிமுதல் செய்தன்ர் போலீசார் கொள்ளையடித்த பணத்தை வைத்து சொகுசு வாழ்கை மற்றும் பெண்களுடன் நேரம் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்தார் பிறகு சினிமா மீது இருந்த ஆர்வத்தில் ஒரு சினிமா படம் எடுத்து அது பணம் இல்லாமல் பாதியில் கைவிடப்பட்டது.