சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஹரியாணாவில் பயங்கரம்..!டிஎஸ்பி லாரி ஏற்றிக் கொலை..
ஹரியாணாவின் நுஹ் மாவட்டம், தாவடு நகர போலீஸ் டிஎஸ்பி சுரேந்தர் சிங் தலைமையில் சட்டவிரோத சுரங்கங்களை தடுக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டிருந்தது. ஆரவல்லி மலையின் பச்காவ் பகுதியில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக அவருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதை தெடர்ந்து உடனடியாக போலீஸ் படையுடன் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அப்போது கற்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தும் வகையில் போலீஸ் வாகனத்தை டிஎஸ்பி சுரேந்தர் சிங் குறுக்காக நிறுத்தினார்.
போலீஸாரை பார்த்ததும் அதிவேகமாக வந்த லாரி, போலீஸ் வாகனத்தின் மீது மோதி நிற்காமல் சென்றது. லாரி அதிவேகமாக மோத வருவதை பார்த்த ஓட்டுநர் மற்றும் போலீஸ்காரர்கள் வாகனத்தில் இருந்து குதித்து தப்பினர். டிஎஸ்பி சுரேந்தர் சிங் மட்டும் வாகனத்தில் இருந்தார். லாரி மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இதுகுறித்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறும்போது, “டிஎஸ்பி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதில், டிஎஸ்பி மீது லாரி ஏற்றி கொலை செய்த அக்கர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரை பிடிக்க போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.