சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
QR CODE பற்றிய தகவல்கள் தமிழில் |What Is QR CODE In Tamil
QR code என்றால் குயிக் ரெஸ்பான்ஸ் (quick response) என்று அர்த்தம். இது 1994 ஆம் ஆண்டு இதை அறிமுகம் செய்தனர். இதை நாம் பயன்படுத்தும் மொபைல் மூலமாக இதில் இருக்கும் தகவல்களை படிக்க முடியும். இதை நாம் ஸ்கேன் செய்யும்போது நாம் இதன் மூலம் அதிகமான தகவல்கள் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த QR code ஒரு பொருளை அறிவதற்கு, ஒரு தகவலை பாதுகாப்பாக வைப்பதற்கு மேலும் இதை அதற்குரிய இணையத்தளத்தில் கொண்டு சேர்ப்பதற்கு இந்த QR code மிகவும் உதவியாக இருக்கிறது.உதாரணத்துக்கு ஒரு பொருளின் தகவலுக்கு நாம் அறிய வேண்டும் என்றால் அதன் மீது இருக்கும் QR code ஸ்கேன் செய்ய வேண்டும் அப்போது அந்த பொருளின் இணையதளத்துக்கு கொன்டு செல்லும் முழு விவரம் நமது மொபைலில் வரும் மேலும் நமக்கு தேவைப்படும் தகவல்களை அதில் அந்த பொருளின் உற்பத்தி நிலையில் என்ன யுக்திகள் பின்பற்றப்பட்டது இதற்கான செலவுகள் என்று அனைத்தும் இதில் நாம் கணடறிய முடியும்.
தற்போது QR code பயன்பாடு அணைத்து துறைகளிலும் வேகமாக பரவிவருகிறது QR code வருவதற்கு முன்பு அணைத்து பொருளிலும் பார் கோட் முறை அது பார்ப்பதற்கு உயரமான கோடுகள் போன்று இருக்கும் மேலும் அதில் நம்மால் குறைந்த அளவு தகவல்கள் மட்டும் தான் சேமிக்க முடியும் இந்த QR code மூலம் நாம் அதிகப்படியான செய்திகளை சேகரிக்க முடியும் மேலும் தற்போது பணம் பரிவர்த்தனை செய்வதற்கு இந்த QR code முறை மிகவும் உதவியாக உள்ளது இந்த QR code முறை வருவதற்கு முன்பு நாம் நெட் பேங்கிங் செய்வதற்கு நேரம் மற்றும் பல நடைமுறை சிக்கல் இருந்து வந்தன. இந்த QR code மூலம் பண பரிவர்தனை மிகவும் எளிமையாகவும் சீக்கிரமாகவும் முடிந்துவிடுகிறது.
மேலும் இதனால் பல மோசடிகளும் அரங்கேறுகின்றன என்னதான் இந்த QR code அதிக வசதிகள் இருந்தாலும் இதில் தான் அதிக ஆபத்தும் உள்ளது மேலும் இதில் நாம் பண பரிவர்த்தனை செய்யும்போது நாம் எப்போது இதை ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் நாம் வங்கி கணக்கில் பணம் பெறுவதற்கு எந்த ஒரு QR code ஸ்கேன் பண்ண வேண்டியது இல்லை. மேலும் நாம் பணம் செலுத்த வேண்டும் என்றபட்சத்தில் மட்டும் தான் ஸ்\கேன் செய்ய வேண்டும் மேலும் ஸ்கேன் செய்த பின்பு பணம் பெறுபவரிடம் தங்களுடைய வாங்கி கணக்கு தான என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.
சிலர் சைபர் குற்றவாளிகள் சில கடைகளில் அவர்களது QR code வைத்து விட்டுவார்கள் நாம் கவனிக்காமல் பணம் செலுத்தாவிட்டால் கடைக்காரருக்கும் நஷ்டம் மற்றும் பணம் செலுத்தியவர்கும் நஷ்டம். இது பல இடங்களின் பிரச்சனை உண்டாகிறது. மேலும் நாம் தெரியாத எண்ணில் இருந்து அல்லது வேறு எங்கிருந்தாவது QR code ஸ்கேன் செய்யும்போது அதன் நம்பகத்தன்மை பற்றி தெரிந்திருக்க வேண்டும் இது தெரியாத ஒரு கோட் ஆகா இருந்தால் அதை ஸ்கேன் செய்யாமல் இருப்பது நல்லது அதையும் மீறி நாம் செய்தல் நமது மொபைலை ஹேக் செய்வது அல்லது தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து நமது தகவல்களை திருடிவிடுவார்கள். மேலும் நாம் பயன்படுத்தும் ஸ்கேனர் செயலியை கவனமாக சரிபார்த்து பயன்படுத்த வேண்டும் கூகுள் ஸ்டார் அல்லது ஆப்பிள் ஸ்டார் ல் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்யவேண்டும் அது நமது தகவல்களை திருடாமல் இருக்கும். நாம் QR code செய்யும் செயல்கள் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றபோல் நம் பிணம் அல்லது தகவல்களை இழக்க நேரிடும்.