சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மாரடைப்பு ஏற்படாமல் இருக்க செய்யவேண்டியவை..! (How to Prevent Yourself from Heart Attack in Tamil)
இதயத்துக்கு சீரான ஆக்ஸிஜன் ஆனது தவறாமல் கிடைக்க வேண்டும். அது இதயத்துக்கு போகும் ரத்தத்தின் மூலம் கிடைக்கும். அது குறைந்தாலோ அல்லது தடைபட்டாலோ மாரடைப்பு ஏற்படும். அது எவ்வாறு தடைபடுகிறது என்றால்! இதயத்துக்கு போகும் ரத்த குழாய் குறுகலாகம் அது அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் இந்த அடைப்பு ஏற்படும்.
மாரடைப்பின் அறிகுறிகள் நெஞ்சு வழி, அசௌகரியம், உடம்பு சோர்வாக இருக்கும், தலை சுற்றுதல், மயக்கம், கழுத்து மற்றும் முதுகில் வழி ஏற்படும், இரு தோள்பட்டையை வழி ஏற்படும் மூச்சி விடுவதில் சிரமம் ஏற்படும் உணவு எடுத்துக்கொள்ள சிரமமாக இருக்கும். இவ்வாறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இது போன்ற இதயநோய் பாதிப்பு இல்லாமல் இருக்க சில வாழ்கை முறையை பின்பற்ற வேண்டும். அதில் உணவு பழக்கும் முக்கிய பங்கு ஆற்றுகிறது. ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் இதைய நோயில் இருந்து தப்பிக்கலாம். அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் குறிப்பாக எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது அவ்வாறு உணவனுகள் பழங்கள், காய் கறிகள், பால், மீன்கள், பருப்பு வகைகள், தனியவகைகளும். இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவது இதயநோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது. அது மட்டும் இன்றை சில விசயங்களை தவிர்ப்பது மேலும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றன. இனிப்பு சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். மேலும் இனிப்பு கலந்த பானங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், மாமிச உணவுகளை உண்பதை தவிர்பது நல்லது சாப்பிடாமல் இருப்பது இன்னும் சிறந்தது. உடம்பு எடை கூடாமல் இருக்கவும் வேண்டும் நாம் எவளோ கலோரிகள் எடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது சிறந்தது இதை தெரிந்து கொள்ள மருத்துவர் அல்லது ஊட்டசத்து நிபுணர் அறிவுரை கேட்பது நல்லது. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவது முக்கிய காரணம் கொழுப்பு சத்துக்களை அதிகம் உண்பது தான் இதனால் நம் கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் இவ்வாறு நாம் செய்தும் உடல் எடையை குறியாக முடியவில்லை என்றல் மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகள் சாப்பிட்டு உடம்பில் உள்ள கொழுப்பினை குறைக்கலாம்.
ரத்த அழுத்தம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட முக்கிய கரணம். எனவே அதை சீராக வைத்திருக்க வேண்டும் இது உங்கள் வாழ்கை முடக்கும் அளவுக்கு கூட பாதிப்பு ஏற்படுத்தும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர்கள் உடற்பயிற்சி அல்லது யோகா, தியானம் மூலம் சரி செய்யலாம்.
நாள் முழுவதும் உடல் ரீதியான வேலைகள் செய்ய வேண்டும். உடல் உழைப்பு மிக முக்கியம் அது இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரே இடத்தில அமர்ந்து வேலைசெய்பவர்கள் காலை அல்லது மாலை நேரத்தில் உடற்பயிற்சியில் மேற்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இதுநாள் வரையில் செய்யாமல் இருந்தாலும் இனியும் தாமதிக்காமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
மேலும் உடல் ஆரோக்கியமாக இருக்க உடல் எடை சீராக வைத்திருக்க வேண்டும். அது நாம் உடல் உயரம் மற்றும் நாம் உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து அளவை கொண்டு முடிவு செய்ய வேண்டும். அதற்கான மருத்துவரை அணுகி உடல் எடை கூட வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா என்று கேட்டறிவது நல்லது சீரான உடல் எடை நமது இதயத்துக்கு சீரான ரத்தஓட்டத்தை அழிக்கும்.
நீரழிவு நோய் இதயத்தை பாதிக்கும் அதற்கு முக்கிய கரணம் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சத்து, புகை பிடித்தல், உடல் பருமன், உடலுக்கு அதிக வேலை தராமல் இருப்பது இவ்வாறான வாழ்கை முறை நீரழிவு நோய் முக்கியமான கரணம் ஆகும். இதுபோல் இருப்பதாய் தவிர்ப்பது இதைய நோய் தவிர்க்கும்
மனஅழுத்தம் நமக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும் இது சில நேரத்தில் மனிதர்களை பல செயல்களை யோசிக்காமல் செய்ய தூண்டும், அதில் குறிப்பாக சிலர் மது அருந்துவார் அளவுக்கு மீறி புகை பிடிப்பார், இது இதயத்தை கடுமையாக பாதிக்கும்.
மது அருந்துவதை அதிகம் தவிர்க்க வேண்டும் மதுவை அதிகம் அருந்தினால் அதிக ரத்த அழுத்தம், புற்றுநோய், உடல் பருமன், தற்கொலை முயற்சி மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகின்றது. அதனால் அளவுக்கு மீறி மது அருந்துவது தவிர்க்கவும். இதனால் மது அருந்துவதை தவிர்த்திருங்கள். மேலும் புகை புடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் அது மட்டும் இன்றி புகை புடிப்பவர்கள் அருகில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு சில உணவு பழக்கம் மற்றும் சில எளிய முறைகளை பிணைபற்றினால் இதைய நோய் இல்லமல் இருக்கலாம் இதை மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியம்.