சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சூரிய கடவுளுக்கான கோவில் உள்ள இடம்..!(Suriya Kadavul-Sun God Temple in Tamil)
பொதுவாக இந்து சமயத்தில் ஒவ்வொரு சாமிக்கும் ஒரு வழிபாடு தளம் அமைத்து வணங்கி வழிபடுவது இந்து சமயத்தின் முறை. இந்து சமயத்தில் சூரியனையும் தெய்வமாக கருதுகின்றன எனவே இந்து சமயத்தில் சூரியனுக்கும் கோவில் அமைத்து வழிபட்டுவருகின்றன.
நமது நாட்டில் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்னும் இடத்தில் அமைந்துள்ளது சூரியனுக்கான கோவில். பல கோவில்கள் இருந்தாலும். இந்த கோவில் பல சிறப்புகள் பெற்றுள்ளன இது தான் 13ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கோவில் இந்த கோவிலை அமைப்பு தேர் வடிவமாக இருக்கும். அப்போதே இது கலைநயம் மிக கோவிலாக இருக்கும். உதயம், நன்பகல், மாலை ஆகிய 3 சூரிய ஒலிகளின் அமைப்பை வைத்து தான் இந்த கோவில் அமைந்துள்ளது இதில் ஒடிசாவில் இருக்கும் இந்த கோவில் தான் உதய காலத்தில் கட்டப்பட்டது எனவேயே இது தான் முதல் கோவிலாகவும் கருதப்படுகிறது.
இந்த கோவில் தேர் வடிவில் இருப்பதால் இந்த கோவில் அமைப்பில் சில ஆச்சர்யமூட்டும் விசயங்கள் உள்ளது அதில் கோவில் முன்புறத்தில் 7 குதிரைகள் தேரை மூட்டி 24 சக்கரங்களுடன் தேரை இழுத்து செல்வதாக அமைக்கபட்டிருக்கும். அந்த 7 குதிரைகள் வாரத்தில் உள்ள 7 நாட்களையும் குறிக்கிறது 24 சக்கரங்கள் ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை குறிப்பிடுகிறது. மேலும் இந்த கோவிலை காம தேவன் கோவில் என்றும் குறிப்பிடுகின்றன இதில் உள்ள சிற்பங்களில் காமத்தை பற்றிய நிலைகளை துல்லியமாக தத்துரூபமாக செதுக்கிருப்பார்கள் அதை கண்டு காமத்தில் இதனை நிலைகள் இருப்பது அவ்ளோ அழகாக செதுக்கிருப்பார்கள்.
மஹாசப்தமி விழா இந்த கோவிலில் பிப்ரவரி மாதம் நடைபெறும் அந்த கோவிலுக்கு மிக பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். அதற்கு முன்பு டிசம்பர் மாதம் நடன திருவிழா நடக்கும் அது அந்த பகுதியில் ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் என்னும் அணைத்து விதமானகோலாகல திருவிழாவாக இருக்கும்.