சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
குறைந்த செலவில் வீடு கட்டும் முறை (Low Budget House in Tamil)..!
இன்று நமது நாட்டில் வாழும் பெரும்பலானா நடுத்தர மக்களுக்கு சொந்தமாக வீடு கட்டுவது தான் மிக பெரிய கனவு அதை நிறைவேற்றும் விதமாக தற்போது பலவிதமாக வீடுகள் அறிமுகமாகி நமக்கான செலவை குறைத்துள்ளனர். இதன் மூலம் பலர் தனது சொந்த வீட்டுக்கான கனவை நிறைவேற்றியுள்ளார். இது மட்டும் இன்றி சிறிய குடும்பம் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான சிறிய அளவு வீடுகள் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த மாதிரியான வீடு நல்ல ஒரு தேர்வாக இருக்கும்.
தற்போது நாம் பக்க இருக்கும் வீட்டின் பெயர் ஸ்டூடியோ வகை வீடுகள் ஆகும். இந்த வகையான வீடுகள் தான் நமது நாட்டின் கட்டுமான துறையில் பெரிதும் வரவேற்பை பெறப்போகும் வீடாகும். இந்த வீட்டில் 1RK என்னும் முறையில் தான் அமையும் 1RK என்றால் ஒரு படுக்கையறை மற்றும் ஒரு சமையலறை மட்டும் தான் இருக்கும். இது போன்ற வீடுகளில் கழிப்பறை தவிர வேறு எதற்கும் தனிஅறை இருக்காது. மேலும் நமக்கு தேவைப்படும் இடத்தில் சமையல் செய்வதற்கான இடம் மாற்றும் படுபடத்ற்கான இடத்தை தேர்வு செய்து அதுக்கு ஏற்றாற்போல் வாஸ்து சாஸ்தரம் அல்லது நமக்கு தேவைப்படி வடிவமைத்து கொள்ளலாம். இது நிஜ வாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல என்று தோன்றினாலும் அல்லது வெளிநாட்டில் மட்டும்தான் இது சத்தியம் என்று கூறும் மக்கள் இந்த வீட்டின் வடிவமைப்பு மிகவும் குறைந்த இடத்தி மிகவும் துல்லியமாக கணக்கிட்டு அதற்கேற்ப கற்பனைத்திறனுடன் கட்டப்படும் வீடாகும். தற்போது பெரும்நகரங்களில் குடியிருப்புகளை கட்டும்போது இந்த வகையான ஸ்டூடியோ வகை வீடுகளையும் கட்டி விற்பனை செய்து வருகின்றன. இது தற்போது வெகுவாக மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இதன் விலை மிக குறைவாக இருக்கும்.
இந்த வீட்டை விரும்பி வாங்குவோர் தொழிலுக்காக மற்றும் வேலைக்காக நகரத்துக்கு சென்று அங்கு தங்கி இருப்பவர்கள் வரவிடுமுறை அல்லது ஏதானும் பண்டிகை காலத்தில் சொந்த ஊர் செல்பவர்கள் பிழைக்கவந்த இடத்தில் பெரிதும் முதலீடு செய்து சொத்துக்கள் வாங்குவதை தவிர்ப்பார்கள் அதற்கு இது போன்ற குறைந்த இடத்தில குறைந்த செலவில் வீடு கட்டி அதில் குடியிருந்து பிறகு வேலை முடிந்ததும் அதை விற்று சென்றுவிடுவார்கள்.
இதுபேன்ற வீடுகள் கட்டுவதனால் ஏற்படும் சிக்கல் என்னவென்றால் இந்த வீட்டில் முடிந்த அளவுக்கு இருவருக்கு மேல் இருப்பது கடினம் ஏதேனும் விருந்தினர் வந்தால் கூட தங்கி வைப்பது சிரமம். குழந்தைகள் அல்லது செல்ல பிராணிகள் வைத்திருப்பவர்கள் வீடு வசதியாக இருக்காது ஏனென்றால் இது அவர்கள் ஓடி அடி விளையாடுவதற்கு வசதியாக இருக்காது. மேலும் இதில் ஒருவருக்கு மேல் தங்கும்போது அவர்களுக்கின தனி மனித சுதந்திரம் இல்லாமல் போய்விடும் ஏனென்றால் இந்த வகை வீட்டில் அறைகளுக்கு தனி தனி சுவர்கள் இருக்காது இதனால் வீட்டில் ஒருவர் தொலைக்காட்சி பார்த்தாலும் அது மற்றவர்க்கு தொந்தரவாக இருக்கலாம், ரகசிய பேச முடியாது, சமைக்கும்போது வீடு முழுக்க நெடி பரவும் புகை ஏற்பட்டால் வீடு முழுவதும் சுலபமாக பரவிவிடும் இது அங்கு அசௌகரியமாக இருக்கும்.
இது போன்ற வீடுகள் தனிமையில் இருப்பவர்கள், அல்லது நடுத்தர தம்பதிகள், வெளியூரில் தற்காலிகமாக நீண்ட காலம் தங்குபவர்கள் குறிப்பாக வேளைக்கு வெளியூர் வருபவர்கள், தொழிலுக்காக வெளியூர் வருபவர்கள் வீட்டில் அதிகம் பொருள் சேர்க்காதவர்கள் அல்லது சொந்த ஊரில் இருக்கும் தோட்டத்துக்கு சென்று தங்குவது போன்ற மக்களுக்கு இந்த வகை வீடு வசதியாக இருக்கும் அது மட்டும் இன்றி இது குறைந்த செலவில் குறைந்த இடத்தில் கட்டுவது இதுபோன்ற பல நன்மைகள் உள்ளது.
இது போன்ற வீடுகள் இன்னும் கூடிய விரைவில் அணைத்து பகுதிகளிலும் வந்துவிடும் மேலும் ஓர் வீடு கடும் இடத்தை பல இடங்களில் கட்டி வாடகை விடுவதும் நல்ல ஒரு வருமானத்தை ஈட்டாளம்.