சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
வரும்காலத்தில் மனித குளத்தை ஆளப்போகும் அறிவியல் கண்டுபுடிப்புகள்(Scientific Discoveries that will Rule the World)..!
தற்போது மனிதர்கள் இருக்கும் சூழலில் அறிவியல் என்பது ஒரு தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக அமைந்துள்ளது, இன்று அறிவியல் இல்லாமல் உலகமானது இயங்காது என்பது நாம் அனைவரும் அறிந்தது அது மட்டுமின்றி இன்று நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அறிவியல் வளர்ந்து உள்ளது. அது அவர்களுக்கு பெரும் வளர்ச்சியாக இருந்தாலும் சில பின்னடைவுகளும் இருக்கின்றன சில விசியத்தில் மனிதன் கண்டுபிடித்தது மனிதனுக்கு எதிரியாக அமையும் அதில் சில விசியங்கள் நமக்கு குறைந்த அளவு நன்மை தந்தாலும் பெரிதும் ஆபத்தை விளைவிக்கும் உதாரணத்துக்கு போதைப்பொருள் மருத்துவத்தில் பயன்படுத்தினாலும் அது மக்களுக்கு பெரும் பேரழிவை சமுதாயத்துக்கும் நாட்டுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் சில நேரங்களில் மனிதன் கண்டுபுடித்த கண்டுபுடிப்பு மனிதனை வீழ்ந்து நிலைக்கும் வளர்ச்சியா பெறலாம். அவ்வாறு இனி வரும் காலத்தில் மனிதர்கள் கண்டுபிடித்த சில கண்டுபுடிப்புகள் மனிதனை ஆளும். அவ்வாறு இருக்கும் மனிதனின் கண்டுபுடிப்பில் உருவான சில விசியத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருள்களில் இணையம்
தற்போது நாம் ஒருத்தரை தொடர்பு கொள்ளவேண்டும் என்றால் குறைந்தபட்சம் 3 நொடிகளில் ஒருவர் இந்த உலகத்தில் எங்கு இருந்தாலும் நாம் தொடர்பு கொண்ட பேச முடியும். இதற்கு முக்கிய காரணம் நாம் தொழிநுட்ப்ப வளர்ச்சியில் மிகவும் வளர்ந்து உள்ளோம் அதேபோல் நாம் சில விசியங்களை செய்ய தவறி விட்டு வீட்டில் இருந்து கிளம்பி சென்றவுடன் சில விசியங்கள் மறந்து விடுவோம் குறிப்பாக மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றை அணைக்காமல் வந்திருப்போம். அதை நாம் பயணம் செய்யும்போது அதை நாம் கையில் வைத்திருக்கும் அலை பேசி மூலம் அதுக்கு நாம் கட்டளையிடலாம் அதாவது வீட்டில் மின்விசிறி அணைக்க வேண்டும் அல்லது மின்விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது அல்லது மோட்டார் ஓடுகிறது இதுபோன்ற விசியங்களை நாம் கையில் இருக்கும் அலைபேசி மூலம் அதை அணைக்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியும்.
இதுவே சற்று முன்னேற்றம் அடைந்து ஆல் இல்லாத வீட்டில் திருடர்கள் வந்தால் அல்லது சந்தேகப்படும்படி யாராவது வந்தால் அவர்களை அதை தனது உரிமையாளருக்கு புகைப்படம் எடுத்து அனுப்பும். இது எவ்வாறு இருக்கும் என்றால் ஒரு கேமரா வரும் ஒலியை உள்வாங்கி அதை மற்றொரு கேமரா மூலம் படம்பிடித்து அதை உரிமையாளருக்கு அனுப்பும் இது இரு கேமெராக்கள் பேசிக்கொண்டு செய்யப்படுவது தான் பொருளில் இணையம் என்று கூறப்படுகிறது இது இரு பொருட்கள் இணைந்து அதற்குள் கட்டளையிட்டு செயல்படுகிறது. இது அணைத்து வீடுகளிலும் வருவதற்கு தாமதம் அனலும் தற்போது வரும் வாகனங்கள் மாரு வீட்டு உபயோக பொருட்கள் இவைகளில் இந்த வசதி வந்துள்ளது. இது சுற்றி உள்ள சூழலை அறிந்து அதற்கேற்ப கட்டளையிடும் மாற்றும் நமது கட்டளைக்கு செயல்படும்.
முப்பரிமாண அச்சாக்கம்
முப்பரிமாண அச்சாக்கம் என்றால் பலரும் நினைப்பது இது அச்சடிப்பதில் முன்னேறிய தொழிநுட்பம் என்று எண்ணுவார்கள் ஆனால் இது நாம் கொடுக்கும் பொருளுக்கான வடிவத்தை கொடுத்தால் நாம் கொடுக்கு மூலப்பொருளை வைத்து அது அந்த பொருளை வடித்து கொடுக்கும் தற்போது அனைவரும் இணையத்தில் ஒரு காணொளியை பார்த்திருப்பீர்கள் அதில் இந்த முறை பயன்படுத்தி ஒரு வீடு காட்டியதை அனைவரும் அறிவீர். முன்பு நமக்கு ஒரு வடிவத்தில் பொருள் தேவை படும் என்றால் அதற்கான வார்ப்பை வடிவமைத்து அதில் மூலப்பொருளை ஊற்றி ஒரு பொருளை தயாரிப்போம்.
இப்பொது இந்த தொழிநுட்பம் பெரும் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றன அதில் பெரும்பாலான நிறுவனம் எதுவென்றால் விமான உதிரிபாகம், வாகன உதிரிபாகம், மேலும் பாகங்கள் தயாரிக்கும் நிறுவகளில் தபோது பெரிதும் இது பயன்படுத்தப்படுகிறது மேலும் இது சிறு தொழிலுக்கும் பரவலாக பயன்பாட்டிற்கு வருகிறது சிற்ப கலை, மண்பாண்ட கலை, கட்டிட கலை, மரபு சார்ந்த சில கலைகளும் இங்கு மீட்கப்படும் வேறு வடிவமாக. இதனால் இருக்கும் பெரும் பிரச்சனை என்னவென்றால் இது ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்யும் திறன் கொண்டதாகவும் இதற்கான விலையும் சற்று குறைவாக இருப்பதால் இது எதிர்காலத்தில் மனித குலத்துக்கு பெரும் ஆபத்தாக வரலாம் வேலைவாய்பிமை ஏற்படும் மனிதர்கள் இதன் மூலம் பல துறைகளில் வேலை இலக்கும் அபாயம் இருக்கிறது. இதனால் உடல் உழைப்பை மட்டும் இருக்கும் தொழிலாளர்கள் நிலை முன்னெச்சரிக்கையாக வேறு விதமாக பயன்படுத்த பயிற்சி அளித்து பயன்பெற வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு
மனிதனுக்கு இருக்கு நுண் அறிவை நகல் எடுத்து அந்த நுட்பத்தை செயல்படுத்துவது செயற்கை நுண்ணறிவு எனப்படும். ஒரு மனிதன் எவ்வாறு முடிவு எடுப்பார்கள் என்றல் ஒரு சிக்கலை மனிதன் நன்கு உணர்ந்து அதை தனது படிப்பறிவு மற்றும் அனுபவத்தை வைத்து முடிவு எடுப்போம். ஆனால் கணினி 3 உணரிகளை வைத்துள்ளது எழுத்து, தொடு, ஒலி போன்ற உணரிகள் மூலம் அணுகு இலவு இருக்கும் சிக்கலை புரிந்து கொண்டு அதற்கு கொடுத்திருக்கும் தரவுகள் மற்றும் சாயலையும் கொண்டு தந்து முடிவை தேர்ந்தெடுக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு கூறவேண்டும் என்றால் ஒரு வருடத்தில் நடந்திருக்கும் வானிலை அறிக்கை எடுத்து அதில் எப்போதெல்லாம் வருகிறது இல்லை எப்போதுள்ளம் வெயிலின் தாக்கம் அதிகம் வரும் என்று மனிதனின் சிந்தனையில் அது புரிந்துகொள்ளும் மேலும் வரலாற்று தரவுகளை கணினி வகைப்படுத்தி அதன் மூலம் பயிற்றுவித்த செயற்கையான அறிவு தான் செயற்கை நுண்ணறிவு.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் சில பிரிவுகளாக உள்ளது எரித அஞ்சல் கணிப்பு, சதுரங்க விளையாட்டின் வியூகம், கூகிள் விளம்பர பரிந்துரை போன்ற பொறிகள் பயன்படுத்தி சூழலை அறிந்து உடனடி முடிவு எடுப்பவை இதை எதிர்வினை எந்திரங்கள் எண்ணப்படும்.(Reactive Machines)என் என்ற பிரிவை சேரும்
இந்த பிரிவானது கடந்த காலத்தில் நடக்கும் தரவுகள் வைத்து அதன்மூலம் தனது முடிவுகள் எடுக்கும் இது பெரும்பாலும் ஆளில்லாமல் இயங்கும் இயந்திரங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இது (Limited Memory Machines) என்ற பிரிவை சேரும்.
அடுத்த பிரிவு சற்று சுவாரசியமான ஒன்று இது மனிதர்களின் அணைத்து நடத்தையும் கண்காணித்து உணர்வுகள்,மனித குணங்கள், எண்ணங்கள் எல்லாத்தையும் உள்வாங்கி இது செயல்படும் இதை (Theory Of Mind) என்று சொல்வார்கள்.
இறுதியாக இருக்கும் பிரிவானது மனித அறிவுடன் சுய விழிப்புணர்வுடனும், இருக்கும் இயந்திரம் இது (Selfware-AI) என்று கூறுவார் இது தற்போது நடைமுறையில் இல்லையென்றாலும் தற்போது இது சோதனையில் இருக்கிறது கூடிய விரைவில் அதுவும் நடைமுறைக்கும் வந்துவிடும்.
தொடரேடு
நீங்கள் புதிதாக ஒரு வாகனம் வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் முகவரி உள்ள அடையாள அட்டை மாற்றும் தங்களது வங்கி மற்றும் நிதி ஆவணங்களை வாகன விற்பனையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் அதை அவர் பல அமைப்புகளிடம் பகிர்வார் குறிப்பாக காப்பீடு, அரசு, வங்கி அமைப்பிகளில் சமர்ப்பித்து அதை சரிபார்ப்பர். இதுபோல் இல்லாமல் நமது பரிவர்த்தனை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பை வைத்து இருப்பது முடியாத காரணம். மேலும் இந்த தகவல் ஹேக்கிங், அல்லது எந்த ஒரு விதத்தில் கசிந்தாலும் உங்கள் தகவல் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். இதன் பாதுகாப்பு பற்றி தாங்களும் அல்லது விற்பனையாளரும் தான் உறுதி செய்ய வேண்டும் இதுபோல் தகவல்கள் பாதுகாக்க பல சிக்கல்கள் உள்ளது நேர விரையம், மற்றும் செலவுகள் ஏற்படும். இதற்கு மாற்று வழியாக பலரும் சொல்வது தான் ப்ளாக்சைன் இது நாம் கொடுக்கும் தரவுகளின் குருமாற்றி அதை ஒரே இடத்தில சேமிக்காமல் பல இடத்தில சேமித்து வைப்பதால் யாரும் முறை இல்லாமல் இந்த தரவுகளை எடுக்க முடியாது.
இதற்கு முன்பு இந்த முறை முதல்முறையாக மறை நாணயங்களில் (bitcoin) பயன்படுத்தினர். ஆனால் தற்போது இது பெரும்பாலான துறைகளில் பயன்படுத்தி வருகிறது. இது அரசு துறைகளில் நிதி மாற்று சட்ட ஆவணங்களை பாதுகாக்க இந்த முறை பயன்படுத்த படுகிறது சொத்து பரிமாற்றம், வரி முறைகேடுகளை, வங்கி சேவை, மருத்துவம், காப்பீடு, தொலைத்தொடர்பு துறை, ஊடகம், உற்பத்தி துறை போன்ற பல துறைகளில் இது பயன்படுத்துகிறது.
எந்த ஒரு தொழில்நுட்பமாக இருந்தாலும் அது மனிதன் கன்டுபிடித்தது அது மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை தவறில்லை என்று மனிதனின் கட்டுப்பாட்டை மீறுகிறதோ அப்போது தான் ஆபத்து.