சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
நேரம் மேலாண்மை | Time Management in Tamil
நேரம் காலம் என்று எப்படி வேண்டுமாலும் குறிப்பிடலாம் ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம். நேரம் எதற்காகவும் யாருக்காகவும் நிற்காது அதை தேவை இல்லாமல் வீணடிப்பது என்பது இங்கு பலரும் தெரியாமல் செய்யும் ஒரு செயல் நேரத்தின் முக்கியத்துவத்தை அறியாத பலர் பல வாய்ப்புகளை இழக்கிறார்கள், வேலைகளை பறிகொடுக்கிறார்கள், பரீட்சை எழுத முடியாமல் வாழ்க்கையை தொலைக்கிறார்கள், உச்சபட்சமாக உயிரை விட்டவர்களுக்கு உண்டு இது பெரிய தவறாக யாருக்கும் தெரியாது உணரவும் மாட்டார்கள் நாம் செய்த காலதாமதம் தான் இந்த சூழலுக்கு கரணம் என்று தெரியாமல் மீண்டும் அதே தவறை செய்வார்கள்.
காலதாமதம் என்பது ஒரு சிறிய விசயமாக இருக்கலாம் ஆனால் அது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் உதாரணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு குரூப் 4 தேர்வு நடந்தது அதில் 5 நிமிடம் தாமதமாக வந்த தேர்வர்கள் வந்ததால் அவர்களை எழுத அனுமதிக்கவில்லை ஆனால் அங்கு நடந்ததோ வேறு இவர்கள் செய்த தப்புக்கு அங்கு இருந்த அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் அந்த இடத்துக்கு காவலர்கள் வந்து கூட்டத்தை கலைத்தது அனைவரும் அறிந்தது இது பெரும்பாலும் செய்திகளில் வெளியானது.
இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விசியம் என்னவென்றால் தாமதாக வந்தது தேர்வெழுத வந்தவர்களின் தவறு இதை உணராமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பதுதான் வேதனையான செய்தி. இதை அனைவரும் உணர்ந்து இனிமேல் நேரத்தினை எவ்வாறு பயனுள்ள வகையில் செலவிடுவது என்று தெரிந்து தெளிவாக செயல்படுங்கள்.
மேலும் நேரத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்று இனி வரும் கட்டுரையில் பார்ப்போம்
குறிப்பு எடுத்தால்
நாம் பெரிதும் நேரத்தை எதில் செலவு செய்கிறோம் தேவை இல்லாத வேலைகளை எது செய்கிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முக்கிய வேலையாக நாம் செய்ய வேண்டியது குறிப்பு எடுப்பது நாம் என்ன செயல்கள் செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என்று நாம் செயல்பாடுகள் நாமே குறித்து வைத்து கொள்ளலாம் ஒரு வாரத்துக்கு குறித்து வைக்க வேண்டும். அதாவது காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை என்னென்ன வேலைகள் மேற்கொண்டோம் எவளோ நேரம் எடுத்துக்கொண்டோம் என்று தெளிவாக குறித்துக்கொள்ள வேண்டும் இது நாம் அடுத்த அடி எடுத்து வைக்க மிகவும் உதவியாக இருக்கும்
கால அட்டவணை
முன்பு எடுத்து வைத்த குறிப்புகளை வைத்து அதில் நாம் இதில் அதிகமாக நேரத்தை செலவு செய்துள்ளோம் என்று கவனிக்க வேண்டும் மேலும் ஆய்வுகள் கூறுவது என்னவென்றால் ஒரு நாளைக்கு மனிதன் தனது மொபைலில் 3 முதல் 4 மணிநேரம் வரை தேவை இல்லாமல் நேரத்தை சமுக வலைத்தளத்தில் செலவிடுகிறார்கள் என்று தெரியவருகிறது, இது உங்களுக்கும் தெரியவேண்டும் என்றால் இந்த கால அட்டவணை உதவியாக இருக்கும்.
மேலும் நீங்கள் உருவாக்கிய கால அட்டவணையில் நாம் எந்த வேலையை செய்வதற்கு அதிக நேரத்தை எடுக்கிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு கால அட்டவணை மிகவும் உதவியாக இருக்கும்
திட்டமிடுதல்
நேரமேலாண்மைக்கு மிகவும் முக்கியமான விசியம் இந்த திட்டமிடுதல் நாம் உருவாகியுள்ள கால அட்டவணை வைத்து சில திட்டத்தை தீட்டா வேண்டும். மேலும் நாம் செய்ய வேண்டிய வேலையை ஒரு நாள் முன்னதாக திட்டமிட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு திட்டமிட்டு குறித்துக்கொள்ள வேண்டும் பிறகு நாம் அந்த வேலையை செய்து முடித்தபின் அதை பேனாவில் அடிக்கவேண்டும் இது நமக்கு ஒரு விதமான மனநிறைவை தரும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதேபோல் நாம் செய்யும் வேலையை வகைப்படுத்தி கொள்ளலாம். அவசரமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்யவேண்டும் பொறுமையாக செய்யக்கூடிய வேலையை இறுதியாக மேற்கொள்வதில் தவறில்லை ஆனால் செய்து முடிக்க வேண்டும் மேலும் திட்டமிடுதலை சரியாகவும் துல்லியமாகவும் செய்தால் திட்டமிட்ட பனி சரியாக நடக்கும்
சோம்பேறித்தனம்
இது காலதாமதத்துக்கு முக்கிய கரணம் இந்த சோம்பேறித்தனம் இன்று வளர்ந்து வரும் தொழிநுட்பத்தில் அனைத்தும் எளிமையாக கிடைப்பதால் சோம்பேறித்தனம் அதிகரித்துள்ளது. மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை செய்துவிட்டு இந்த சோம்பேறித்தனத்தை மீறி வந்தால் தான் அடுத்த படியை எடுத்துவைக்க முடியும் அதுமட்டும் இன்றி இந்த சோம்பேறித்தனத்தால் கவனச்சிதறல் ஏற்ப்பட வாய்ப்புள்ளது குறிப்பாக ஒரு வேலை செய்யும் பொது சுறுசுறுப்பாக இல்லாமல் சோம்பலுடன் செய்தல் அது அவர்களுக்கு அந்த பணியில் பெரிதும் நாட்டம் இல்லாமல் செய்வார்கள் இதனால் அவர்கள் ரொம்ப நேரம் ஒரே விசியத்தை கவனச்சிதறல் ஏற்படலாம் இதனால் அவர்கள் குறித்து வைத்த பணியை குறித்த நேர்தத்தில் பண்ண முடியாது இதனால் தாமதம் ஏற்படும்.
உறுதித்தன்மை
ஒரு வேலை செய்ய தொடங்கிவிட்டால் அதில் இருந்து பின்வாங்காமல் எந்த ஒரு தடை வந்தாலும் அதை மீறி தான் செய்ய நினைத்த காரியத்தை செய்துமுடிக்க வேண்டும், இவ்வாறு செய்யாமல் வேறு வேலை செய்து கொண்டு இருந்தால் இது தடை படும் இதனால் நாம் திட்டமிட்ட பனி குறித்த நேரத்தில் முடிக்க முடியாது மேலும் அடுத்த வேலை செய்வதும் கடினம். எனவே உறுதியோடு செயல்படுவது நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.
செய்யும் வேலை
நாம் ஒரு வேலையே செய்யும்போது அதை நாம் முழு ஈடுபாடுடன் செய்ய வேண்டும் அதில் கிடைக்கும் பலன் நமக்கு மனநிறைவும் தரும் மேலும் ஈடுபாடு இல்லாமல் இஷ்டத்துக்கு செய்வது அதை முடிக்காமல் மற்றொரு வேலையை செய்வது இது இவர்கள் செய்ய இருந்த வேலையை முடிக்க முடியாமல் போய்விடும்.
மேற்கூறியவாறு தங்களது நேரத்தை பயனுள்ளதாக செலவழித்தால் உங்களது பணியிலும் மற்றும் சிறந்து விளங்குவர். மேலும் ஒரு நாள் பயனுள்ளதாக இருக்கும் அதிகப்படியான வேலைகளை மேற்கொள்ளலாம். இதில் முக்கியமான சமாச்சாரம் என்னவென்றால் இன்று நாம் எதை இழந்தாலும் திரும்ப பெறமுடியும் பணம், நகை, போன்றவற்றை, ஆனால் நேரம் போனால் திரும்பவராது. எனவே, இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக செலவு செய்யுங்கள்.