சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சியா விதைகளின் நன்மைகள் | Benefits of Chia Seeds in Tamil
சியா விதைகள் தற்போது பரவலாக கிடைக்கிறது இது பெரிதும் பழசாறு கடைகளில் கிடைக்கிறது இது பெரிதும் ஜூஸ் கடைகளில் போடு தருவார்கள். இந்த விதையை நேரடியாக உபயோகிக்க கூடாது இதை தண்ணீரில் போட்டு ஊறவைத்து பிறகு தான் உபயோகிக்க வேண்டும். பார்ப்பதற்கு சிறியதாக உள்ள இந்த விதைகள் நாம் உடலுக்கும் மனதிற்கும் பெரிதும் நன்மை தருகின்றன. இந்த விதைகளால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று பார்ப்போம்.
நீர்சத்து நிரம்பியது
சியா விதைகளில் அதிகப்படியான நீர்சத்து நிறைந்துள்ளது சுமார் 92% உள்ளது விதைகளில் அதிக நார்சத்து உள்ள விதை என்றல் அது சியா விதை தான். இது எளிதில் கரையும் தன்மை உடையது. இது நாம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாகளுக்கு உணவாக இருக்கிறது. இதனால் இது குடல்களுக்கு நல்லது.
இதயத்துக்கு நல்லது
இந்த சியா விதையை நாம் தினமும் சாப்பிட்டால் இதைய நோய் வராது மேலும் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்துவிடும். உடலில் உள்ளுறுப்புகளில் வீக்கம் ஏற்பட்டால் இந்த விதைகள் பலன்தரும். இது இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பதால் இது சக்கரைநோய் வராமல் பாதுகாக்கிறது. இது உடலுக்கு நன்மை தரும் (HDL) கொழுப்பை அதிகரிக்கும்
எலும்புகளுக்கும் வலிமை சேர்க்கும்
சிலர் பால், தயிர், நெய் போன்ற பால் உணவுகளை தவிர்ப்பார்கள் இதனால் அவர்களுக்கு கிடைக்கும் கால்சியம் சத்துக்கள் பெறமுடியாது. இதனால் இவர்கள் சியா விதைகள் சாப்பிட்டால் கால்சியம், புரதம், மேக்னேசியும் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் பால் பொருட்களை தவிர்ப்பவர்கள் சியா விதைகளை சாப்பிடலாம்.
ஆன்டி ஆக்ஸிடென்ட்
இந்த சியா விதைகள் மனிதஉடலில் ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. அதாவது நாம் உடலில் உள்ள செல்களை பாதிக்கக்கூடிய கிருமிகளை இந்த சியா விதை அளிக்கின்றது. மேலும் இது முதிர்ச்சியை தடுக்கிறது.
புரதசத்து
சிலருக்கு இரவு நேரங்களில் பசி ஏற்படும் இதனால் இவர்கள் நடுஇரவில் உடலுக்கு சேராத நொறுக்கு தீனி உண்பார்கள் இதனால் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் இதை தவிர்க்க சியா விதைகளை சாப்பிடலாம் எதற்கென்றால் இதில் உயர்த்தரமான புரதம் உள்ளதால் இதை நாம் சாப்பிட்டால் நமக்கு பசி உணர்வு கட்டுப்படுகிறது. இதனால் இரவு நேரம் பசிக்காது.
ஊட்டச்சத்து அதிகம் உள்ளது
இந்த சியா விதைகளில் அதிக படியான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து உள்ளது, அதாவது ஒரு அவுன்ஸ் சியா விதைகள் எடுத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் என்னவென்றால் 11 கிராம் நார்சத்து, 4 கிராம் புரதம், 5 கிராம் ஒமேகா3 ஆகியவை நிரம்பி உள்ளது. இது தவிர கால்சியம், மேக்னேஷியும், பாஸ்பரஸ்எ ஆகியவை உண்டு மேலும் இதில் 137 கலோரிகளும் உள்ளது. இதுபோல் இந்த விதைகளில் அதிகமான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன.
உடல் எடையை குறைக்க உதவும்
இந்த விதைகளில் அதிகப்படியான நார்சத்து மற்றும் புரதசத்து நிறைந்து இருப்பதால் இதை நாம் சாப்பிட்டால் நமக்கு பசி அதிகமாக எடுக்காது இதனால் நாம் உண்ணும் உணவின் அளவு குறையும் இதனால் நமது உடல் எடையும் குறியும்.
ஒமேகா 3
மேலும் இந்த விதைகளில் ஒமேகா 3 மாற்று ஆசிட்கள் இருப்பதால் இது இறைச்சிகள் சாப்பிடுவதால் கிடைக்கும் இந்த சத்துக்கள் இதிலும் கிடைக்கிறது. பெரிதும் மாமிசம் சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் இதை சாப்பிட்டு அந்த சத்துக்களை பெறலாம், இது இறைச்சிகளில் கிடைக்கும் அளவுக்கு இதில் கிடைக்காது என்றாலும் உடலுக்கு நல்லது.
குளிர்ச்சி
பெரும்பாலும் கோடை காலத்தில் நம் உடலில் உள்ள நீர் வேர்வை மற்றும் பலவழிகளில் வெளியேறிக்கொண்டே இருக்கும் இதனால் நாம் உடம்பில் நீர்சத்து குறைந்துவிடும் மேலும் உடல் சூடுபிடித்துவிடும் இதனால் நமக்கு குளிர்ச்சி தேவைப்படும் இதற்கு நமக்கு பலவழி இருந்தாலும் இனி சியா விதைகளும் அதில் ஒன்றாகும் இந்த விதைகள் குளிர்ச்சி தரக்கூடியது எனவே தான் இதை வெயில்காலத்தில் குளிர்பானத்தில் கலந்து தருவர்கள்.
மேலும் இந்த சியா விதைகளில் இதுபோன்ற பல நன்மைகள் இருக்கின்றன இதனால் தங்களது உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகளை உடைக்கும் உடல் உபாதைகள் ஏற்படாத விதத்தில் நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள்.