சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தமிழ் ஊக்கமளிக்கும் பொன்மொழிகள் | Tamil Motivational Quotes
நமது நாட்டில் பொன்மொழிகள் என்பது பெரும் தலைவர்கள், அறிஞர்கள், பெரியவர்கள் தங்களது அனுபவத்தில் கூறிய வார்த்தைகள். பின்னாளில் அது பெரும்பாலானோருக்கு அது ஊக்கமாக இருக்கும் இது வாழ்வில் பெரும்தோல்வி சந்தித்தவர்கள், படிப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், வேலை கிடைக்காமல் இருப்பவர்கள், இதுபோன்று வாழ்க்கையில் பெரிதும் சோகத்தில் அல்லது எந்த முன்னேற்றமும் இன்றி இருப்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் எதாவது மற்றம் வேண்டி காத்திருப்பார்கள் அவர்களுக்குள் ஒரு உந்துதலாக இந்த பொன்மொழிகள் இருக்கும்.
என்ன நடந்து விடுமோ என்று யோசித்து இருப்பதை விட மோதி பாருங்கள் எழுந்தாள் வெற்றி விழுந்தால் அனுபவம்
ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் பகுதியாகும்
நம்பிக்கை வெறியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் தான் வரும்
செய்து முடிப்பவன் கைதட்டல் வாங்குகிறான் செய்ய முடியாதவன் கைதட்டுகிறான்.
விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு இல்லை.
சில நேரங்களில் குள்ள நரிகளின் தந்திரம் தேவைப்படும் குழி தோண்டுவதற்கு அல்ல குழியில் விழாமல் இருக்க
உன் பார்வையும் சிந்தனையும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் உன் வாழ்கை பெரிய உயரத்தை அடையும்.
பல பிரச்னைகளை எதிர்கொள்பவனை பார்த்தால் தோல்வியே துவண்டுபோய்விடும்
நாம் தேடலில் தொலைக்க கூடாத இரண்டு விசியம் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி
எதிர்த்து பேசவும் கற்றுக்கொள்ளுங்கள் அப்போது தான் நாம் பக்கம் நியாயம் இருப்பது தெரியும்
வாழ வழியில்லை என்று பொழம்பாதீர்கள் நீங்கள் போகும் பாதை தான் வாழ்கை என்று மறைத்து விடாதீர்கள்.
விரும்பியதை அடைய போராட வேண்டியிருக்கும், உங்களது போராட்டம் தான் நீங்கள் விரும்பியதின் மதிப்பை அதிகரிக்கும்.
முயற்சி இருப்பதால் தான் மனிதன் மனிதனாக இருக்கிறான் இல்லையென்றால் பரிணாமவளர்ச்சி அடையாமலே இருந்திருப்பான்.
நான் தடுக்கி விந்தாலும் தூக்கிவிட யாரும் தேவை இல்லை எனக்குள் ஒருத்தன் இருக்கிறான் அவன் தான் தன்னம்பிக்கை
மற்றவர்களை கீழே தள்ளிவிடுவதில் நாம் வலிமை ஆவதில்லை பிறரை மேலே தூக்கி விடுவதில் தான் வலிமை பெறுகிறோம்