சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Good Morning Quotes in Tamil | காலை வணக்கம் மேற்கொள்கள்
இந்த காலை வணக்கம் மேற்கொள்கள் மூலம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், பெரியவர் முதல் சிரியவர்கள் வரையுள்ள அனைவரும் காலை பொழுதின் வாழ்த்துக்களை சொல்ல முடியும்.
இந்த காலை வணக்கம் மேற்கொள்கள் உங்களது காலை பொழுதை இனிமையாக தொடங்கவும் மேலும் உற்சாகத்தையும், மனதைரியத்தையும் தரும்.
- எண்ணமும் செயலும் ஒன்றிணைந்தால் உன் வெற்றியை தடை செய்ய யாருமில்லை!
- அவர் சொன்னார்! இவர் சொன்னார் என்பதெல்லாம் போதும். உம் மனம் சொல்வதென்ன என்று சற்று நின்று கேள்!
- முடிவு என எதுவும் இங்கில்லை; வாழ்வின் பக்கங்களில் முற்றுப்புள்ளி விழலாம், ஆனால் நம்பிக்கையோடு மீண்டும் சில புள்ளிகளை வையுங்கள் முற்று தொடர்ச்சி ஆகிவிடும்!
- ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் தான் உங்களை உயர்த்தும்! இனிய காலை வணக்கம்!
- உனக்கான நேரம் உன்னை நோக்கி வருமெனக் காலம் கடத்துவதை விட கிடைக்கும் நேரத்தை உனக்கானதாக மாற்றிக் கொள் செவ்வனே நடக்கும் உன் வேலைகள்
- துன்பங்களை அனுபவித்த காலங்களை மறந்துவிடுங்கள் ஆனால், அது கற்றுக் கொடுத்த பாடத்தை மறந்து விடாதீர்கள்
- வென்றவனுக்கும், தோற்றவனுக்கும் வரலாறு உண்டு விமர்சித்தவனுக்கும், வேடிக்கை பார்த்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது!
- வேகத்தால் எதையும் சாதிக்க முடியாது! விவேகத்தால் வாழ்வில் நிறைய சாதிக்கலாம்!
- நம் இலக்கும், எல்லையும் எதுவென்று நம் மனதிற்கு தெரியும் போது, அடுத்தவர்களின் விமர்சனத்தைப்பற்றிய கவலை நமக்கெதற்கு… இனிய காலை
- தேரோட்டம்! கவலைகள் சின்ன பனி மூட்டம், அது சூரிய ஒளி பட்டு மறையட்டும் இனிய காலை வணக்கம்!
- வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல! எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே! இனிய காலை வணக்கம்!
- வெற்றி தோல்வியைக் கண்டு வீண்பேச்சு பேசாமல், உன் இலக்கில் மட்டும் கவனம் செலுத்து. மாபெரும் வெற்றிக்கு உரியவன் நீயாவாய்!
- உங்களிடம் போதுமான அளவு தைரியம் இருந்தால், எதுவும் சாத்தியமே!
- உன் இலக்கு ஒன்றை மட்டுமே நினைவில் வைத்துப் பயணம் செய்! வழியில் இருக்கும் கருங்கல்லும் கரைந்து உனக்கு வழிவிடும்!
- அனைத்திற்கும் ஆசைப்படு! அதை அடைய, அயராது பாடுபடு!
- உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது, நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ, அங்கேயேகூட இருக்கலாம்
- எருமை போல் இருக்கட்டும், உங்களது நம்பிக்கை. எது நடந்தாலும் அசையாது, அசராது, அமைதியாக, ஆழமாக!
- சென்று கொண்டிருப்பவன், காலத்தை வென்று கொண்டிருக்கிறான். நின்று கொண்டிருப்பவன், காலத்தை தின்று கொண்டிருக்கிறான்!
- என்ன வாழ்க்கை? என்ற எண்ணம் மாற, கிடைத்த வாழ்க்கையை நமதாக்கி, இன்பச் சிறகினில் பறப்போம்! சொர்க்கமும் நம்மைக் கண்டு வியக்கும்!
- உன் கஷ்டத்தின் போது உன்னைகை விட்டவர்களுக்கு நன்றி சொல். அவர்கள் கை விட்டதால் தான் உன்னையே நீ அடையாளம் கண்டு கொண்டாய்.
- துரோகம், அவமானம் இவற்றிற்கு பிறகும் வாழ்ந்து காட்டுவதே, ஆகச் சிறந்த பழிவாங்குதல்!
- உங்களிடம் போதுமான அளவு தைரியம் இருந்தால், எதுவும் சாத்தியமே!
- காலம் என்றுமே உனக்காக நிற்காது. நீ தான் காலத்திற்கு தகுந்த மாதிரி, உன்னுள் மாற்றத்தை வெளிக்கொணர வேண்டும்.
- விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு!
- முடியாது என்று முடங்கி விட்டால் வேதனை. முடியும் என்று எழுந்து விட்டால் சாதனை! காலை வணக்கம்!
- கோபப்படுபவர்களிடம் பழகிப் பாருங்கள்! நேர்மையும், உண்மையும், அன்பும் எப்படி என்பதை கற்றுக் கொள்ளலாம்!
- தோல்வி தான் பல வெற்றிகளுக்குத் தாய்!
- பூக்களைப் பார்த்து, புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள் ஒரு நாளில் வாடிவிடும் என்று தெரிந்தும் அழகாக பூத்து மணம் பரப்புகின்றதே!
- இதழ் நனைக்கும் தேநீர், இமை நனைக்கும் பனி, தேகம் நனைக்கும் தென்றல், இவைகள் சொல்லும் தினம் தினம்!
- இன்றைய நாளில், இதயம் பதித்து, நாளைய நாளை நினைத்துப் பார்க்காது, நினைத்ததை செய்யத்தொடங்கு. நிகழ இருப்பவை உன்னை வழிநடத்தும்!
- இரவு போய் பகல் வந்தால் தான் விடிவு! அதுபோல தான், இன்பம் போய் துன்பமும், துன்பம் போய் இன்பமும் வந்தால் தான் விடிவு!
- நாம் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல, நம்மையே நாம் செதுக்கி கொண்டு வாழ்வதே வாழ்க்கை!
- தவறுகள் – நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பதற்கான சான்று.
- ஒரு வழியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புதிதாக ஒன்றை உருவாக்குங்கள்.
- விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான், விருட்சங்கள் மேல்நோக்கி வளரும்! விழும்போது விதையென விழு, விருட்சமாய் எழு!
- இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும்! ஆனால், வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்!
- நீங்கள் முயற்சித்து தோல்வியடைந்தால் வாழ்த்துகள்! ஏனென்றால் பலர் அதை முயற்சிப்பது கூட இல்லை!
- உன் காயத்தை வெற்றியின் கதவுகளாக பார்! நீ உணரும் வலிகளை அதில் செல்லும் வழிகளாக பார்!
- விதியையே மாற்றும் கருவி, அது உன்னிடம் தான் உள்ளது, விடாமுயற்சி என்ற பெயரில்!
- கலங்கிய நீரும், குழம்பிய மனமும் ஒரு நாள் தெளிந்தே தீரும்! கவலை வேண்டாம், இதுவும் கடந்து போகும்!
- அனைத்தையும் இழந்தபோதும், புன்னகை பூத்திருக்கு! மீள்வோமென்ற நம்பிக்கையில்!