சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Death Quotes in Tamil | மரண மேற்கோள்கள்
இறப்பு என்பது உயிரினங்களின் உயிர் பிரிந்து மரணம் அடைவதைக் கூறிக்கும். மரணமானது உயிரினங்களின் முடிவாகும்.
மேலும் மனிதர்களின் இறப்பு என்பது பொதுவாக சோகமான நிகழ்வை அழிக்கிறது. இறப்புக்குப் பின்னர் உயிரினங்களின் உடல் சிதைவடைந்து கான படுவதால் அதனை நாம் அடக்கம் செய்து வருகிறோம்.
இறப்புகான காரணங்கள் வயது முதுமையடைதல், விபத்துக்கள், நோய் பாதிப்பு, தற்கொலை, கொலை மற்றும் போரினால் மரணம் போன்றவையே ஆகும்.
இறப்பினால் மனிதர்களிடையே பாசம், சமூகம் மற்றும் குடும்ப உறவுகளை பிரிவதனால் அவர்கள் மண வேதனை அடைகிறார்கள். உறவுகள் முறிவு ஏற்படுவதனால் கவலைக்கடமான சூலால் நிலவுகிறது.
- ஒருவரையொருவர் உண்மையாக, அழமாக நேசித்திருப்பவர்களே, தங்கள் அன்பானவர்களின் இழப்பை நேர்த்தியாகக் கையாளுவர்
- மரணம்தான் உயர்ந்த ஓய்வுநிலை வாழ்க்கை நகர வேண்டுமெனில் அதற்கு குறிப்பிட்ட அளவு பதட்டம் தேவைப்படுகிறது
- மரணம் வாழ்க்கையின் இறுதிப் பரிசு பொறாமை வரவழைக்காத பொக்கிஷம் விடை இல்லாத விந்தை வினா வெல்ல முடியாத எதிரி எல்லா வகை கர்வத்தையும் சுக்கு நூறாக மாற்றும் சூட்சுமம்
- வேண்டாம் என்று விலகி சென்ற நான் தான் அவள் கல்லறையின் அருகில் துணையாக அமர்கிறேன்
- யாரும் பயந்துவிடாதீர்கள் பயம் கொள்வதால் விட்டா செல்கிறது மரணம் விட்டு செல்லுங்கள் மரணத்தை துணிவிருந்தால் வந்து நம்மை பெற்றுக் கொள்ளட்டும் மரணம்
- மனிதன் இறுதியாக-இறப்பதற்கு இடையில், மனதால் பல முறை-இறந்து விடுகிறான், சில நேரம்-சில மனிதர்களால் சில நேரம்-சில மாற்றங்களால்
- எதிர்பாராமல் எதிர் பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் வருவது தான் மரணம்
- வாழ்க்கை சொல்லி தரும் பாடம் முழுமையாய் படிக்கும் முன்னரே வந்து விடுகிறது புத்தகத்தின் கடைசி பக்கம் கடைசி வரியினை வாசிக்கும் நொடியிலே அச்சம் ஒன்று மனத்தை ஆட்கொள்ள அதற்கான காரணம் அறியும் முன்னரே மூச்சு நின்று போகிறது
- முகங்களை மாற்றி மாற்றி என்னை வதைத்தவர்களை விட்டு பிரிகிற மகிழ்ச்சி எனக்கு துரோகத்தின் நிழல்களிலிருந்து விடைபெற்ற மகிழ்ச்சி எதிர்பார்ப்புகளை மட்டுமே தாங்கி வந்த உறவுகளைப் பிரிந்த மகிழ்ச்சி மரணம் என் மீது கவிழ்வது குறித்து நான் உணர்வது சிறகடித்துப் பறத்தலை
- நிச்சயம் ஒரு நாள் இந்த ஏமாற்றங்களும் ஏக்கங்களும் இல்லாமல் நிம்மதியாய் தூங்குவேன் எனமு கல்லறையில்
- தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகந்தையில் வாழ்ந்தவரும் வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும் தருணம் அது தான் மரணம்
- ஆயிரம் ஜனனம் சொல்லாத கடிணமான வாழ்வின் ரகசியத்தை ஒரு மரணம் சொல்லிவிட்டு செல்கிறது
- நினைவில் வைத்து கனவில் காண்பது அல்ல நட்பு, மனதில் வைத்து மரணம் வரை புதைப்பதுதான் நட்பு