சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மாவீரன் கர்ணனின் தத்துவங்கள் | Karnan Quotes In Tamil
காரணன் என்பவர் மகாபாரத காப்பியத்தில் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஆகும். இவர் அங்கா என்னும் நாட்டுக்கு மன்னராக இருந்தார் என்று காப்பியத்தில் கூறப்படுகிறது. இவரை போரில் யாராலும் வீழ்த்த முடியாது என்று கிருஷ்ணர் உரைத்திருப்பார். மேலும் இவர் சூரியன் மாற்றும் குந்தி தேவி ஆகியோரின் மகனாவார். இந்த கதைப்படி இவர் துரியோதனனின் நெருங்கிய நண்பர் என்றும் கூறுகின்றன. கர்ணன் அவரது வாழ்க்கை முழுவதும் துரதிஷ்டத்துக்கு எதிராக போராடினார் மேலும் அவர் எல்லா நேரத்திலும் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார், அவர் தனது கொடை மற்றும் வீரத்துக்காக இன்றளவும் போற்றப்படுவார். தற்போது மாவீரன் கர்ணனின் தத்துவங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.
- பலர் பலவாறு அவதூறு பேசினாலும் கவலை கொள்ளாதே, எடுத்த முயற்சியிலிருந்து மாறாமல் பயணம் இலக்கை எட்டிவிடலாம்.
- அவமானங்கள் உன்னை நிலைகுலைய வைக்கலாம் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம், ஆனால் இது நிரந்தரம் அல்ல, இதுவும் கடந்து போகும் என்பதை மறவாதே.
- வாழ்வில் வலிகளை அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள் சிறந்ததாகவே இருக்கும்.
- நிலை என்று ஒன்றுமே இல்லை இவ்வுலகில் ஒவ்வொரு சோகமும் துன்பமும் வாழ்க்கையில் பாடத்தை கற்று தரவே வருகின்றது.
- தன் உறவுகளை கொண்டாட சுதந்திரம் இல்லை தன் திறமைகளை வெளிப்படுத்த சுதந்திரம் இல்லை, மற்றவர்களுக்காகவே வாழ்ந்தான் எனினும் நெஞ்சங்களை போரின்றி வென்றான் கர்ணன்.
- நட்பு, வீரம், தியாகம், தானம், தர்மத்துக்கும் புது இலக்கணம் வகுத்தவன், பிறந்தது முதல் மடியும் வரை தன் திறமையை இத உலகிற்கு சொல்ல துடித்தவன் கர்ணன்.
- ஆயிரம் நன்மைகள் செய்திருந்தாலும் நீங்கள் புரிந்த ஒரு தவறினை மட்டுமே சுட்டி கடும் உலகம் இது ஆகையால் எதிலும் கவனம் தேவை.
- தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல், துந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை.
- தர்மத்துக்கு எதிரான அணியில் இருந்த போதும் இவ்வுலகில் கர்ணன் வெறுத்தவர் உண்டோ,
- ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை.