சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
லெனினின் தத்துவங்கள் | Lenin Quotes In Tamil 
லெனின் தத்துவங்கள் பற்றி நாம் பார்ப்பதற்கு முன் அவரின் சில சிறப்புகள் பற்றி இதில் பார்க்கலாம். இவர் 22 ஏப்ரல் 1870 ஆம் ஆண்டு பிறந்து 21 ஜனவரி 1924 ஆம் ஆண்டு இறந்தார். இவர் ஒரு புரட்சியாளர் இவர் போல்செவிக் கட்சியின் தலைவர். அதுமட்டுமின்றி இவர் சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராவார். லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவனரும் இவர் தான். சர்வாதிகாரத்தில் இருந்த ரஷ்யா நாட்டு மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு கம்யூனிசம் சித்தாந்தம் மூலம் வெற்றியும் கண்டார். இவரை சிலர் ரஷ்யா மட்டுமின்றி இந்த உலகத்துக்கே கிடைத்த பொக்கிஷம் என்று போற்றுவார்கள். தற்போது லெனின் புரட்சியாளரின் தத்துவங்கள் சிலவற்றை பார்ப்போம்.
- எல்லாரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
- பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு.
- நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே, நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்து முடி.
- அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும்.
- மத ஒழுக்கநெறி என்ற சொற்தொடர் தான் மக்களை இன்னும் ஏமாற்றி கொண்டு ஏமாளிகளாக வைத்திருக்கிறது.
- வாழ்க்கைக்காக போராடுகிறோம், போராட்டத்தில் வாழ்கிறோம்.
- பிழைகளும், தோல்விகளும் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.
- அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது.
- தோல்வியை ஒப்பிக்கொள்ள தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நேரிய இருக்கிறது.
- உனக்கான அரசியலை நீ பேசவில்லையன்றால் நீ வெறுக்கும் அரசியலில் ஆளப்படுவாய்.
- உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை, மேல் எழுப்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்.