சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Memories Quotes in Tamil | நினைவு மேற்கோள்கள்
நினைவுகள் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நேரத்திலும் காலங்களிலும் ஏற்பட்ட சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் மற்றும் கசப்பான நினைவுகளும், தற்போதைய காலங்களில் அவ்வப்போது அவர்களின் மனதிற்கு வந்து செல்வதே நினைவாகும். சிலர் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில துன்பங்களை அவ்வப்போது நினைத்து நினைத்து வருந்தி தனது உடலை வருத்திக் கொள்கின்றனர். இதுபோல கசப்பான நினைவுகளை நாம் அவ்வப்போது நினைப்பதை விட்டு இதிலிருந்து நாம் எவ்வாறு மீண்டு நம் வாழ்க்கையை பயணிக்க வேண்டும் என்ற நினைவுகளை மட்டும் சிந்தித்து பயணம் செய்ய வேண்டும்.
மனிதர்கள் தனது வாழ்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சியான சில சம்பவங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு அதை மட்டும் நினைத்திருந்தால். வாழ்க்கை மிகவும் சந்தோசமாக செல்லும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் கண்டிப்பாக அவர்களுக்கு நினைவுகள் மனதில் இருக்கும் அதில் தற்போதைய காலகட்டங்களில் அவர்கள் சிறுவயதில் எவ்வாறு இருந்தார்கள் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு சென்றன போன்ற நினைவுகள் தற்போது வந்து அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளாக இருக்கக்கூடும்.
• உலகத்துலயே மிகப்பெரிய ஏமாற்றம்.. செல்போனை சார்ஜர்ல போட்டுட்டு.. சுவிட்ச் போடாம 2 மணி நேரம் கழிச்சசு போய் பாக்குறது தான்..
• ஒரு விஷயத்தை மறக்க முயலும் போது தான் நம்முடைய ‘ஞாபக சக்தி’ பிரமாதமாக வேலை செய்கிறது
• நம்மை மறந்து போனவர்களுக்கு கூட, நாம் ஒரு நாள் நினைவிற்கு வருவோம், நமது தேவை அவர்களுக்கு தேவைப்படும் போது
• காதலில் காத்திருப்பது மட்டும் சுகமில்லை.. பிரியும் ஒவ்வொரு நொடியும் சுகமான நினைவுகள் தான்..
• சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும் நான் உயிர் வாழ..
• நினைவுகளுடன் சாக வேண்டும் கனவுகளுடன் அல்ல!
• உண்மையை பேசுவதில் ஒரு சவுகரியம் உண்டு.. ஏனெனில்.. பேசியதை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை..
• வாழ்க்கையும் ஒரு புள்ளி போல தான்.. கவலையை மறந்தால் அது தொடக்கப் புள்ளி.. கவலையை மறக்காதவனுக்கு அதுவே முற்றுப் புள்ளி
• நேர்மையாய் இருந்தால் உன்னை அழ வைத்து அழகு பார்க்கும் இந்த வாழ்க்கை
• ஒரு விஷயத்தை பற்றி நாம் யோசிக்க வேண்டுமென்றால் அதற்கு மதிப்பு இருக்க வேண்டும், தகுதி இல்லாத ஒன்றை பற்றி யோசித்து நம் நிம்மதியை இழந்து விடக்கூடாது!
• எங்கேயோ இருக்கும் உன்னை என்றாவது பார்த்துவிடுவேன் என்று என்னை இன்னும் வாழச் சொல்கிறது, உந்தன் நினைவுகள்!
• யாரால் அன்று நிம்மதியாய் தூங்கினோமோ, இன்று அவர்களின் நினைவுகளோடு ஏங்கிக் கொண்டிருக்கிறோம்!
• நினைவில் வைத்து கனவில் காண்பது அல்ல நட்பு, மனதில் வைத்து மரணம் வரை புதைப்பதுதான் நட்பு