சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஓஷோவின் தத்துவங்கள் | Osho Quotes In Tamil
ஓஷோவின் தத்துவங்கள் இவர் 11 டிசம்பர் 1931 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். இவர் தந்து சிறு வயதில் இருந்ததே தியானத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார் இதனால் இவர் தனது 21ம் வயதில் ஞானம் அடைந்தார் என்று கூறப்படுகிறது. ஞானமடைதல் என்றால் தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்று குறிப்பிடுகின்றன. தற்போது இவரது ஞானத்தில் உதிர்ந்த சில ஓஷோவின் தத்துவங்களை பார்க்கலாம்.
- ஆசை எதிர்காலத்தில் நகர்வது ஆசையின் ஒரு வழி. ஆசை, இங்கேயே, இப்போது, இருந்து நிகழ்காலத்தை ரசிப்பது மற்றொரு வழி, இந்த இரண்டாவது வழிதான் இருப்பது ஏனெனில், அது எதிர்காலத்தில் நகர்வதில்லை.
- உள்முகமாக பயணிப்பது கடவுளை நோக்கி பயணிப்பதாகும், உள்முகமாக பயணிப்பதுதான் உயிரின் மறுமலர்ச்சி இரசவாதத்தின் முழுமையான ரகசியமாகும்.
- விவேக குறைவால் திருமணம் செய்கிறாய், நிதான குறைவால் மணவிலக்கு செய்கிறாய், பின் நியாபக குறைவால் மறுமணம் செய்கிறாய்.
- இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று, உன்னுடைய ஆசைகள் நிறைவேறவில்லை எனில் மனமுடைந்து போகிறாய், அது நிறைவேறிருந்தாலும் விரக்தியடைகிறாய் இதுதான் ஆசையின் துன்பம் அது நிறைவேறினால் நீ நிறைவேறவில்லை.
- மிக மிக குறைவானவற்றையே மனிதர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள் பெரும்பாலானோர் தங்களுக்கு அதிகம் தெரியும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்
- உங்களை பார்க்கும்போது சிரிக்கும் பெண் உங்களை ஏமாற்ற பார்க்கிறாள், அழும் பெண் ஏற்கனவே ஏமாற்றிவிட்டாள்.
- வாழ்வு நிச்சியமற்றது ஒவ்வொரு கணமும் புதியது, திட்டமிடப்படாதது, வாழ்க்கையை கணிக்க முடியாது வாழ்க்கைக்கு எந்த ஜாதகமும் கிடையாது எல்லா ஜாதகங்களும் இறப்பை பற்றியதே.
- செல்வா வளமும், அதன் அனுபவமும் இல்லாமல் அச்செல்வத்தின் பயனற்ற தன்மையை யாரு உணர முடியாது.
- இந்த கணம் தான் உண்மை மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனையும் தான்.
- உன்னுள் உறைந்து விட்டதை கரைப்பது தியானம்.
Keywords:
Osho Quotes In Tamil
Quotes In Tamil
Tamil