சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Panam Quotes in Tamil | பணம் தத்துவங்கள்
பணம் மனித வாழ்க்கையில் ஒரு அடிப்படையான தேவையாக உருமாறியுள்ளது. இந்த பணத்துக்காக தான் இந்த உலகமே கடினமாக உழைத்து கொண்டுள்ளது. பணம் ஒரு காகித தாழ் என்று சொன்னலு அதற்காக இங்கு பல பேர், தோல்விகள், வன்மங்கள், கொலைகள், கொள்ளைகள் என பல சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் வாழ்ந்தவரும் உண்டு இதனால் வீழ்ந்தவரும் உண்டு எனவே பணத்திற் சரியாக கையாள வேண்டும். தற்போது பணத்தை பற்றிய சில அறிஞர்களின் தத்துவம் சிலவற்றை பார்க்கலாம்.
- பணம் மகிழ்ச்சியை தரலாம் ஆனால் நல்ல குணத்தை தராது.
- பணமா பாசமான்னு கேட்டா எல்லாரும் பாசம் என்று தான் கூறுவார்கள் ஆனால் அந்த பாசத்தோடு அளவை நிர்ணயம் செய்வது பணம் தான்.
- பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும், பணம் இல்ல என்றால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்.
- காலம் நமக்கு கற்று கொடுத்த பாடம் பணம் இருந்தால் நாலுபேரு நம்மை திரும்பி பார்ப்பார்கள் பணம் இல்லையே நாம் நாலுபேரை திரும்பி பார்க்கவேண்டும்.
- பணத்தை சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம். ஆனால் ஒருபோதும் வாழ்க்கையை சேமித்து வாழ முடியாது வாழ்கை வாழ்வதற்கே.
- வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை, நம் குணத்தில் தான் உள்ளது, பணம் சேர்த்து பிணம் ஆவதை விட குணம் சேர்த்து மகிச்சியாக வாழ்.
- பணம் இன்றி மனிதனாய் வாழ முடிகிறது, ஆனால் மனிதர்கள் உடன் தான் வாழ முடியவில்லை.
- நல்லவர்களாகவும், நம்பிக்கையானவர்களாகவும், முக்கியமாக, மனிதர்களாகவும், வாழ்ந்த இனம் கெட்டுப்போனது இந்த பணத்தால் தான்.
- பெண்ணும் பணமும் நினைத்தால் எந்த மாதிரியான உறவுகளையும் உருக்குலைய செய்ய முடியும்.