சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Sacrifice Pain Life Quotes in Tamil |தியாகத்தின் வலிகளின் தத்துவங்கள்
ஒரு மனிதன் தனது ஆயுள் காலம்முழுவதும் தனது வாழ்க்கையில் பல ஆயிரம் முறை தியாகங்கள் செய்கின்றன .தியாகம் என்பது ஒரு புனிதமான செயலாகும் ஏனென்றால் ஒருவன் ஒருவருக்கு தனது வாழ்க்கையில் தியாகம் செய்தால் அவன் அவருக்கு ஒரு கடவுள் போல் அறியப்படுகிறார் .
எனவேதான் தியாகம் என்பது ஒரு புனிதமான செயலாகும். தியாகம் செய்து அதனால் நமக்கு ஒரு நற்பெயர் ஏற்படாமல் இருந்தால்கூட நன்று ஆனால் நாம் செய்யும் தியாகத்தை கொச்சைப்படுத்தி அல்லது அதை கொச்சைப்படுத்தும் வகையில் மற்றவர்களிடம் கூறினால் அது நமக்கு மிகவும் மனதில் வலி ஏற்படும் .
ஒரு தியாகம் செய்து அதனால் நமக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் மிக கொடிய மனவேதனையும் மன வலியையும் ஏற்படுத்தும், அந்த வேதனையை வெளியே சொல்ல முடியாத அளவிற்கு மனதில் ஆழமாக ஏற்பட்டுவிடும், இந்த உலகில் நம் முன்னோர்களான சுதந்திர போராட்ட வீரர்கள் தனது வாழ்க்கையையே நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர் அவர்களை நாம் எப்பொழுதும் போற்றி கடவுளாக வணங்கி வருகின்றோம். இதுவே நாம் அந்த தியாகத்துக்கு செய்யும் ஒரு நற்செயல் ஆகும் , இதுபோல் தற்போதைய கால கட்டங்களில் நாம் உறவினர்கள் அல்லது நம் நண்பர்கள் நமக்கு ஏதாவது சிறிதளவு தியாகங்கள் செய்தாள் நாம் அவர்களை தெய்வம் போல் நம் உயிர் உள்ளவரை வணங்க வேண்டும்.
- வலிமையான இதயத்தில் தான் அதிகமான வலிகள் உள்ளன
- வாழ்நாள் முழுவதும் உன்னிடம் இருக்க ஆசைப்பட்டேன் என் காதல் உனக்கு புரியவில்லை என்னை நீ மதிக்கவும் இல்லை
- உணர முடியாத சந்தோஷமும் நீதான் உணர்த்திச் சென்ற வழியும் நீதான்
- மரணம் ஒருமுறைதான் கொள்ளும் மனக்கவலை நொடிக்கு நொடி கொள்ளும்
- மரணத்தைக் காட்டிலும் கொடுமையானது மனக்கவலை
- மறக்க நினைக்கும் நீயும் மறக்க முடியாமல் நானும்
- நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் மறந்து போனது
- பிறருக்கு பாரமாய் இருப்பதை விட சில தருணங்களில் நாம் ஒதுங்கி இருப்பதே நல்லது
- அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள் ஒருநாள் அளவும் வைப்பார்கள்
- மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட மரணம் தான்
- காயப்படுத்திய வர்கள் போகலாம் என் காயங்கள் கூட ஆறலாம் ஆனால் சில வழிகள் போவதில்லை
- நான் நேசிக்கும் ஒரு உறவும் எனக்கு நிரந்தரம் இல்லை என்பது கடவுளால் அளிக்கப்பட்ட சாபம் போல
- ஏமாற்றம் எனக்கு புதிதல்ல நான் ஏமாறும் விதம்தான் புதிது சில நேரம் அன்பால் சில நேரம் நம்பிக்கையால்v