சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மூலம் குணமடைய சில மருத்துவ குறிப்புகள் / Tips For Curing Piles In Tamil
மூலம் என்பது ஆசனவாய் பகுதியில் ஒரு சிறிய முளைப்பு போல ஏற்படும் இதை தான் மூலம் என கூறுவார்கள், மூலம் இரண்டு மூன்று வகை ஆகும் அந்த கட்டி போன்ற அமைப்பு வெளிப்புறமாக இருந்தால் அது வெளி மூலம் எனவும் அந்த கட்டி போன்ற அமைப்பு சிறிது ஆசனவாயுவின் உள்பகுதியில் ஏற்பட்டால் அது உள்மூலம் என அழைக்கின்றன
மூலம் என்பது தற்போதைய காலங்களில் ஒரு சாதாரண வியாதியாக மாறிவிட்டது பல்வேறு மக்களுக்கு இந்த மூலம் இருக்கின்றது, இந்த மூலம் சிலருக்கு பல்வேறு ஆண்டுகளாக இருக்கும் இது ஒரு சிறிய நாட்களுக்குப் பிறகு அதன் இறுதி அமைப்பை தொடும் அப்பொழுது அதிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படும்
மூலம் என்பது ஒரு சாதாரண கட்டி தான் ஆனால் அதை ஆரம்ப காலத்திலேயே நாம் மருத்துவரிடம் சென்று அதை குணமடைய செய்ய வேண்டும் அல்லது அது பிற்காலத்தில் திடீரென ரத்த கசிவு ஏற்பட்டு பின்னர் அறுவை சிகிச்சை செய்து அதை அப்புறப்படுத்தும் அளவிற்கு எடுத்துச் சென்று விடும்
மூலம் நோய் வராமல் தடுப்பது எப்படி ?
மூலம் நமக்கு வராமல் தடுப்பது எப்படி என பார்த்தீர்கள் என்றால் நாம் உணவு பழக்கம் மட்டும் நம் வாழ்வியல் மாற்றங்களே இதற்கு காரணம்
உணவு பழக்கம்
மூலம் முக்கியமாக அதிக காரமான உணவுகளை உண்பவர்களுக்கு தான் இந்த மூலம் நோய் வருகின்றது எனவே நாம் உண்ணும் உணவில் காரத்தை குறைத்து மிதமான காரமான உணவுகளை உண்பது உடலுக்கும் ஆரோக்கியம் இது போன்ற சில வியாதிகளை வராமல் நாம் தடுத்துக் கொள்ளலாம்
நாம் உண்ணும் உணவில் அதிகமாக நார்ச்சத்து நிறைந்திருக்கும் உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் என்னவென்றால் முத்துச்சோளம், காளான், முருங்கை, கீரை வகைகள், பனை கிழங்கு, பீன்ஸ் போன்ற பல்வேறு உணவுகள் அதிக நார் சட்டை உடையது
இந்த உணவுகளை நாம் தினமும் நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நமக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும் எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் இருந்தால் மூலம் நமக்கு ஏற்படாது
நாம் உணவில் தினமும் தயிர்,மோர், இளநீர் ,தர்ப்பூசணி ,உலர் திராட்சை , பனை கற்கண்டு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வியல் மாற்றம்
மூலம் நோய் உள்ளவர்கள் அவர்களின் வாழ்வியலில் சில மாற்றங்களை அவசியம் செய்து கொள்ள வேண்டும் அவர்கள் இரவில் படுக்கும் பொழுது காற்றோட்டமாக இருக்கும் இடத்தில் உறங்க வேண்டும்.
இரவில் தினமும் சில வெந்தயங்களை தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் அந்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் மூலம் சிறிது சின்னதாவதை நாம் கண்கூடாக பார்க்கலாம்
மூலம் உள்ளவர்கள் இருசக்கர வாகனத்தில் வெயிலில் அதிக தூரம் பயணிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும் ஏனென்றால் இருசக்கர வாகனத்தில் இருக்கை ரெக்சன் என்ற ஒரு வித பொருளினால் ஆனது அது வெப்பத்தை உறிஞ்சு மீண்டும் வெப்பத்தை வெளியில் தள்ளும் அந்த வெப்பமானது நமது உடலில் வெப்பநிலையை அதிகரித்து விடும் .
எனவே இருசக்கர வாகனத்தில் செல்போர்கள் தேங்காய் துண்டு வாங்கி அதை இருசக்கர வாகனத்தின் அமருமிடத்தில் வைத்து அதன் மேல் அமர்ந்து பயணிப்பது சிறப்பாகும்
அதேபோல் வீட்டில் பிளாஸ்டிக் அல்லது ரெக்ஸனால் செய்யப்பட்ட சோபாவில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதும் மூலநோயை மேல் பெரிதாகிவிடும் அதனால் மரத்தால் செய்யப்பட்ட இருக்கை அல்லது கயிற்று கட்டல் போன்றவற்றில் நாம் அமர்வதும் உறங்குவதும் நல்லதாகும்
மூலம் நோய் குணமடைய சில மருத்துவ குறிப்புகள்
மூல நோய் வந்த பிறகு அதை எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்று நாம் இந்த பதிவில் பார்ப்போம் முதலில் மூலம் இரண்டு மூன்று வகைகளாக பிரிப்பார்கள் அதில் எந்த ஒரு மூலமாக இருந்தாலும் அது ஆரம்ப காலத்திலேயே நாம் அறிந்து அதற்கான மருத்துவ ஆலோசனை பெற்றால் கண்டிப்பாக மூலத்தை நாம் ஆரம்ப காலத்திலேயே அழித்து விடலாம். அதை விட்டு நாம் அதை அலட்சியமாக கையாண்டால் அது பிற்காலத்தில் அறுவை சிகிச்சை செய்து அகற்ற பலி வகுத்து விடும் .
தற்போது காலங்களில் மூலத்திற்கான அறுவை சிகிச்சை மிக எளிய முறையில் லேசர் மூலம் எளிமையாக அகற்றி விடுகின்றனர் லேசர் மூலம் அகற்றுவதால் பெரிதாக எந்த ஒரு வழியோ பாதிப்போ ஏற்படுவதில்லை எனவே நீங்கள் மூலம் அகற்ற வீட்ட லேசர் சிகிச்சை மூலம் மூலத்தை அகற்றிக் கொள்ளுங்கள் இது அனைத்து மருத்துவமனையிலும் இருக்கின்றது.
அல்லது நீங்கள் நாட்டு வைத்தியம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அதற்கும் வலிகள் உள்ளது, நீங்கள் உங்களின் வீட்டுக்கு அருகில் உள்ள நல்ல ஒரு நாட்டு வைத்தியரை சென்று பார்த்து அதற்கான நாட்டு மருந்துகளை வாங்கி உண்ணுங்கள் .