சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகள் / Health Tips In Tamil
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகள்
உடலை எவ்வாறு நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்று நாம் இந்த பதிவில் பார்ப்போம், நாம் உடலை எப்பொழுதும் கவனித்து சீராக உடலை செயல்படுத்த வேண்டும்.
எப்பொழுதும் நாம் நம் உடலில் மேல் ஒரு அக்கறை வைத்துக் கொண்டு வாழ வேண்டும். இந்தப் பதிவில் நாம் உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்று பார்ப்போம் அதற்கு சில வழிமுறைகளை தினமும் நாம் கடைபிடித்து வர வேண்டும் சிறிது நாட்கள் அந்த வழிமுறையை கடைபிடித்து வந்தால் கண்டிப்பாக உடல் வலுப்பெற்று சுறுசுறுப்பான ஆரோக்கியமான உடலை நாம் பெறுவோம்
உணவு
நாம் தினமும் காலை எழுந்தவுடன் பாதாம் – 5 , பிஸ்தா-2 , முந்திரி- 2 , இந்திய இரவு ஊற வைத்த உலர் திராட்சை – 20 , வால்நட் – 2 , பேரிச்சம்பழம் – 3 ஆகியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான விட்டமின் மற்றும் மினரல்கள் மற்றும் புரோட்டின் ஆகியவற்றை நாம் பெற்றுக் கொள்ளலாம்
மேலும் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைத்துவிடும் இப்பொழுது மேல் பார்த்த அனைத்தையும் காலை உணவுக்கு முன் நாம் உண்ண வேண்டும்
தினமும் காலை உணவாக இட்லி அல்லது சாப்பாடு சாப்பிடவர்களாக இருந்தீர்கள் என்றால் காய்கறிகளுடன் இரண்டு முட்டை வைத்து காலை உணவை முடித்துக் கொள்ள வேண்டும் இதனால் முட்டையிலிருந்து நமக்கு தேவையான புரோட்டின் மற்றும் காய்கறிகளில் இருந்து தேவையான விட்டமின் மற்றும் மினரல்கள் காலையிலே பூர்த்தி அடைந்து விடும் இது ஒரு ஆரோக்கியமான அன்றைய நாளுக்கு துவக்கமாகும்
நீங்கள் உடற்பயிற்சிக்கு செல்பவராக இருந்தீர்கள் என்றால் தினமும் புரோட்டின் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும் உங்களது எடையில் இரண்டு மடங்கு கிராம் புரோட்டின் சாப்பிட வேண்டும்
உதாரணத்திற்கு நீங்கள் 60 கிலோ எடை இருந்தீர்கள் என்றால் நீங்கள் 120 கிராம் புரோட்டின் ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டும் இதனால் நீங்கள் காலையில் சாப்பிட்ட இரண்டு முட்டைகள் கண்டிப்பாக போதுமானதாக இருக்காது எனவே நீங்கள் மேலும் மதிய உணவில் சிறிது மாமிசம் அல்லது புரதம் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் உங்கள் உடல் தேவையான புரதத்தை பூர்த்தி செய்து கொள்ளும் அப்பொழுதுதான் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்
உடற்பயிற்சி
நீங்கள் தினமும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்து வந்தீர்கள் என்றால் உடல் கண்டிப்பாக மிக ஆரோக்கியமாக இருக்கக்கூடும், உடற்பயிற்சி என்பது உடற்பயிற்சி கூடத்திற்கோ அல்லது விளையாட்டு மைதானத்தில் சென்று நடை பயிற்சி எது செய்தாலும் அது நன்மைக்கு தான் ஆனால் நாம் இதை தினமும் மறக்காமல் கடைப்பிடித்து வரவேண்டும்
உடற்பயிற்சி கூடம் சென்று உடற்பயிற்சி செய்பவர்களாக நீங்கள் இருந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் உதாரணத்திற்கு இன்று நாம் கால் பகுதிக்கு உடற்பயிற்சி செய்தால் நாளை நெஞ்சு பகுதிக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் அதற்கு அடுத்த நாள் கைப்பகுதிக்கு செய்ய வேண்டும் அவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உறுப்பிற்கு நீங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் உங்கள் மொத்த உடலும் ஆரோக்கியம் பெறும் .
நீங்கள் உடற்பயிற்சி தினமும் செய்து வந்தால் உங்களது டெஸ்டோஸ்டோன் அளவு அதிகரிக்கும் இதனால் நீங்கள் ஆண்மை குறைவாக இருந்தால் கூட ஆண்மை அதிகரிக்கும்
நீங்கள் உடற்பயிற்சி தினம் செய்து வந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகவும் உடல் எடையும் சீராகவும் வலுவாகவும் மாறிவிடும்
தூக்கம்
தூக்கம் என்பது நம் உடல் நலத்துக்கு மிக அவசியமான ஒரு செயலாகும் நாம் தினமும் 6 முதல் 8 மணி நேரம் இரவில் கண்டிப்பாக தூங்க வேண்டும் அதிலும் இரவு ஒன்பதரைலிருந்து 10 மணிக்குள் உறங்க வேண்டும் பின்னர் காலையில் ஐந்து அல்லது ஆறு மணிக்குள் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும்
இரவில் நாம் ஆரோக்கியமாக தூங்கினால் போதும் அடுத்த நாள் காலை நாம் மிக புத்துணர்ச்சியாக காண்போம்
நான் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் உறக்கம் அவசியம் அதிலும் இரவு தான் அந்த உறக்கம் அவசியப்படுகிறது ஏனென்றால் இரவில் தான் நாம் உடலுக்கு தேவையான நிறைய விதமான அமிலங்கள் சுரக்கின்றன இந்த அமிலங்கள் பகல் நேரத்தில் உறங்கும் பொழுது சுரப்பதில்லை அதனால் நாம் இரவில் முழு இருட்டு அறையில் தான் தூங்க வேண்டும் அதிலும் இந்த அமிலங்கள் 12 முதல் 2 மணி வரை சுரக்கிறது என்று சிலர் கூறுகின்றனர் எனவே இந்த 12 முதல் 2 மணி வரை நாம் கண்டிப்பாக ஒரு ஆழ்ந்த தூக்கத்தில் நாம் தூங்க வேண்டும்
மன நிம்மதி
நாம் மேல் காணும் இந்த அனைத்தையும் செய்தால் மட்டும் பத்தாது நாம் அனைவரும் கண்டிப்பாக மன நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் அவ்வாறு மன நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் மட்டும்தான் நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று நாம் அறிந்து கொள்ள முடியும், எவ்வளவு எவ்வளவு சந்தோஷமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அவ்வளவு உடல் ஆரோக்கியமாக இருக்கும் கவலை என்பது பல்வேறு விதமான நோய்களை நாம் உடலுக்கு வந்து சேர்த்து விடும் குறிப்பாக சர்க்கரை அல்சர் உடல் சோர்வு மன அழுத்தம் போன்ற நோய்கள் நம் உடலுக்கு கேடு தரும்
எனவே உடல் ஆரோக்கியத்திற்கு மிக நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் எது இருக்கின்றதோ அதுவே நமக்கு போதும் என்ற மன நிறைவோடு சந்தோஷமாக நம் வாழ்க்கையை வாழலாம் பணம் இன்று இருக்கும் நாளை இல்லை அதனால் பணம் பணம் என்று ஓடாமல் இருப்பதை வைத்து எவ்வாறு நம் வாழ்க்கையை மிக சந்தோஷமாக வழிநடத்த முடியும் என்று நினைத்து அது தவம் தான் போனால் வாழ்க்கையை வழிநடத்திச் செல்வோம்