சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தமிழ்நாட்டின் வணிகம்
தமிழ்நாட்டின் வணிகம்
துறைமுகம்
கப்பல்களும் படகுகளும் வந்து தங்கிசெல்வதற்குரிய இடம் துறைமுகம் ஆகும். இப்பகுதி கடல் வழி போக்குவரத்து நடைபெறும் இடமாக உள்ளது. பண்டைய தமிழர்கள் போர் வணிகம் போன்ற காரணங்களுக்காகவும் துறைமுகங்களை பயன்படுத்தினர் தமிழகத்தின் துறைமுகங்கள் ஆற்றின் கலிமுகங்களில் அமைந்திருந்தன.அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்நாளில் திசைகாட்டும் கருவிகள் செயற்கைக்கோள்கள் முதலியவற்றின் துணையோடு கடல்வழி பயணத்தை திறம்பட மேற்கொள்ள முடிகிறது உலகம் எங்கும் உருவாக்கப்படும் பொருள்களை குறைந்த பொருட்ச அளவில் உலக நாடு முழுவதையும் கொண்டு சேர்க்க இன்றும் தலைவலி வான்வழி போக்குவரத்தை விட கடல் வழி போக்குவரத்து பெரிதும் துணை புரிகின்றது வணிகம் செய்யப்பட்ட சில பண்டைய கால துறைமுகங்களை இப்பகுதியில் காண்போம்.
முசிறி
- தமிழ்நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் சேரர்கள் ஆட்சி எல்லைக்குள் அமைந்த புகழ் பெற்ற துறைமுகம் முசிறி.
- இது மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவான பேரியார் கடல் கடக்கும் இடத்தில் இயற்கையாக உருவான துறைமுகம் ஆகும்.அக்காலத்தில் சேரன் நாட்டு தலைநகரான வஞ்சி பேரியாற்றின் கரையில் உள்ள முசிறி துறைமுகபட்டினத்திற்கு அருகே அமைந்து இருந்தது.
- முசிறி துறைமுகத்தில் மிளகு ஏற்றுமதி சிறப்புடன் நடைபெற்றது. யவனர் விரும்பி வாங்கியதால் மிளகிற்கு யவனப்பிரியர் என்ற பெயர் ஏற்பட்டது.
- முசிறி துறைமுகத்திலிருந்து நறுமணப் பொருட்கள் விலை உயர்ந்த கற்கள், முத்து ,வைரம், நீளமணி ஆமை ஓடுகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன பவளம் கண்ணாடி செம்பு தகரம் இஎம் முதலிய பொருட்கள் எவனர்களால் இறக்குமதி செய்யப்பட்டன.
காவேரிப்பூம்பட்டினம்
- சோழவள நாட்டில் காவிரி ஆறு கடலில் கலக்கின்ற இடத்தில் வடகரையின்மேல் காவேரிப்பூம்பட்டினம் என்னும் இயற்கை துறைமுகம் அமைந்துள்ளது.
- காவேரி ஆற்றின் கலிமுகம் ஆழமாகவும் அகலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கு ஏற்றதாகவும்இருந்தது. கப்பல்கள் பாய்களை சுருட்டா மலும் பாரத்தை குறைக்காமலும் நேரே ஆற்றினில் புகுந்து துறைமுகத்தை அடைந்தன.
- புகார் நகரத்தின் அகன்ற பெரிய தெருக்களில் மேற்கொண்ட பொருட்களோடு கங்கை கரையிலிருந்து வந்த பொருள்களும் ,காவேரிகரை வழங்கிய வளங்களும், ஈழத்து உணவு பொருள்களும், கடாரம் தந்த பொருள்களும்
- ,இன்னும் பல நாடுகளில் இருந்து வந்த பொருள்களும் கலந்து நிறைந்தன .இக்காலத்தில் ஒரு துறைமுகத்தின் செயல் திறனை கணக்கிடுவதற்கு கப்பல்கள் ஏற்றுமதி இறக்குமதி செல்லும் நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார் இதற்கென இன்று நமது துறைமுகங்களில் ஒரு வழிப்பாதை முறை கொண்டுவரப்பட்டுள்ளது இதுபோல் அக்காலத்தில் துறைமுகங்களும் அருகில் ஏற்றுமதிக்கு தனிப்பகுதியும் இறக்குமதிக்கு தனி பகுதியும் இருந்தன.
- பொருள்களை பாதுகாப்பாக வைக்க நல்ல அகன்ற கெடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன என்றும் பொருள்களுக்கு சுங்கதீர்வைகள் அங்கேயே வசூலிதிக்கப்பட்டன என்று பட்டினப்பாலை தெரிவிக்கிறது.
- காவேரிப்பூம்பட்டினத்தில் சோழ இளவரசிகள் சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் காப்பியங்களின் தலைமை மாந்தர்களான கோவலன் ,கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர், இளவரசன் கிள்ளியவளவன் ஆட்சி காலத்தில் பட்டினத்தில் வாழ்ந்திருந்தனர் என இலக்கியங்கள் கூறுகின்றது.
கொற்கை
- தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் மேற்கு கரையில் அமைந்த இயற்கை துறைமுகம் கொற்கை.
- ஆளும் மன்னரை அடுத்து அரசாள வரும் பட்டத்து இளவரசர்கள் துறைமுக நகரிலேயே தங்கி நிர்வாகம் கற்றனர் .
- பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்துறந்தபின் கோர்க்கையில் இருந்த பட்டத்து இளவரசன் வெற்றிவேற் செழியன் மதுரை வந்து அரியணை ஏறினான் என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது .
- தற்காலத்தில் கொற்கைப் பகுதியில் நடந்த அகழாய்வின் போது கிடைத்த பெரும் கற்காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகள், இப்பகுதியின் தொன்மைக்கு மேலும் சான்று அளிக்கின்றனர் சங்ககால முதல் பிற்கால பாண்டியர் காலம் வரை பாண்டிய நாட்டு முத்துக்களை ரோம்நாட்டினர் விரும்பி வாங்கி உள்ளனர்.
- பாண்டிய மன்னர்கள் ரோம் நாட்டின் அரசவைக்கு முத்துக்களை பரிசாக அளித்தார்கள் பாண்டிய மன்னர்களின் குதிரை படைகளுக்காக கொற்கை துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய்மரக் கப்பல்களில் 16,000 அரபி குதிரைகள் வந்து இறங்கின என்கிற செய்தியும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்