சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
இதோ வெளியானது பிளஸ் +1 தேர்வு முடிவுகள்..!
தமிழகத்தில் இன்று பிளஸ் +1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதை அடுத்து மாணவ மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளன. தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள இணையதளங்களில் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.
+1 தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 10.13% கூடுதலாக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்துள்ளனர். இம்முறை நடந்த +1 பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனைதெடர்ந்து மேலும் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இம்முறை +1 பொதுத்தேர்வில் மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடமும், 2வது இடம் விருதுநகர் 95.44%, 3வது இடம் மதுரை 95.25% தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.