சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மூலம் நோய் வராமல் தடுக்கும் வழிமுறை | A Way to Prevent from Piles
மூலம் என்பது மலக்குடல், ஆசனவாயில் வீங்கிய மற்றும் நொதிக்கப்பட்ட நரம்புகள் உண்டாவதால் ஏற்படும் நிலையாகும். இதனால் ஏற்படும் உபாதைகள் என்னவென்றல் கடுமையான மலசிக்கல், குத கால்வாய், மலக்குடல் நரம்புகள் வீக்கம், வலி மற்றும் மிகவும் தீவிரம் அடைந்தாள் ரத்த போக்கு உண்டாகும்.
இந்த நோய் முதல் நிலையில் இருந்தால் இது எளிதில் குணமடைந்து விடும் மேலும் ரத்தப்போக்கு அதிகமானால் இது ரத்த சோகை அதிகமாக இருக்கும். இந்த நோய் பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள், படுக்கையில் ஓய்வு எடுக்கும் நோயாளிகள், இதில் குறிப்பாக முதுகெலும்பு பாதித்தவர்களை அதிகமாக பாதிக்கிறது.
மூலம் நோய் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது
உட்புற மூலநோய்
முதல் வகை உட்புற மூலம் இது குத கால்வாய் பகுதியின் ஆழத்தில் உடைக்கும் ஐயாவை பெரும்பாலு அதனாக சரியாகி விடும். இது மலம் கழிக்கும்போது ரத்தக்கசிவு ஏற்படலாம், பயங்கரமான எரிச்சலை ஏற்படுத்தலாம், மேலும் வலி அல்லது அசௌகரியம் அதிகமாக இருந்தால் காலதாமதம் இன்றி மருத்துவரை அணுகுவது சிறந்தது.
நீடித்த மூல நோய்
இது இரண்டாவது வகை மூலநோய் இது எப்படி உருவாகும் என்றால் மலவாய் பகுதியில் வீக்கம் அல்லது மலவாய் ஒட்டிக்கொள்ளுதல் இதுபோன்று பிரச்சனைகள் உண்டாகும் இது இரண்டாம் வகை மூலநோய். மருத்துவர் தான் மூலநோயின் தீவிரத்தை முடிவு செய்து அதன்படி மருத்துவர் சிகிச்சை கொடுப்பார்.
வெளி மூலம்
இது மூன்றாம் வகை மூலமாகும் இது மலம் வெளியேறும் மலவாய் பகுதியில் உண்டாகும் மூலம். இது மலவாய் பகுதியில் கட்டிகளை உண்டாகலாம். இது அமரும்போதும் ள்ளது உடல் செயல்பாடுகளை அதிகரிக்கும்போது அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
த்ரோம்போஸ்ட் மூலம்
இது தான் நான்காவது மற்றும் கடைசி வகை மூலம் ஆகும், இந்த வகை மூலம் உடல் திசுவில் ரத்த கட்டை கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி அதீத வலி, வீக்கம், மூலம் ஏற்பட்ட இடத்தில் ரத்தம் கட்டிய நிறம் இருக்கும்.
இது போன்ற மூல நோய் ஆரம்ப நிலையில் இருக்கும்போது நாம் கண்டறிந்தால் சில வீட்டு வைத்தியம் மூலம் சரிசெய்ய வாய்ப்புள்ளது.
மூலம் நோய்கான வீட்டு வைத்தியம்
சூடான நீரில் பாத் டப் குளியல்
இது ஒரு நல்ல பயன்தரக்கூடிய ஒரு சிகிச்சையாகும் உங்கள் வீட்டில் இருக்கும் குளியல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மிதமான அல்லது வெதுவெதுப்பான நீரை நிரப்பி கொளுங்கள். பிறகு அந்த அந்த குளியல் தொட்டியில் உள்ள வெதுவெதுப்பான நீரில் தங்களது பிறப்புறுப்புகள் படும்படி 10 நிமிடம் வைத்திருங்கள். அந்த தொட்டியில் உள்ள நீரில் சோப்பு, ஷாம்பூ, வேதி பொருட்கள் போன்றஎதையும் சேர்க்க கூடாது. சுத்தமான தண்ணியாக இருக்கவேண்டும். குளித்து முடித்த பிறகு மெல்லிய துணியில் துடைக்காமல் பொறுமையாக ஒத்தி எடுக்கவேண்டும். இதுபோல் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதுபோல் குளிக்க வேண்டும்.
இதை தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் பெறலாம் இந்த மறை குளியல் முறை குத தசைகள் வெதுவெதுப்பான நீரில் படும்போது இடஙக தசைகள் ஓய்வு பெற்று இதமாக ஆக்கும் மேலும் இதனால் ஏற்படும் அரிப்பு தன்மையை குறைக்கும்.
தேயிலை எண்ணெய்
வீடு முறை வைத்தியத்தில் இந்த முறை மிகவும் எளிமையான முறையாகும் இதில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் இந்த தேயிலை எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்னெய் கலந்தது பஞ்சில் நினைத்து மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் துடைக்க வேண்டும் இதை தினமும் மூன்று முறை செய்ய வேண்டும், இவ்வாறு செய்து வந்தால் இது சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் அலர்ஜியை போக்கும், மேலும் இது பாதிக்கப்பட்ட இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும்.
கற்றாழை
இந்த கற்றாழை மூல வைத்தியத்துக்கு மிகவும் உதவியாக உள்ளது மேலும் நல்ல பலனையும் தருகிறது இதை
துண்டாக வெட்டி தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் அப்போது அதில் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் வெளியேறும் பிறகும் அதில் இருக்கும் தோலை உரித்து வெள்ளை நிற ஜெல்லை மட்டும் குளிர் சத்தான பெட்டியில் வைக்க வேண்டும் சிறுது நேரம் களைத்து அதை எடுத்து மலவாய் பகுதியில் தடவுங்கள். இதுபோல் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தல் நல்ல பலன் தரும். அல்லது இந்த கற்றாழை சாறை குடித்தால் மலசிக்கல் போன்ற பிரச்சனை வரலாம். மூலநோயால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க கற்றாழை உதவுகிறது.
தேங்காஎண்ணெய்
இந்த மூலநோயில் அதிக செலவு இல்லாமல் மற்றும் எளிமையாக கிடைக்கும் பொருள் என்னவென்றால் தேங்கா எண்ணெய். இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் அது சுத்தமாக இருக்க வேண்டும். தேங்காஎண்ணை பயன்படுத்தும்போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு எண்ணெய் விரலில் நனைத்து மூலத்தில் உருவான கட்டிகள் இருக்கும் இடத்தி தடவி எடுக்கவும். குத பகுதியில் வலி அல்லது மூலத்தில் ஏற்பட்ட கட்டிகள் போகும் வரை தினமும் 3 அல்லது 4 முறை செய்துவந்தால் பலன் கிடைக்கும். இதனால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு தன்மை ஏற்படாமல் இருக்கும்.
பூண்டு
பூண்டு இது இந்த நொடியில் இருந்து குணமடைய மிகவும் உதவிகரமாக இருக்கும். பூண்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால், பூண்டின் தோலை உரித்து அதை கொதிக்கம் நீரில் போட்டு கொதிக்க விடவும் சிறிது நேரம் கொதித்த பிறகு அந்த தண்ணியை வடிகட்டி குளிர் சாதன பெட்டியில் வைக்க வேண்டும் பிறகு பருத்தியலான துணியில் ஊறவைத்து அதன்பின் அந்த துணியை ஆசனவாயில் 10 முதல் 15 நிமிடம் வரை ஒத்தனம் கொடுக்கவேண்டும். இதுபோல் ஒரு மணிநேரம் செய்யவேண்டும் மேலும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ஆசன வாயில் இருக்கும் கடுப்பு நீங்கும் இதனால் மூலத்தினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து விரைவாக தீர்வு காணப்படும்.
கருஞ்சீரக எண்ணெய்
இந்த எண்னெய் எடுத்து அதே அளவு வினிகர் சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்பு கைகளை சுத்தமாக கழுவி பாதிக்கப்பட்ட இடத்தில தடவ வேண்டும் இதுபோல் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவ வேண்டும். இது செரிமான இயக்கத்தை சீர்படுத்தும் இதனால் மலசிக்கல் வராது.
நார்சத்து உணவுகள்
நார்சத்து அதிகம் உள்ள நோய்கள் மலசிக்கல் இல்லாமல் தவிர்க்க உதவும். மூல நோய் உள்ளவர்கள் மலம்கழிப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள்.இதனால் நார்சத்து உள்ள உணவை தினசரி உணவில் 30-35கிராம் எடுத்துக்கொண்டால் மலசிக்கல் பிரச்சனை இருக்காது ஆரம்ப நிலையில் இருக்கும் மூலநோயை குணப்படுத்தலாம்.
மேலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுதானியன்கள் போன்றவை உணவால் சேர்த்து சாப்பிட்டால் மூலநோய் வராமல் தடுக்கலாம் மேலும் அதிக பயணங்கள் மற்றும் அதிக உடல் சூடு தரக்கூடிய உணவுகளை தவிர்க்கவும் இது மூலநோய் வருவதற்கு முக்கிய காரணம்.
இதுபோல் இல்லாமல் மேற்க்கூறிய வழிமுறைகள் பயன்படுத்தி மூலநோய் ஆரம்ப நிலையில் இருக்கும்போதே வீட்டில் இருக்கும் இந்த எளியமுறை வைத்தியத்தில் சரிசெய்துவிடுங்கள் அல்லது மூலநோய் தீவிரம் அடைந்த பின் இந்த வைத்தியம் எடுபடாது நீங்கள் தவறாமல் மருத்துவரை அணுகவேண்டும்.