சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பிரபல தமிழ் நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தார்
தென்னிந்தியாவின் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் மீனா. அவர் 1982 முதல் படமாக குழந்தை நட்சத்திரமாக நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர். இவர் அதிக தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய சினிமா விருதுகளை பெற்றுள்ளார். அதிலும் முக்கியமாக கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
நடிகை மீனாவுக்கு 12 ஜூலை 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது மேலும் இவர்களுக்கு நைனிகா என்ற 11 வயது உடைய ஒரு மகள் உள்ளார், மீனாவின் கணவரான வித்யாசாகர் தனது வீட்டில் புறாக்கள் அதிகமாக வளர்த்து வந்துள்ளார். அந்த புறாக்களின் எச்சத்தில் வரும் வாடையின் காரணமாக அவருக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்துள்ளது மேலும் சிறிது நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்துள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இயற்கை எய்தினார் இவருக்கு வயது 48 ஆகும் இவரின் மறைவுக்கு அனைத்து சினிமா நடிகர் நடிகைகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.