சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
அதிமுக ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிவிப்பு / ADMK VS DMK In Erode Election
சென்ற மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவேராவின் மகன் மாரடைப்பால் உயிரிழந்தார் பின்னர் அந்தத் தொகுதி காலியானதால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த இடைத் தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது இதன் முடிவுகள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வெளியாகும்.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் உள்ளது இதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளது இதில் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரசும் இணைந்து காங்கிரசைச் சேர்ந்த இளங்கோவனை போட்டியிட செய்துள்ளது மேலும் அதிமுகவை சேர்ந்த கே எஸ் தென்னரசு போட்டியிட முடிவு செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய ஆதரவை இன்னும் யாருக்கென்று கூறாமல் மௌனம் காத்து வருகின்றது மேலும் அண்ணாமலை கூறுகையில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை இலை சின்னத்துக்கு தான் எங்களது ஆதரவு என்று கூறினார் இதை நாம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவருடைய ஆதரவு என்று நாம் எடுத்துக் கொள்ளலாம் மேலும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை இன்னும் பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கவில்லை
தற்போது ஈரோடு கிழக்கில் இரண்டு மிகப்பெரிய கட்சிகளும் தனது வேட்பாளர்களை அறிமுக செய்துவிட்டது இதனால் ஈரோடு கிழக்கில் அரசியல் சூடு பிடித்து விட்டது என்று நான் புரிந்து கொள்ளலாம்.