சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
அ.இ.அ.தி.மு.க பொதுக்குழுவில் நடந்தது என்ன ?
அ.இ.அ.தி.மு.க கட்சி கூட்டிய பொதுக்குழு எனது அனுமதி இன்றி அறிவிக்கப்பட்டது இது செல்லாது என்றும் ஓ.பி.எஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கலாமா வேண்டாமா என்ற இன்று காலை வெளியாகும் என்று இருந்த நிலையில். இ.பி.எஸ் தரப்பில் பொதுகுழுக்கான வேலைகளை செய்துவந்தனர் மேலும் 9 மணிக்கு தீர்ப்பு என்ற நிலையில் 9.15க்கு பொதுக்குழு நடைபெறும் என்று ஏற்பாடுகள் தீவிரமாக இருந்தனர். இதற்கிடையில் ஓ.பி.எஸ் நேராக ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளருடன் சென்றார். அப்போது இ.பி.எஸ் இன் ஆதரவாளரும் அங்கு வந்தனர் அப்போது இருவரிடமும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது இதனால் அங்கு இருந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது,
சேதப்படுத்தினர் மேலும் ஒரு பேருந்து அடித்து நொறுக்க பட்டது, இருதரப்பினரும் ஒருவருக்குஒருவர் கற்கள் வேசி தாக்கி கொண்டனர் அதில் அங்கு இருந்த தலைமை அலுவலுகத்தின் காந்திக்கு உடைக்க பட்டது. மேலும் இந்த சம்பவம் நடக்கும் நேரத்தில் 9 மணிக்கு தீர்ப்பானது பொதுக்குழு நடத்த அனுமதி அளித்தது அனுமதி அளித்த பிறகு மேடைக்கு கட்சியின் முக்கியமான தலைவர்கள் வந்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அதற்குமுன்பு தங்களது உறுப்பினர் சான்றிதழ் சமர்ப்பித்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பொதுக்குழுவானது தொடங்கியது இந்த பொதுக்குழு நடப்பதற்கான முக்கிய காரணம் இ.பி.எஸ் ஐ தற்காலிக பொது செயலாளராக அவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பது தான் அதேபோல் அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது இ.பி.எஸ் உம் பதவி ஏற்றுக்கொண்டார். பிறகு பலரும் பல அமைச்சர்கள் அங்கு மேடையில் பேசினார்கள் அப்போது ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அணைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுகின்றன அங்கு இருந்த உறுப்பினர்களின் கரக்கோஷத்தால் அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஜெயலலிதாவை நிரந்தர பொது செயலாளராக இருந்து நீக்கிவிட்டார்கள். பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி தி.மு.க வை முதலில் விமர்சித்து பேச ஆரம்பித்தார் பிறகு அதை முடித்து கொண்டு ஓ.பி.எஸ் பக்கம் திரும்பிய அவர் அவரை மிகவும் கொடூரமாக தாக்கி பேசினார் ஒரு கட்சி தலைவராக இருந்து கொண்டு அதே கட்சியின் தலைமை அலுவலகத்தை தாக்குவது இது போன்ற செயல்கள் யாரும் செய்ய மாட்டார்கள், அதேபோல் அவரை எவளோ முறை சமாதானத்துக்கு அழைத்தும் அவர் வராததால் இந்த முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் என்று இந்த சூழலுக்கான விளக்கத்தை அளித்தார் மேலும் இதை முடித்து கொண்டு. அவர் அம்மா மற்றும் எம். ஜி. ஆரின் நினைவிடத்துக்கும் சென்று மரியாதையை செலுத்தினர் இ.பி.எஸ். மேலும் கட்சியை விட்டு அணைத்து பதவிகளிலும் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அந்த உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் உம் கட்சியின் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். இன்று நடந்த பொதுக்குழுவில் இதுவே நடந்த முக்கிய நிகழ்வு ஆகும்.