சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
அல்பெண்டசோல் மாத்திரையின் பயன்கள்(Albendazole Tablet)..!
இந்த மாத்திரை துப்புரவு நோய், நரம்பியல் ஆய்வு மற்றும் நீரிழிவு சம்பந்தமான நோய்களுக்கு இந்த மாத்திரை மூலம் முறையான சிகிச்சையால் இந்த நோய்களில் இருந்து குணமடைய உதவுகிறது.
மேலும் இது மருத்துவரின் பரிந்துரையோடு சில வியாதிகளை குணப்படுத்த உதவுகிறது.
நாய் நாடாப்புழு அல்லது லார்வா இதனால் ஏற்படும் நோய்களுக்கு இந்த மாத்திரை மருத்துவரின் பாய்ந்துரையோடு சிகிச்சை அளிக்கப்படும். ஊசிப்புழு நோய், நூற்புழுவினால் ஏற்படும் தொற்றுநோய், உருண்டைப் புழுவினால் ஏற்படும் தொற்றுநோய், சாட்டைப் புழுவினால் ஏற்படும் தொற்றுநோய், மேலும் தோலில் கொக்கிக புழுவினால் ஏற்படும் தொற்றுநோய், பிளேரியல் புழுவினால் ஏற்படும் யானை கால் நோய், ஜியார்டியா தொற்றுநோய், ஒட்டுன்னியால் குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் தொற்றுநோய் இதுபோன்ற நோய்களுக்கு இந்த அல்பேண்டசோல் மாத்திரை குணமடைய உதவுகிறது.
இந்த மாத்திரை மட்டும் இன்றி எந்த மாத்திரையாக இருந்தாலும் அதை மருத்துவரின் அறிவுரைப்படி சாப்பிடுவது நல்லது. இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை தங்களது மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான உணவு பழக்கத்தின் அடிப்படியில் மாத்திரை சாப்பிட வேண்டும்.
சிலருக்கு மாத்திரை சாப்பிடுவது சிரமமாக இருந்தால் மாத்திரையை தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம். இந்த மாத்திரை சாப்பிடும்போது திராட்சை பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது மருந்துடன் சேர்ந்து ஆபத்தான பக்கவிளைவுகளை உண்டாகும் அவ்வாறு உண்டானால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
எந்த ஒரு மாத்திரையை எடுத்துக்கொண்டாலும் அதனால் பக்கவிளைவு என்பது இருக்கக்கூடியவை. அதேபோல் இந்த மாத்திரை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குமட்டல், வாந்தி, வயிற்று வலி, தலைவலி அல்லது முடி கொடுத்தால் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்போது நீங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம். மேலும் இந்த பக்கவிளைவுகளை கண்டு கொள்ளாமல் உட்கொண்டால் இதன் உச்சகட்ட பக்கவிளைவாக சொறி, அரிப்பு, வீக்கம், கடுமையான தலைசுற்றல், மூச்சுத்திணறல், பார்வை குறைபாடு, கண்களில் மஞ்சள் நிறமாக மாறுதல், சிறுநீரக தொற்று இந்த நிலை வரும்போது கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவர் இந்த மருந்தை பரிந்துரைக்கும்போது தங்களுக்கு ஒவ்வாமை, கல்லீரல் நோய் உள்ளவர்கள் இதனை மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். அவர்களுக்கு தகுந்தாற்போல் அளவை மாற்றி பரிந்துரைப்பார். மேலும் கர்ப்பமான பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தேவைப்படும்போது அல்லது மருத்துவர் அறிவுறுத்தல் படி மாத்திரை சாப்பிடுவது அவசியம்.
எந்த மாத்திரையானாலும் மருத்துவரின் ஆலோசனையோடு சாப்பிடுவது அவசியம்..