சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Alone Quotes in Tamil | தனிமை தத்துவங்கள்
தனிமை என்பது மக்கள் தொடர்புகள் இன்றி தனிமையடைதல் அல்லது தனிமைப்படுத்திக் கொள்ளுதலாகும். மேலும் தனிமையானது உரிய காரணங்கள் இன்றி நம் மனதில் தோன்றும் ஒரு சீர்குலைவேயாகும்.
தனிமை நம்மை மோசமான சுழலில் இருந்து நம்மை விலக்கி வைப்பதோடு மட்டுமின்றி, நாம் அன்புக்குரியவர்களின் உயிர் இழப்பு, மனநலம், உறவுகள் முறையான பழக்கவழக்கங்கள் இன்றி வாழும் சுழ்நிலைக்கு நம்மை ஆளாக்குகிறது.
தனிமை ஒரு நோயாக கருதப்படுகிறது. மனதை சந்தேஷமாக வைத்துக்கொண்டால் இப்பிறச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். மேலும் இது காதல், கணவன் மனைவி, நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்படும சண்டை,மணக்கசப்பு போன்றவற்றிக்கு காரணமாக தனிமை நிகழ்கிறது. நீண்ட காலமாக தனிமையில் இருப்பது பொரும்பாலுமாக விரும்பத்தகாததாக காணப்படுகிறது. தனிமை பற்றிய மேற்கோள்களை தற்போது காண்க
- “தனிமையை காதலிக்க தனித்து அமர்ந்திருந்தேன்! உன் தீரா நினவலைகள் என் நெஞ்சை தீயாய் எரிக்குதடி.. காயப்பட்டு நான் துடித்தேன் கட்டியணைக்க யாருமில்லை!”
- “அடுத்தவர்களை காதலித்து வாழ்வதை விட, தனிமையை காதலித்து வாழ்வதே மேல்!”
- “ஒளி வந்தால் நிழல் கூட விலகிவிடும், உலகில் தனிமையே நிலையானது. ஒளியை நம்பும் இருளாக வாழாதே!”
- “உன்னைக் காதலித்தேன், தனிமை கஷ்டமாக இருந்தது! இப்போ, தனிமையை காதலிக்கிறேன் உன்னை வெறுத்து!”
- “தனிமை என்பேதே இல்லை என் வாழ்வில், நீங்காத உன் நினைவு என் நெஞ்சோடு இருக்கும் வரை!”
- “அன்பு புரியாத இடத்தில் அழுகை கூட நடிப்பாக தான் தெரியும்”
- “எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்ல நினைக்காதீர்கள்! அனைவருக்கும் கேட்க காதுகள் இருக்கும். ஆனால் மனசு இருக்காது!”
- “வெறுப்பை தந்து புறம் பேசி கூச்சலிடும் கூட்டத்தை விட, மன அமைதியை மட்டுமே தரும் தனிமை எனது நண்பனே!”
- “வாழ்க்கையில் சில உறவுகள் நம்மை விட்டு சென்றாலும், நமக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஓர் உறவு, தனிமையே!”
- “உன் நினைவுகள் எனும் போதையில் விழுந்த நான், இன்று தனிமையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன்!”
- “தனிமையை வெறுத்தேன், உன்னை கண்ட நாள் முதல்! இன்று உன்னையே வெறுக்கிறேன், தனிமையால்!”
- “வாழ்க்கையின் பாதி பயணத்தில் திரும்பி பார்த்தேன். உடன் வந்து கொண்டு இருப்பது என் நிழல் மட்டுமே. ஏன் என்று யோசித்தேன் பணம் என்று தோன்றியது. பணம் இல்லை என்றால் பிணம்தானோ மனிதம்..”
- “வாழ்க்கை என்னும் வரைபடத்தில் சந்தோஷம் என்னும் நதியை தொலைத்து கவலை என்னும் தீவில் கரை ஒதுங்கி நிற்கிறேன் ஒரு தனி மரமாக”
- “தனிமையை நினைத்து கவலை கொள்ளாதே. தனிமைதான் உலகத்தையும் வாழ்க்கையையும் புரிய வைக்கும்.”
- “தனிமை கொடுமை தான், இருந்தாலும், அதில் காயம் இல்லை, காயப்படுத்த யாரும் இல்லை. என்பதால், அது இனிமை தான்..!”
- “உரிமையோடு சிலரை உறவென்று நினைத்தது தவறென்று புரிந்த போது. தனிமை உரிமை ஆனது.”
- “தனித்து வாழ பழகி கொண்டேன் தனிமையே நிரந்தரம் என்பதை உணர்ந்துக் கொண்டதால்”
- “ஆறுதல் சொல்ல பலர் இருந்தாலும் உதவி செய்திட ஒருவரும் இல்லை”