சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஒரே கையால் ஏறிய 11 தாலிகள்!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சிவா சங்கர் பாபு என்பவர் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் உள்ள 11 பெண்களை திருமணம் செய்து ஏமாத்தியுள்ளார். இவர் தன்னை ஒரு மென்பொருள் என்ஜினீயர் என்றும் தான் லட்சங்களில் சம்பாரிப்பதாகவும் பிரபலமான மேட்ரிமோனி வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் குறிவைப்பது திருமணம் ஆகி விவாகரத்து வாங்கிய பணக்கார பெண்கள் மட்டும்தான். விவாகரத்து வாங்கிய பெண்களிடம் அன்பாகவும் பாசமாகவும் பேசி அவர்களை காதல் செய்ய ஆரம்பிப்பார் அதை அவர்கள் நம்பி முதல் திருமணம வாழ்கை தான் சரியாக அமையவில்லை இரண்டாவது திருமணமாவது நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவருடன் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கின்றன.
திருமணம் முடிந்த பின்பு கொஞ்சகாலம் சந்தோஷமாக இணைந்து வாழ்கின்றன பிறகு கொஞ்ச நாட்களுக்கு பிறகு தொழில் விசயமாக வெளியூர் செல்வதாக கூறி விலையுயர்ந்த நகை மற்றும் பணத்தை வாங்கி கொண்டு தப்பி விடுவார் என்று தெரிவித்துள்ளனர். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இவர்களை ஏமாற்றிய 11 பெண்களில் 7 பெண்கள் கொண்டப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். அதில் பக்கத்து தெருக்களில் இருக்கும் பெண்களை கூட அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து மோசடி வலையில் சிக்கவைத்து கல்யாணம் செய்து நகைப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார், வாரம் ஒரு பெண்ணுடனும் மதம் ஒரு கல்யாணம் போன்று கில்லாடியாக இருந்து வந்தவர். தற்போது ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் பல மாவட்டங்களில் இவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காதது தான் இந்த மோசடிக்கு காரணம் என்று கூறபடுகிறது. மேலும் அவரை கைது செய்வதன் மூலம் மேலும் பல பெண்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும் என்று அவனால் ஏமாந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர்.