சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
உணவு வீணாக்குவதை தடுக்க வேண்டும் (Avoid Food Wastage in Tamil)..!
நமது நாட்டில் ஒரு நாளைக்கு 20 கோடிக்கும் மேலானோர் இரவு நேரங்களில் உணவு இன்றி பட்டினியுடன் தான் உறங்குகிறார்கள் இது இருக்கும் உணவு பற்றாக்குறை என்று சொல்லிவிட முடியாது மறுபக்கம் இது வேறு விதமாக இருக்கும் ஒரு நாளைக்கும் 3ல் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்படுகிறது இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 50000 கோடி ரூபாய்க்கு மதிப்பிலான உணவு வீணடிக்கப்படுவதாக தகவல்கள் சொல்கின்றன.
இதற்கு முக்கிய கரணம் ஒரு பொருள் உற்பத்தி செய்து பயனாளிகளின் பயன்பாட்டுக்கு வருவத்துக்கு முன்னதே வீணடிக்கப்படுகின்றன இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் பல ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் அதை நாம் தவறும் பட்சத்த்தில் இது போன்ற வீணாகும் நிகழ்வுகள் நடக்கும் விவசாயிகள் தயாரிக்கும் பொருட்கள் சரியான முறையில் விற்பனை நிலையத்திற்கு வருவது இல்லை, அதேபோல் அந்த பொருள் சரியான நேரத்தில் இடத்துக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்து அமையவேண்டும், அதிமாக உற்பத்தி செய்யும்போது அதை சேமித்து வைக்க அதற்கான கிடங்கு வசதி இருக்க வேண்டும். இதுபோன்ற அணைத்து உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் நாம் தயாரிக்கும் அணைத்து உணவு பொருட்களும் முழுமையாக பயன்ப்படுத்தலாம் இது அந்த பொருளின் மீது இருக்கும் விலைவாசி ஏற்றத்தை தடுக்கும். திடீர் என்று ஏற்பாடும் விலை சரிவு தடுக்கப்படும். இது ஒரு நிலையான விலை இருக்கும் இது எல்ல தரப்பு மக்களும் இதில் பயன் அடைவார்கள்.
இதுபோல் உணவும் வீணாக்குவதின் காரணத்தால் 3ல் ஒரு குழந்தை ஊட்டசத்து குறைபாடோடு இருக்கிறது.மேலும் பல தொண்டு நிறுவனங்கள் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் கேன்டீன் போன்ற இடங்களில் மிச்சம் அங்கு உணவுகளை சேகரித்து அருகில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் போன்ற பசியால் இருக்கும் நபர்களுக்கு உதவுகின்றன. இதற்க்கான சில செயலிகள் உருவாக்கி அதன் மூலம் திருமண நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவுகளை சேகரித்து இல்லாதவர்களுக்கு வழங்கி வருகின்றன.
உலகளவில் பட்டினியால் பாதிக்கப்படும் மக்களில் 25% மக்கள் இந்தியாவை சேர்ந்தவர் என்று தெரிகிறது. இது உலகளவில் இந்தியா தான் முதன்மையாக இருக்கிறது. மேலும் கிராமங்களில் வாழும் 70% பேர் தான் பசியால் வாடுகின்றன. உணவு பல வகையில் வீண் செய்யப்படுகிறது ஒரு உணவை சரியாக பராமரிக்க முடியாமல் அது ஒரு வகை, இன்னொரு வகை சமைத்த உணவு அதாவது உணவகங்கள், நிகழ்ச்சிகள் இது போன்ற விசேஷங்களில் வீணாகும் உணவு. இது ஒரு வகை இதுபோன்ற உலகளவில் வீண் செய்யப்படும் உணவுகளில் 40% இந்தியாவில் தான் செய்யப்படுகிறது அதுவும் 35% பேர் நகரத்தில் இருப்பவர்கள், மீத இருக்கு 5 % தான் கிராமத்தில் வீணாகிறது. இதற்கு உளவியல் ரீதியாக அணுகும்போது ஒரு அரிசி நகர்ப்புற மக்களுக்கு கிடைப்பது பணம் கொடுத்தால் கிடைப்பது மிகவும் எளிமையாக இருக்கும் ஆனல் கிராமத்தில் உள்ள மக்கள் பணம் மட்டும் இன்றி உழைப்பையும் போடுகின்றன இதனால் தான் கிராமத்தில் இருப்பவர்கள் அந்த உணவுக்கு போடும் உழைப்பின் அருமை தெரிந்து வீணாக்காமல் பாதுகாக்கின்றன நகரத்தில் பணம் கொடுத்தால் கிடைக்கும் பழக்கம் இருப்பதால் அங்கு அந்த உணவின் அருமை தெரிவதில்லை.