சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
காலை நேரத்தில் நாம் வெறும் வயிற்றில் உண்ணக்கூடாத உணவுகள்(Avoid these Foods in Empty Stomach)..!
காலை நேரம் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒரு அங்கம் வகிக்கிறது. பலரும் காலை உணவை சாப்பிடாமல் இருப்பது பல விதமான பிரச்சனைகள் உண்டாகும். இது அவர்களுக்கு அல்சர் அதை கண்டுக்காமல் விட்டால் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதனால் காலை உணவு என்பது மிக அவசியம். அதேபோல் வெறும் வயிற்றில் எப்படிப்பட்ட உணவை சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்.
காலை எழுந்த உடன் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் இது பலருக்கும் இயற்கை உபாதைகளை வெளியேற்ற உறுதுணையாக இருக்கும் என்று குடிப்பார்கள். அவ்வாறு செய்வது உடம்பில் பல பிரச்சனைகளை உண்டாகும் இது கேப்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இது தான் உண்மை. காலையில் வெறும் வயித்தில் நாம் டீ அல்லது காபி குடிக்கும்போது அசிடிட்டி, நெஞ்சு எரிச்சல் மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் வரும். இதை வெறும் வயித்தில் குடிப்பதற்கு பதிலாக எழுந்தவுடன் ஊறவைத்த பாதாம் அல்லது உலர்திராட்சை சாப்பிடலாம் இதை சாப்பிடுவதால் உடம்புக்கு நாள் முழுக்க ஆற்றல்மிக்கதாக இருக்கும் அல்லது எழுந்தவுடன் தண்ணீர் குடித்துவிட்டு தேநீர் அல்லது காபி அருந்தலாம்.
காலை நேரத்தில் சில உணவு பழக்கங்களை நாம் தவிர்க்க வேண்டும் அவ்வாறு நாம் செய்து வந்தால் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும் அந்த நாள் முழுவதும் ஆற்றல்மிக்க காணப்படுவர். காலை நேரங்களின் காற்றடைக்கப்பட்ட பானங்கள் குடிப்பது வயிற்றுக்கு கேடு விளைவிக்கும் மேலும் காலை வேலை மட்டும் இன்றி எப்போதும் குடுக்கமால் இருப்பது நல்லது.
காரமான உணவை தவிர்க்க வேடனும் கரம் அதிகம் உள்ள உணவை நாம் காலை நேரத்தில் உண்ணும்போது அது வயிற்றில் அசௌகரியமாக இருக்கும் மேலும் அதை அறியாமல் நாம் உண்ணும்போது வயிற்றில் அசிடிட்டி உண்டாக்கி தொந்தரவு ஏற்படும்.
மேலும் சிலர் எடை ககுறைப்பதற்கு காலை நேரத்தில் ஏதும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் சாலட் (salad) சாப்பிடுவார்கள் அது சாப்பிடுவது சரி தான் அனால் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பச்சையாக காய்கறிகளை அதிகம் சாப்பிட கூடாது இது வயிற்று வழி மற்றும் வாய்வு பிரச்சன்னை உண்டுபண்ணும்.
காலை நேரத்தில் பழங்கள் உண்பது நல்லது என்று சொல்வார்கள் அதிலும் சில பலன்களை உண்பது பிரச்சனை தரும் குறிப்பாக சிட்ரஸ் பழங்கள் உண்பதை தவிர்க்க வேண்டும் சிட்ரஸ் பழங்கள் எவை என்றால் ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் எலுமிச்சை பழம். ஆகியவை இதில் சிட்ரஸ் ஆசிட் அதிகம் இருக்கும் இது வயிற்றில் சேரும்போது அதிகமான அமிலத்தை சுரக்கும் அது மட்டும் இன்றி இது ஃபைபர் அதிகம் உள்ளதால் வயிற்றுக்கு அதிக சுமையை கொடுத்து விடும் செரிமான செய்ய கடினமாக இருக்கும்.
மேலும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதனால் அந்த நாள் நமக்கு மிகவும் ஆற்றல்மிக்க நாளாக அமையும் எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு அந்த நாளை நல்ல முறையில் செலவிடுங்கள்.