சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பாதாம் பிசின் மருத்துவ பயன்கள்(Badam Pisin Benefits in Tamil)..!
சில மர வகைகளில் பட்டையில் ஒரு gum போன்ற ஒரு திரவம் கசியும் அதுபோல் பாதாம் மரத்தில் உள்ள பட்டையில் இருக்கும் கோந்து(gum) தான் பாதாம் பிசின் என அழைக்கின்றனர்.
பாதாம் பிசின் மருத்துவ பயன்கள்
பாதாம் பிசின் என்பது உடலில் உள்ள வெப்பத்தை சீராக்கி உடல் மிகவும் குளிர்ச்சியாக வைப்பதற்கு மிகவும் சிறப்பான ஒரு பொருள்.
பாதாம் பிசினை இரவில் பாலில் அல்லது தண்ணீரில் ஊறவைத்து காலையில் எடுக்கும் பொழுது மிகவும் மென்மையாக ஜெல்லி போன்ற வடிவத்திற்கு மாறி விடும் இந்த பாதாம் பிசின் நாம் சுடு பாலிலோ சர்பத்தில் அல்லது ஏதேனும் ஒரு குளிர்பானத்தை நாம் கலந்து வெயில்காலத்தில் குடித்து வந்தால் உடல் சூடு முழுமையாக தணிந்துவிடும்.
வெயில் காலத்தில் உடல் வெப்பம் அடைந்து உடல் வரண்டு விடும். இதனால் உடல் சோர்வு நீரிழிவு சிறுநீரக பிரச்சனை போன்றவைகள் ஏற்படும். இதை அனைத்தும் போக்குவதற்கு பாதாம் பிசின் வெயில்காலத்தில் பரிந்து வந்தாள் உடலுக்கு மிகவும் நன்மை.
தற்காலத்தில் ஆண்களுக்கு அதிகமாக ஆண்மை குறைவு ஏற்படுகிறது. இந்த ஆண்மை குறைவுக்கு பாதாம் பிசினை தினமும் அல்லது வாரத்தில் நான்கு உள்ள மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டால் ஆண்மை குறைவு முற்றிலும் குணமடையும் உள்ளன. ஆயுர்வேதத்தில் கூறியுள்ளதாக பல ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாதாம் பிசினை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான உடல் பலம் ஏற்படும்.
உடல் மெலிந்து இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமென்றால் தினமும் பாதாம் பிசின் சிறிதளவு பாலிலோ தண்ணீரிலோ ஊற வைத்து காலையில் எழுந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
பாதாம் பிசினை தினமும் சாப்பிட்டு வந்தால் ஜிம்முக்கு செல்லும் ஆண்களுக்கு தசை மிகவும் வலிமையாகும் மேலும் மூட்டுக்கள் வலுப்பெறும்.
பாதாம் பிசின் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து நீக்கி விடும்.
சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படும் இதற்கு தினமும் பாதாம் பிசின் பாலில் கலந்து சிறிதளவு மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் முற்றிலும் குணமடையும்.
பாதாம் டிசைனில் மிக அதிக அளவில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. பாதாம் பிசினை நாம் சாப்பிட்டால் பசியை அடக்கிவிடும்.
பாதாம் பிசினை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைக்க உதவும். மேலும் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அந்த கால கட்டங்களில் தினமும் பாதாம் பிசினைப் பாலில் கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்படும் இந்த தோல் சுருக்கத்தை முற்றிலும் குணமடைய செய்யும் பாதாம் பிசின் ஆகும்.
சிலருக்கு வெயில் காலத்தில் வயிற்றில் சில கோளாறுகள் ஏற்படும் இந்த சிறிய சிறிய வயிற்று கோளாறுகளை நாம் பாதாம் பிசின் சாப்பிடும் போது அது தானாகவே குணமாகிவிடும்.
தற்போதைய காலகட்டங்களில் மக்கள் அதிகமாக துரித உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அசிடிட்டி, செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க பாதாம் பிசின் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும்.
பாதாம் பிசின் கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களின் எலும்புகளை மிகவும் வலிமையாக்கும். இவை அவர்கள் கற்பகாலத்தில் குழந்தை பெற்றெடுப்பதற்கு ஒரு பலத்தை அளிக்கும்.
வெயில் காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வெப்பம் காரணமாக சிறுநீரகத்தில் ஒரு எரிச்சல் ஏற்படும், இந்த எரிச்சலுக்கு பாதாம் பிசினை பாலில் கலந்து ஒரு மிதமான சூட்டில் குடித்து வந்தால் சிறுநீரக எரிச்சல் முற்றிலும் குணமடையும்.
பாதாம் பிசின் சாப்பிடும் முறைகள்
பாதாம் பிசின் அதிகபட்சமாக எட்டு மணி நேரம் தண்ணீர் அல்லது பாலில் ஊற வைத்து அதை பயன்படுத்த வேண்டும்
பாதாம் பிசினைப் பாலில் அல்லது தண்ணீரில் ஊறவைத்து மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்தோ அல்லது சர்பத் ஜிகிர்தண்டா போன்ற குளிர்பானங்களில் கலந்து குடிக்கலாம்
பாதாம் பிசின் பாயாசம் வைக்கும்போது அதில் இறுதியாக சிறிதளவு சேர்த்து பிரிட்ஜில் வைத்து கூலிங் செய்து அதை குடித்தால் மிக அற்புதமாக இருக்கும்.