சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
![Body Parts in Tamil | உடலில் உள்ள பாகங்கள்](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/parts-Of-Human-Body-In-Tamil-850x560.jpg)
Body Parts in Tamil | உடலில் உள்ள பாகங்கள்
மனித உடலில் பல்வேறு பாகங்கள் உள்ளன இந்த அனைத்து பாகங்களும் ஒன்றாக செயல்பட்டு இயங்கினால் மட்டுமே உடல் இயங்கும்.மனித உடல் என்பது ஒரு கற்பனைக்கு எட்ட முடியாத அளவுக்கு ஒரு அற்புதமான ஒரு படைப்பாகும். மனித உடலானது பல்வேறு பாகங்களால் கை, கால், தலை, கண், மூக்கு, வாய், காது, விரல், போன்ற பல்வேறு பாகங்களால் ஆனவை.
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/4-19.jpg)
இவை அனைத்தையும் நம் மூளை என்னும் ஒரு உறுப்பு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது .இவை அனைத்து பாகங்களும் இயங்குவதற்கு நம் மூளை கட்டளை இடுகிறது. உதாரணத்திற்கு நாம் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றாள் நம் மூளை அந்த செயலை செய்யக்கூடிய உறுப்புகளுக்கு தகவலை அனுப்பி அந்த உறுப்பை அந்த செயலை செய்வதற்கு தூண்டும் .
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/5-20.jpg)
இந்தப் பதிவில் நாம் பார்க்கக்கூடிய சில உறுப்புகளில் கை, கால், கண் ,காது ஏதாவது ஒரு உறுப்பு செயலிழந்து விட்டால் கூட நம் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்பட போவதில்லை. மேலும் அந்த உறுப்பு செயல் படாமல் விட்டாலும் உடல் இயங்குவது நிறுத்தப் போவதில்லை .ஆனால் இந்த உறுப்பு செயல்படாமல் இருந்தால் நாம் செய்யும் அன்றாட வாழ்க்கையில் அதிக தடுமாற்றங்கள் ஏற்படும். இந்தப் பதிவில் நாம் சில உடல் உறுப்பு மற்றும் அதன் செயல்களைப் பார்ப்போம்
தலைப்பகுதி
நம் உடலில் மிக முக்கியமான பகுதி தான் தலைப்பகுதி. இந்த தலையில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது உடல் இயக்கத்தை நிறுத்திவிடும். இந்தத் தலைப் பகுதியில்தான் முக்கியமான உறுப்பான மூளைக்கும் இருக்கின்றன.
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/1-17.jpg)
இந்த மூளை தான் உடலுக்கு அனைத்து தகவல்களையும் அனுப்புகின்றன. இந்த மூளைப் பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் ரத்தக் கசிவோ அல்லது ரத்த அடைப்பு ஏற்பட்டால் விளைவாக உடலில் சில பகுதிகள் இயங்காது .மேலும் மூளை மிக அதிகமாக பாதிக்கப்பட்டால் உடல் செயல் இழந்து கோமா நிலைக்கு செல்லக்கூடும். மேலும் தலைப்பகுதியில் தான் முடி, கண், காது, வாய், பல், நாக்கு, மூக்கு, இமைகள் போன்ற பல்வேறு உறுப்புகள் அமைந்துள்ளன .அதில் சிலவற்றை வரக்கூடிய பதிவில் பார்ப்போம்.
கண்
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/6-18.jpg)
கண் என்பது உடம்பில் உள்ள தலைப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் மனித உயிர் ஜீவராசிகளுக்கு இரண்டு கண் அமைந்துள்ளது. வலது கண் மற்றும் இடது கண், மேலும் சில உயிர் ஜீவன்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கண்கள் கூட அமைந்திருக்கின்றன. கண் ஆனது நம்மை சுற்றி இருப்பதை பார்ப்பதற்காக நம் உடலில் அமைந்துள்ளன. நமது இரண்டு கண்ணில் ஏதாவது ஒரு கண் செயல் இழந்து விட்டால் கூட மற்றொரு கண் மூலம் நாம் பார்க்க முடியும். இந்த உலகில் சில மனிதர்களுக்கு இரண்டு கண்ணும் கூட பார்வை இழந்து இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றனர்.
காது
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/5-19.jpg)
காது என்பது நம் தலையின் இரண்டு புறமும் அமைந்துள்ளது .காது மூலம் நாம் ஒருவர் பேசுவது ,ஒரு ஒளி, ஒரு சத்தம் போன்றவற்றை நாம் உணர்வதற்கு அமைந்துள்ளது. காது என்பது உடலில் ஒரு முக்கியமான ஒரு உறுப்பாகும் ஒருவருக்கொருவர் அவர்களின் கருத்துகளை பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுகிறது.
மேலும் இந்த உலகில் சிலர் இரண்டு காதுகளும் கேட்கும் திறன் இல்லாமல் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அவர்கள் ஒருவர் பேசும் பொழுது அவர்களின் வாய் அசைவை வைத்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று உணர்ந்து, அதற்கு பதில் அளிப்பார்கள். இது காது கேட்காத அவர்களுக்கு கடவுள் கொடுத்த ஒரு அறிவு ஞானம் ஆகும் .
மூக்கு
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/2-17.jpg)
மூக்கு என்பது நம் தலையின் முன் பகுதியில் அமைந்துள்ளது, நம் உடலில் மூக்கு 2 செயல்களுக்கு பயன்படுகிறது முதலாவது சுவாசிப்பதற்கு பயன்படுகிறது, பின்னர் இரண்டாவதாக காட்டிலுள்ள சுவாசங்களை உணர்வதற்காக பயன்படுகிறது. பொதுவாக நம் உடலில் இரண்டு வகையாக சுவாசத்தை நுரையீரலுக்கு கொண்டு செல்ல முடியும் ஒன்று மூக்கின் வழியாக இன்னொன்று வாயின் வழியாக. ஆனால் சுவாசம் என்பது மூக்கின் வழியாக மட்டுமே செல்லும் வழியில் நாம் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது . ஏனென்றால் நாம் மூக்கின் வழியாக செல்லும் காற்றின் உள்ள சில பில்டர்கள் போன்ற உறுப்புகள் உள்ளன இது காற்றில் உள்ள மாசுக்களை சுத்தம் செய்து தூய்மையான காற்றை நுரையீரலுக்கு அனுப்பும்.
ஆனால் நம் வாயில் வழியாக மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது அதை சுத்தம் செய்யாமல் வெளியில் உள்ள காற்றை அப்படியே நுரையீரலுக்கு அனுப்பும். எனவே நாம் மூச்சு காற்றை மூக்கின் வழியாக மட்டும் இழுத்து நாம் நுரையீரலுக்கு அனுப்புவது மிகச்சிறப்பு . மேலும் வெளியில் உள்ள வெப்பநிலையை முகில் உள்ள சில உறுப்புகள் சீராக்கி பின்னர் நுரையீரலுக்கு அனுப்புகிறது . இதனால் உடல் வெப்பநிலை சீராக உள்ளன.
வாய்
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/3-18.jpg)
வாய் என்பது தலைப்பகுதியில் அமைந்துள்ளது வாய் என்பது நம் உடலில் எதற்கு பயன்படுகிறது என்றால் நாம் உடல் இயங்குவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது இந்த ஆற்றலானது நாம் உண்ணக்கூடிய உணவிலிருந்து பெறப்படுகிறது. அந்த உணவானது நாம் வாய் வழியாகத்தான் நாம் உடலுக்குள் செல்கின்றது வாய்ப்பகுதியில் நாக்கு, பல், எச்சில் போன்றவை இருக்கின்றன .
நாம் உண்ணும் உணவை நம் பர்கள் அதை மாவு போன்ற வடிவிற்கு அரைத்து .பின்னர் எச்சிலால் உள்ள ஆன்ட்டி அமிலங்கள் மூலம் உணவிலுள்ள கிருமிகளை அழித்து பின்னர் நாவால் ருசித்து அதை உடலுக்குள் செலுத்துகின்றன.இந்த அனைத்தும் கலந்த பணியை தான் வாய் செய்கின்றன.
முடி
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/3-17.jpg)
முடி என்பது நம் தலையின் மேல் புறத்தில் அமைந்துள்ளது .இந்த முடிவானது உடலில் எதற்காக உள்ளது என்று பார்த்தால். வெப்ப காலங்களில் நாம் வெளியே செல்லும் பொழுது வெப்பம் நம் தலையின் மேல் தான் அதிகம் தாக்கக்கூடும். அந்த தலைப்பகுதியில் முடி அடர்த்தியாக இருக்கும் பொழுது வெப்பம் அந்த முடியினை தாண்டி நம் உடலிலுள்ள தோல் மேல் படாமல் இருக்கும்.
நம் உடல் வெப்பம் அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது. மேலும் குளிர்காலத்தில் முடியாது ஒரு கவசம் போல் உடலை காக்கின்றது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற உப்புக்களை முடி வேர்கள் வழியாக வெப்பம் அதிகரிக்கும் பொழுது அந்த நீரை வெளியில் அனுப்பி உடலை வெப்பம் அதிகரிக்காமல் சிறிது குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது. மொத்தத்தில் முடியானது நாம் உடல் வெப்பத்தை குளிர் காலத்திலும் சரி வெயில் காலத்திலும் சரி சீராக வைப்பதற்காக அமைந்துள்ளது.
பல்
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/18.jpg)
பல் என்பது நம் உடலில் தலைப்பகுதியில் உள்ள வாயில் அமைந்துள்ளது பல் ஆனது நாம் உண்ணும் உணவை நன்றாக அரைத்து அதை எளிமையாக செரிமானம் செய்யும் அளவிற்கு அதை மாற்றி வயிற்றுக்கு அனுப்புகிறது.
நமக்கு பல் பிறக்கும்பொழுது சிறிதாக இருந்து பின்னர் வயதாகும் பொழுது அது கீழே விழுந்து பின்னர் நல்ல ஒரு அடர்த்தியான வலுவான பற்கள் ஆக உருவாகிறது. நம் பல் வலிமையாக இருந்தால் மட்டுமே நாம் அசைவ உணவுகளையும் அல்லது வலுவான உணவுகளையும் உண்ண முடியும்.மேலும் இவ்வளவு சிறப்பும் மிகுந்த நம் பர்களை நாம் மிகுந்த சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வேப்பம் குச்சியால் தினமும் காலை மாலை இரண்டு நேரம் பல் சுத்தம் செய்தாள் பல்லில் எந்த ஒரு கிருமியும் அண்டாது.
நாக்கு
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/19.jpg)
நாக்கு என்பது நம் தலைப்பகுதியில் உள்ள வாய் பகுதியில் இருக்கின்றது நாக்கு என்பது சுவையை கண்டுபிடிக்கக் கூடிய ஒரு உறுப்பாகும் நாம் எந்த ஒரு உணவை அது நாக்கின் மேல் உள்ள சிறுசிறு மென்மையான ஒருவிதமான உறுப்பு இருக்கின்றது .
இது நாம் உண்ணும் உணவில் என்னவிதமான ருசி இருக்கின்றது என்று உணர்ந்து அதை மூளைக்கு அனுப்புகிறது ஒரு வேளை உணவு காரமாக இருக்கின்றதா, அல்லது இனிப்பாக இருக்கின்றதா, அல்லது புளிப்பாக இருக்கின்றதா என்று ருசியை உணர்ந்து தகவலை மூளைக்கு அனுப்புகிறது.
இமைகள்
![](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/4-18.jpg)
இமைகள் என்பது நம் தலையில் உள்ள கண்ணுக்கு வெளியே அமைந்துள்ளது. இதன் செயல் என்னவென்றால் நம் கண்களை தூசி, துகள்கள் போன்றவற்றிலிருந்து நாம் கண்ணை காப்பாற்றுவது. திடீரென்று ஏதாவது ஒரு பொருள் நாம் கண் அருகில் வந்தாள் ஒரு நொடியில் கண் இமைகள் மூடிக் கொள்ளும்.ஒவ்வொரு உயிரினங்களுக்கு இமைகள் என்பதே இருக்காது உதாரணத்திற்கு மீன்கள். நம் கண்ணிற்கு ஒரு சிறந்த பாதுகாப்பு கவசம் என்னவென்றால் உண்மைகள் மட்டும்தான்.
உடல் பகுதி
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/1-18.jpg)
உடல் பகுதியில் தான் நுரையீரல், இதயம், வயிறு போன்ற பல்வேறு உறுப்புகள் இருக்கின்றன. இதில் நுரையீரல் என்பது உயிர் வாழ்வதற்கான சுவாசங்களை உள்ளே இழுத்து பின்னர் நுரையீரலிலிருந்து ரத்தத்தில் ஆக்சிஜன் செலுத்துகிறது. இந்த ஆக்கி ஜான் ஆனது ரத்தக்குழாயில் ரத்தத்தின் மூலமாக உடல் முழுவதும் பரவியது.
இதயம் என்பது உடலிலுள்ள ரத்தத்தை அனைத்து பகுதிகளுக்கும் சீராக செலுத்துகிறது. இதயம் தான் உடலில் ரத்தம் எந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அந்தப் பகுதிகளுக்கு ரத்த குழாய்கள் மூலம் செலுத்துகிறது. வயிர் என்பது நாம் உண்ணும் உணவை முற்றிலும் ஜீரணம் செய்து அதில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்கிறது. மேலும் அந்த செரிமான அடைந்த உணவை சிறுகுடல் மற்றும் பெருங்குடல் அனுப்பி அதில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் .
வயிறு
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/8-19.jpg)
வயிர் என்பது உடலின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது இந்த வயிற்றின் வேலை என்னவென்றால் நாம் வாய் வழியாக செல்லக்கூடிய உணவு வயிற்றுப்பகுதிக்கு வந்தபின்னர் . அந்த உணவை ஜீரணம் செய்வது தான் வயிற்றின் பணியாக உள்ளது. இந்த வயிற்றுப் பகுதியில் பல செரிமான அமிலங்கள் சுரந்து அந்த உணவை முற்றிலும் செரிமானம் செய்கிறது . நாம் உண்ணும் உணவை பொறுத்தே செரிமானம் செய்யும் நேரம் மாறுபடுகிறது . அசைவ உணவு நாம் சாப்பிட்டால் அது செரிமானம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதுவே நாம் பழங்கள் போன்ற மெல்லிய உணவுகள் சாப்பிட்டால் விரைவில் செரிமானம் ஆகிவிடும் .
நெஞ்சு
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/7-18.jpg)
நெஞ்சு பகுதி என்பது உடலில் தலைக்கு கீழே அமைந்துள்ளது. இந்த நெஞ்சு பகுதியில்தான் நுரையீரல் மற்றும் இதயம் செயல்படுகின்றனர் . நுறை ஈரல் என்பது காற்றை மூக்கின் வழியாக உள்வாங்கி. நுரையீரலிலிருந்து உடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ரத்தநாளங்களின் மூலம் உடல் முழுவதும் செலுத்துகிறது.மேலும் நுரையீரலுக்கு பாதுகாப்பாக நெஞ்சு பகுதி சுற்றி எலும்பு அமைப்பு உள்ளது.
இந்த அமைப்பு நுறை ஈரல் மற்றும் இதயத்தை மிக பாதுகாப்பாக வைத்துள்ளது. மேலும் இதயம் நெஞ்சு பகுதியில்தான் அமைந்துள்ளது இதயம் என்பது உடலில் இரத்த ஓட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர்கின்றது இதயத்தின் மூலம் தான் கெட்ட ரத்தம் மற்றும் நல்ல ரத்தம் என பிரித்து நல்ல ரத்தம் உடல் முழுவதும் ரத்த நாளங்கள் மூலம் செலுத்துகின்றது .
கைப்பகுதி
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/9-18.jpg)
கை பகுதி என்பது உடலின் கழுத்துக்குக் கீழே நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. மனிதர்களுக்கு இரண்டு கைகள் உள்ளன. இந்த இரண்டு கைகளிலும் தோல்பட்டை, விரல்கள், மணிக்கட்டு ,கை, மூட்டு நகங்கள், போன்ற பல்வேறு அமைப்புகள் உள்ளன. நாம் எந்த ஒரு செயல் செய்வதற்கு கை முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த உலகில் சிலர் இரண்டு கைகள் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை ஆனந்தத்தோடு வாழ்ந்து வருகின்றனர் .
விரல்
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/10-17.jpg)
விரல் என்பது கையின் நுனிப்பகுதியில் அமைந்துள்ளது. மொத்தத்தில் நாம் ஒரு கையில் ஐந்து விரல்கள் இருக்கின்றன .மொத்தமாக இரண்டு கைகளையும் சேர்த்து 10 விரல்கள் இருக்கின்றன. ஒரு சிலருக்கு ஒரு கையில் ஆறு விரல் இருக்கின்றன .
விரல் என்பது ஒரு புனிதமான உறுப்பாகும் நாம் ஒரு செயலைச் செய்யும் பொழுது ஒரு பொருளையோ அல்லது ஒரு செயலை செய்வதற்கு விரல் இருந்தால் மட்டுமே அதை நாம் செய்ய முடியும்.நம் உடலில் விரல் செயல்படாமல் இருந்தால் நாம் எந்த ஒரு செயலையும் விரைவாக செய்ய முடியும் .
தோள்பட்டை
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/17.jpg)
தோள்பட்டை என்பது நாம் கையையும் உடலையும் இணைக்கக்கூடிய பகுதி ஆகும். இந்தப் பகுதி எவ்வளவு வலிமையாக உள்ளதோ அவ்வளவு வலிமை தான் நம் கைகளில் இருக்கும். ஒரு சில மக்களுக்கு தோல்பட்டை என்பது மிக வலிமையற்ற நிலையில் இருக்கக்கூடும். அவர்களினால் அந்தக் கையில் எந்த ஒரு செயலையும் வேகமாகவோ அல்லது எடை அதிகமாக உள்ள பொருட்களையோ தூக்க முடியாது.
எனவே தோள்பட்டை என்பது மிக வலிமையாக இருக்க வேண்டும்.தோள்பட்டையை வலுப்படுத்துவதற்கு உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால் கண்டிப்பாக சிறிது நாட்களில் வலுவடைந்து விடும்.
நகம்
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/11-17.jpg)
நகம் என்பது நம் கையிலுள்ள விரலின் நுனியில் இருக்கின்றன . நகம் ஆனது நம் விரலில் இருப்பதற்கு காரணம் என்னவென்றால். ஒரு பொருளை நாம் புடிக்கும் பொழுது அந்த பொருள் நம் கையை விட்டு நழுவாமல் நல்ல ஒரு வலுவான பிடியாக இருப்பதற்கு இந்த நகம் பயன்படுகின்றன. முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் வேட்டையாடும் பொழுது மரத்தின் உச்சியில் நின்று வேட்டையாடுவார்கள்.
மேலும் விலங்குகள் ஏதேனும் வருகின்றதா என்று ஒரு மரத்தின் உச்சியில் இருந்து பார்ப்பார்கள் ஒரு மரத்தில் ஏறுவதற்கு நகங்கள் இருந்தால் மட்டுமே நமக்கு அந்த மரத்தில் ஏறுவதற்கு ஒரு பிடி கிடைக்கும் . எனவே இந்த விரலில் உள்ள நகங்கள் நமக்கு பயன்படுகின்றன . நகம் என்பது ஒரு முறை வெட்டினால் கூட மீண்டும் வளரக்கூடியது.நம் விரல்களில் உள்ள நகங்களை வெட்டினாள் நமக்கு எந்த ஒரு வலியும் ஏற்படாது
கால் பகுதி
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/13-5.jpg)
கால் பகுதி என்பது உடலில் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. கால் பகுதியில் பல்வேறு உறுப்புகள் சேர்ந்துள்ளது. நம் உடல் அசைவதற்கு, நடப்பதற்கு உதவியாக இருப்பது கால் தான். காலில் ஏதாவது ஒரு பகுதி செயல்பாட்டில் குறை இருந்தால் .
நாம் நடப்பதில் தடுமாற்றம் ஏற்படக் கூடும். கால் பகுதியில் தொடை, முழங்கால் ,மூட்டு, பாதம், மணிக்கட்டு, விரல்கள், நகங்கள் இருக்கின்றன.நம் உடல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கு கால் பகுதிதான் உதவுகிறது . நாம் உடலில் உள்ள மொத்த எதையும் நம் கால் பகுதிதான் சுமக்கின்றன எனவே கால் பகுதி வலுவாக இருந்தால் மட்டுமே நாம் அன்றாட வாழ்க்கையில் பயணிக்க முடியும்
தொடை
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/2-18.jpg)
தொடை என்பது காலின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. தொடையின் பலத்தால் மட்டுமே நாம் அமரவோ . சட்டென்று நடப்பதற்கு போன்ற செயல்களுக்கு உதவுகிறது . நாம் எப்பொழுதும் தொடையை மிக வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் தொடைப்பகுதி தான் நம் காலும், உடலும் சேரக்கூடிய பகுதியாகும்.
முழங்கால்
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/14-1.jpg)
முழங்கால் என்பது நம் தொடைக்கும் , பாதத்திற்கும் நடுவே உள்ள பகுதி ஆகும் .இந்தப் பகுதியின் வலிமையால் மட்டும் தான் நாம் ஓடவும், நடக்கவும் முடியும். இந்தப் பகுதியில் உள்ள தசைகள் வலுவடைந்து இருந்தால் நாம் நடக்க முடியாது.
மூட்டு
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/12-12.jpg)
உடலில் மூட்டு என்பதே தொடை மற்றும் முழங்கால் ஆகிய பகுதியில் இணைப்பதுதான் மூட்டு எனப்படும். இப்போதைய காலகட்டங்களில் வயதானவர்களுக்கு மூட்டு தேய்மானம் ஏற்படுகின்றன.
மூட்டு தேய்மானம் என்பது உடல் உழைப்பு குறைவாக செய்தாலும் அல்லது கால்சியம் குறைவாக நம் உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு தேய்மானம் அதிகமாக ஏற்படுகின்றன இந்த மூட்டு தேய்மானம் பிரச்சனையிலிருந்து நாம் மீள்வதற்கு கால்சியம் உள்ள பொருட்கள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் , மேலும் உடல் உழைப்பு நாம் கண்டிப்பாக நம் வாழ்க்கையில் இருக்க வேண்டும் .
பாதம்
![Body Parts in Tamil Body Parts in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/16.jpg)
பாதம் என்பது மொத்த உடலையும் தாங்கும் ஒரு உறுப்பாகும். இந்த பாதம் தான் உடலை சமப்படுத்தி நாம் கீழே விழாமல் நடப்பதற்கு உதவுகிறது. பாதத்தில் உள்ள நரம்பு ஆனது உடலில் உள்ள எல்லா பகுதியின் நரம்பு உடன் தகவல் பரிமாற்றம் உள்ளது. எனவே நாம் பாதத்தை அவ்வப்போது சுடு தண்ணீரில் சுத்தம் செய்து வந்தால் உடல் சூடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படாது.