சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
உடல் சோர்வு நீங்க செய்ய வேண்டிய விஷயங்கள் / Body Tiredness Relief Tips In Tamil
உடல் சோர்வு என்பது பல்வேறு தரப்பு மக்களிடையே தற்கால வாழ்க்கையில் அதிகரித்துள்ளது சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பலருக்கு இந்த உடல் சோர்வு என்பது அப்போது வந்து செல்கிறது இதற்கு பல்வேறு காரணங்களை நாம் கூறலாம் முதலாவது உணவு பழக்க வழக்கங்கள் இரண்டாவது தூக்கமின்மை மூன்றாவது கவலை இந்த மூன்றும் நாம் சரியாக செய்தால் உடல் சோர்வு முற்றிலும் குணமாகும்
மேலும் நாம் உண்ணும் உணவில் சில சத்து நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் சோர்வு காண மூன்று காரணங்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
உணவுப் பழக்கங்கள்
நாம் உண்ணும் உணவில் பல்வேறு விதமான மினரல்ஸ் மட்டும் புரோட்டீன்கள் இருக்க வேண்டும் ஆனால் தற்போதைய வேகமான காலங்களில் நாம் உண்ணும் உணவிற்கான முக்கியத்துவத்தை நாம் கொடுப்பதில்லை, அதிலும் உணவு அருந்ததற்கான நேரத்தைக் கூட நாம் முழுமையாக செலவு செய்வதில்லை போகும் அவசரத்தில் உணவை சிறிதளவு மட்டும் சாப்பிட்டு விட்டு செல்கிறோம்
அந்த உணவில் நம் உடம்புக்கு தேவையான மினரல் மற்றும் புரோட்டீன்கள் கண்டிப்பாக நாம் உடம்பில் விற்கு கிடைப்பதில்லை எனவே தினமும் காலை எழுந்தவுடன் முந்திய இரவு ஊறவைத்த பாதாம் நான்கு, முந்திய இரவு ஊறவைத்த உலர் திராட்சை நான்கு, இரண்டு பேரிச்சம்பழம் ஆகியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் நாம் உடலில் ரத்தம் அதிகரிக்கும் மேலும் பாதாமில் உள்ள புரோட்டின் காலையில் சிறிதளவு புரோட்டின் உடலுக்கு அளித்து ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் , தினமும் பேரிச்சம்பழத்தை இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் மிக வலுவடைந்து விடும்
மேலும் காலை உணவு ஆக இரண்டு முட்டை சாப்பாட்டில் சேர்த்து வர வேண்டும் இது நம்ம உடம்பிற்கு தேவையான புரதத்தை காலையில் நம் உடலுக்கு அளித்து விடும் எனவே அந்த நாள் முழுவதும் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கக்கூடும். நம் உணவில் அதிக கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் அரிசி வகைகளை சிறிது அளவில் குறைத்து காய்கறிகள் போன்றவற்றை அதிகம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்
தண்ணீரில் தண்ணீரில் ஆறு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஊற வைத்த நிலக்கடலையை தினமும் காலை அல்லது மாலை சாப்பிட்டு வந்தால் உடல் மிகவும் வலிமை அடையும் உடலில் சோர்வில் முற்றிலும் குணமடையும்
தூக்கமின்மை
ஒரு மனிதன் தினமும் குறைந்த அளவு ஆறு மணி நேரமாகவது தூங்க வேண்டும் அதிலும் இரவு நேரமாக படுக்கையறைக்கு சென்று விட்டு காலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு எந்திரிக்க வேண்டும் அதன் பின்னர் உடற்பயிற்சி ஏதேனும் சிலவற்றை செய்து விட்டு காலையில் நன்றாக குலுங்கண்ணியில் குளித்துவிட்டு தூங்கி எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை முடித்துவிட்டு உங்களது பணியை நீங்கள் ஆரம்பிக்கலாம் இவ்வாறு நீங்கள் செய்தால் உங்கள் உடல் மற்றும் உள்ளம் ஆரோக்கியமாக இருக்கும்
மேலும் அன்று நாள் முழுவதும் மிக சிறப்பாக இருப்பீர்கள் தினமும் குறைந்த அளவு ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூக்கம் அவசியம் இந்த தூக்கத்தின் நேரம் என்பது ஒவ்வொருவரின் உடல் வாக்கை அமைந்துள்ளது ஒரு சிலர் ஆறு மணி நேரம் தூங்கினாலே அவர்களுக்கு புத்துணர்ச்சி இருக்கக்கூடும்
சிலர் 8 மணி நேரம் தூங்கினால் தான் அவர்களுக்கு உடல் புத்துணர்ச்சியாக இருக்கக்கூடும் எனவே இரவில் தூங்குவது தான் சரியாக இருக்கக்கூடும் பகலில் நீங்கள் ஆறு மணி நேரம் தூங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கக் கூடாது இரவில் தான் பல்வேறு விதமான அமிலங்கள் நம் உடலில் உற்பத்தியாகும் அதுவும் முழுமையாக இருட்டில் தூங்குவதினால் அந்த அமிலங்கள் சுரக்கக்கூடும் எனவே இரவில் ஆறு மணி நேரம் தூங்குவதே சரியாக இருக்கக்கூடும்
மனச்சோர்வு
மனச்சோர்வு என்பது உடல் சோர்வை குறிக்க கூடியதாக கூட நாம் வைத்துக் கொள்ளலாம் ஏன் மனசு மிக வருத்தமாகவோ சோர்வாகவோ இருந்தால் கண்டிப்பாக உடலும் சோர்வடைந்து விடும் மனதில் தென்பு மற்றும் புத்தகச்சி மிக அவசியம் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பீர்கள் என்றால் அவ்வளவு உடல் ஆரோக்கியமாக இருக்கக்கூடும்
மனக்கவலையே உடலில் பல்வேறு விதமான நோய்களை வர வழி வகுக்கும் எனவே எப்பொழுதும் மிக சந்தோஷமாக இருங்கள்
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர் ஜீவராசிகளுக்கும் கவலைகள் இருக்கக்கூடும் அதனால் நீங்கள் எந்த ஒரு கவலையும் மனதில் போட்டு உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் ஒரு கவலை ஏற்பட்டால் சிறிது நாட்களில் அதோட மிகப் பெரிய நம்மளுக்கு ஒரு அதிர்ஷ்டம் வரக்கூடியது என்று நீங்கள் அறிந்து சந்தோஷமாக வாழ்க்கையை வழிநடத்திச் செல்லுங்கள்