சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Brother & Sister Quotes in Tamil | அண்ணன் தங்கை மேற்கோள்கள்
அண்ணன், தங்கை உறவி என்பது மிக புனிதமான உறவாகும். நல்ல குணம் படைத்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்போடும், பாசத்தோடும் இருப்பார்கள். அண்ணன், தங்கையில்லா வீடு அமைதியாகவே இருக்கிறது, அண்ணனாக மட்டுமின்றி நண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும் மாறிவிடுகிறார்கள்.
அண்ணனுக்காக தங்கைகள் வீட்டில் அப்பாக்களிடம் கோபம் கொள்வதில் தங்கைகளே முதலில் இருக்கிறார்கள். அண்ணன் தங்கைகள் உறவென்பது அன்பும், பாசமும் நிறைந்த ஓர் உறவு. இருப்பினும், ரத்த பந்தமும் பாசமும் விட்டுப்போகாது. இப்படிப்பட்ட அண்ணன், தங்கை பாசத்தை வெளிப்படுத்தக் கூடிய மிகச் சிறந்த மேற்கோள்களை காண்க
- “ஒரே கருவறையில் வளர்ந்து, ஒரு தாய் வயிற்றில் பிறந்த நமக்கு, ஏனோ காலம் ஒன்றாக வாழ வழி வகுக்கவில்லை”
- “இருபது வருடத்திற்கு மேல் நாம் ஒன்றாக தான் வளர்ந்தோம் இன்று காலத்தின் பிடியில் அவரவர் வாழ்க்கைக்காக வேறு வேறு இடங்களில் வசிக்கிறோம்”
- “ஆயிரம் உறவுகள் நம்மிடம் சொந்தம் புகுந்தாலும், ஒரு சகோதரனின் அன்பும் பாசமும் என்றுமே தனிச்சிறப்பு தான்”
- “உடன் பிறந்தவர்களிடம் சண்டை போடவும் தெரியும், சமாதானமாகவும் தெரியும் ஆனால், என்றும் அன்பை மட்டும் குறைக்கத் தெரியாது”
- “அடித்துக்கொள்வது மட்டும் எங்கள் அண்ணன் தங்கை உறவில்ல எங்களை போல அன்பு செய்யவும் யாருமில்லை அதுதான் எங்கள் அண்ணன் தங்கை உறவு”
- “நண்பனை போல் நினைவுகளை கொட்டும் உயிரோட்டமான அகராதியின் மறுவடிவம் அண்ணன்”
- “அண்ணன் தங்கை உறிவென்பது வெறும் கையில் கட்டும் கயிறல்ல அது இதயத்தால் கட்டப்படுவது”
- “எத்தனை முறை அம்மா திட்டினாலும் ஓய்வதே இல்லை அண்ணன் தங்கை சண்டைகள்”
- “சந்தோஷமாக வாழ காசு, பணம் மட்டுமே முக்கியமில்லை பாசமான ஒரு உடன்பிறப்பு இருந்தாலே போதும்”
- “ஒரு ஆணின் சிரிப்பை பகிர்ந்து கொள்வதற்கும் கண்ணீரை துடைப்பதற்கும் இறைவனால் அனுப்பப்பட்டவள் உடன்பிறந்த சகோதரி”
- “உடன்பிறப்பாய் எண்ணி பாசத்தை மழையாய் பொழியும் வான்மேகம், நீ”
- “ஆயிரம் பந்தங்கள் இருந்தாலும் என் முதல் பந்தம் நீ அண்ணா”
- “நிலவினை போல இதயமானவன்.. தென்றலாய் என்னை மகிழ்விப்பவன்..”
- “சூரியனை போல கோபிப்பான்.. அந்த மோதல்களும் என்னிடம் முறையானவையே.. என்னை காணாவிட்டாலும் கண் துயிலான்.. கணபொழுதும் எனைப் பிரியான்..”
- “அவன் கைவிரல் பிடித்த ஞாபகம்.. இந்த பூமி சுழலும் வரை தொடர்ந்திடும்..”