சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு விவசாயிகள் கவனத்திற்கு | Central Government Announcement for Farmers
பிரதமர் கிசான் சம்மன் நிதியுதவித் திட்டத்தை பற்றிய விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு பிஎம் கிசான் சம்மன் உதவித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் சேமிப்புக் கணக்கில் அரசு நேரடியாக செலுத்து வருகிறது.
இதுவரை 11 தவணைகளை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ள நிலையில் தற்போது கடந்த மே 31ம் தேதி வரை 11வது தவணையை பிரதமர் மோடி விவசாயிகளுக்கு வழங்கினார். இதன்படி தற்போது 12வது தவணையை வரும் நவம்பர் மாதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரியவந்ததுள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தில் எவ்வளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல், புதிய அறிவிப்புகள் ஏதும் வந்துள்ளதா, அடுத்த தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்பது குறித்து விவசாயிகள் இதற்கு முன் pmkisan.gov.in என்ற இணையதளத்தில் சென்றுதான் பார்க்க முடிந்துள்ளது.
ஆனால் தற்போது விவசாயிகளின் செல்போனுக்கே முக்கிய அப்டேட் ஏதும் இருந்தால் தெரிவிக்கும் முறையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதன்படி இணையதளத்துக்குச் சென்று விவசாயிகள் தங்கள் செல்போன் எண்ணைப் பதிவுசெய்தால் இனிமேல் திட்டம் பற்றி அப்டேட்கள் உடனுக்குடன் அவர்களது செல்போன் எண்ணிற்கே வரும்.
எவ்வாறு செல்போன் எண்ணைப் பதிவு செய்வது பற்றிய விவரம்
- Pmkisan.gov.in இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
- பயனாளிகள் பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.புதிய பேஜ் திறக்கும்
- அதில் விவசாயி தங்கள் விவரத்தை பதிவு செய்ய வேண்டும். அதாவது பதிவு எண் அல்லது செல்போன் எண்ணை பதிவு செய்யலாம்.
- திரையில்தோன்றும் கேப்சா கோடை டைப் செய்ய வேண்டும்
pm kissa
- அதன்பின் ஓ.கே செய்தால், நம்முடைய விவரங்களைப் பெறலாம்.