சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கோவை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த யூனிஸ் திவ்யபாரதி தம்பதிக்கு பிறந்த 5 நாட்கள் ஆன பெண் குழந்தை காணாமல் போனது.
குழந்தையின் பெற்றோர் உறங்கிக் கொண்டிருக்கும் போது அதிகாலையில் குழந்தை மர்ம நபர்களால் கடத்தப்பட்டு உள்ளது. குழந்தையை கடத்திய மர்ம நபர்களை பிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா எதுவும் அமைப்பின் காரணமாக எதிரில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அக்குழந்தையை ஆட்டோவில் கடத்திச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. மேலும் கோவை திருப்பூர் பாலக்காடு போன்ற பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் பாலக்காடு மாவட்டம் கொழும்பு பகுதியில் அந்த குழந்தையை கடத்திச் சென்ற பெண்மணி போலீசரிடம் சிக்கிக் கொண்டால், பெண்மணியிடம் விசாரணை செய்து குழந்தையை போலீசார் மீட்டனர்.
பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பெற்றோர்களிடையே குழந்தையை ஒப்படைத்தனர் குழந்தையை பெற்றுக்கொண்ட தம்பதி, உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.