சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மனஉளைச்சல் கையாள்வது எப்படி-(DEPRESSION MANAGEMENT)
மன அழுத்தம், மனசோர்வு மற்றும் மனஉளைச்சல் போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்பதும் உண்டு. அதை நாம் அனுபவித்தும் இருக்கலாம் அல்லது அனுபவித்து கொண்டும் இருக்கலாம். இந்த மனஉளைச்சலால் உலகத்தில் மொத்தம் 34 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 18 முதல் 34 வயதில் உள்ளவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த பிரச்சனைகளால் மனா ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இது பள்ளி செல்லும் மாணவர்களில் இருந்து வேளைக்கு செல்பவர்கள், தொழில் மேற்கொள்பவர்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள், என எல்லாரும் இந்த மனஉளைச்சல் பரவலாக காணப்படுகிறது.
பள்ளி குழந்தைகளுக்கு வீட்டு பாடம் செய்யவேண்டும், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் இல்லையெனில் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் இதை ஒரு காரணமாக கொண்டு தரக்குறைவாக நடத்துவதால் சிறு வயதிலேயே மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
பணியில் இருக்கும் பணியாளர்கள் தனது வேலை பழு, குறித்த நேரத்தில் குடுத்த வேலையை முடிக்கவேண்டும் என்று மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம், சிலருக்கு தொலைதூர பயணம், சிலருக்கு வீட்டில் நடக்கும் பிரச்சனைகள், அதனால் வேளைக்கு செல்வதில் நேரம் தவறி செல்வது இதனால் தனது மேலாளர் அல்லது முதலாளி திட்டுவது இது போன்ற சம்பவங்கள் இந்த பணியாளர்களின் மனஉளைச்சலுக்கு பெரிதும் காரணமாக உள்ளது.
மேலும் தொழில் மோற்கொள்பவர்கள் தனது தொழில் நல்ல முன்னேற்றம் அடையவேண்டும், மாதமானால் சம்பளம் கொடுக்க வேண்டும், எந்த ஒரு பிரச்சனை இன்றி தொழில் நிக்காமல் நடக்க வேண்டும். எதாவது பிரச்சனை வந்தால் அவர் பெரும் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுவர்.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த மனஉளைச்சலும் இருக்காது என்று கருதப்படுகிறது அது முற்றிலும் தவறான கருத்து, மற்றவர்களுக்காவது அந்த இடத்தை விட்டு விலகி வேறு வேலை அல்லது விடுப்பு போன்ற விசியங்கள் மூலம் நாம் மனதை அமைதி படுத்திக்கொள்ளலாம். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் விடுப்பு என்பது கிடையாது காலம் முழுக்க செய்த வேலையை செய்து மிகவும் சகிப்புத்தன்மை கொண்டு காணப்படுவர். இதுவே அவர்களுக்கு பெரும் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுவர். மேலும் இவர்கள் சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, வீட்டின் வரவு செலவுகளை பார்ப்பது இதுபோன்ற பெரும் பொறுப்புகள் அவர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர் குழந்தைகள் இருந்தால் அவர்களை பராமரிப்பது இது போன்ற பல வேலைகள் அவர்களை மனா உளச்சலுக்கு தள்ளப்படும்.
மேலும் இந்த வரிசையில் பலர் இருப்பார்கள் அதில் முக்கியமாக வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் தனக்கு ஆசைப்படும் பொருள் கிடைக்காமல் இருப்பவர்கள்.
இதுபோன்றவர்கள் இதில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் பலர் பல மோசமான முடிவுகளை எடுக்கின்றன சிலர் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை மேற்கொள்கின்றன மேலும் தனக்கு ஆசைப்பட்டு கேட்கும் பொருளை பெற்றோர்கள் வாங்கித்தராமல் இருப்பது மனஉளைச்சலானது காதல் தோல்வி, அக்கம்பக்கத்தினர் கேலி மற்றும் கிண்டல் செய்வதனால், தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் இருப்பது, தேர்வை சந்திக்க தைரியம் இல்லாமல் மற்றும் தேவை இல்லாத விசியங்களுக்கு கூட தற்கொலை செய்வது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதுவே மற்றவர்கள் மீது இந்த மனஉளைச்சலானது வன்முறையாக மாறுகிறது குடும்பத்தில் ஏற்படும் சின்ன சண்டைகள் பெரும் கைகலப்பு அல்லது கொலையில் கூட முடியலாம். சிலருக்கு இதுலாம் ஒரு பிரச்சனையா! இதற்கு கோவப்படுவதே சரி இல்லை என்று கூறும் விசயத்துக்கு அவர்களால் கொலைநடந்திருக்கும், சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் டாக்ஸி ஓட்டுநர் பயணியை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த சம்பவத்தின் பின்னையை ஆராய்ந்து பார்த்தால் வண்டியில் ஏறுவதற்கு otp தவர்க சொல்லியதால் அவர் ஆத்திரம் அடைந்து கொலைசெய்ததாக அந்த ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் இதை பார்க்கும்போது அவர் மனஉளைச்சலில் எந்த உச்சத்தில் இருந்தார் என்பது கற்பனை செய்து கோடா பார்க்க முடியாது அந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை என்னவென்று நமக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இதற்காக தான் கொலையென்றால் அது சரியானதாக இருக்காது இது போன்ற சம்பவமானது கணவன் மனைவிக்குள் நடந்து இருக்கிறது காலையில் குழந்தைக்கு பல் விலகாமல் முத்தம் கொடுத்ததற்கு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து அது இறுதியில் கொலையில் முடிந்து உள்ளது மனைவி உயிரிழந்துள்ளார்.
இந்த மனஉளைச்சலை கையாள்வது எப்படி என்று பலரும் தெரியாமல் இந்த மாதிரியான முடிவுகளை எடுத்து தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் வரம்பு மீறிய கோவம் அதை எப்படி கட்டுப்படுத்துவது அது ஒரு மனநோய் என்று கூட தெரியாமல் அது ஒரு குணாதிசியமாக கருதி அதை கவனிக்காமல் விடுவது அவர்களுக்கு பெரிய ஆபத்தை உண்டாகும்
இது போன்ற கடும் கோவக்கார்கள் மற்றும் மனஉளைச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
இதில் பெரிதும் பதிப்படையாத நபர்கள் இதில் இருந்து விடுபடுவது எளிமையான முறியாகும், நமக்கு கோவம் தரக்கூடிய செயல் நடக்குமானால் அதை விட்டு விலகி இருப்பது நல்லது, மேலும் நாம் கோவம் அடைந்தாள் அந்த இடத்தை விட்டு நகர்வது நல்லது அதை வெறும் நல்ல மனநிலமையில் இருக்கும்போது அதை முடிப்பது நல்லது இலையெனில் நாம் கோவத்தில் எடுக்கும் முடிவானது தவறாக போகலாம் அல்லது நமக்கே ஆபத்தாக மாறலாம். மனஉளைச்சல் குறையவில்லை என்றல் தனக்கு பிடித்த நபர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுவது, சிலர் உணவு அருந்துவது போன்ற செயல்கள் செய்வது, சிலர் தூங்கிவிடுவார்கள், அதேபோல் அவரவர் விருப்பப்படி மனதுக்கு புடித்த செயல்கள் செய்து வந்தால் மனது சற்று அந்த சம்பவத்தை விட்டு விலகி விடும்
இவரு நாம் அடிக்கடி மனஉளைச்சல் ஆவது நமது மனது மட்டும் இன்றி நாம் உடலுக்கும் பல பிரச்சனைகள் வந்து சேரும் முடி உதிர்வு, உடல் பருமன், இதயநோய், மூச்சிறைப்பு ஏற்படலாம் இது போன்ற பல பிரச்சனைகள் வரும் இது அவர்களுக்கு மட்டும் இன்றி அவர் உடன் இருபருவர்களுக்கும் பிரச்சனைகளை உண்டாக்கும்
அதேபோல் ஒரு வாக்குவாதம் உண்டாகும்போது நம் எதிரிருப்பவர்கள் தவறாக கூட இருக்கலாம் அல்லது சரியாக கூட இருக்கலாம் நாம் அந்த வாக்குவாதம் பெரிதாகி முற்றும்போது நாம் அதில் இருந்து விலகுவது நல்லது அது தோல்வியாக இருக்கும் என்று எண்ணாமல் நாம் பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தோம் என்று எண்ணுவது நல்லது.
இவரு நாம் செயல் செய்யகளில் மட்டும் இன்றி நம் உணவுமுறைகளில் கூட இதை கட்டுப்படுத்த முடியும் அடிக்கடி கோவம் வரும் நபர்கள் காரமான உணவுகள் உண்பதை தவிர்க்கவேண்டும். அப்படியும் மனஉளைச்சல் ஏற்பட்டால் மேல் குறிப்பிட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றுங்கள் எதற்கும் ஒரு மனநல மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
பெருதும் பிரச்சனைகள் இன்றி மனதுக்கு புடித்த விசயங்களை செய்து வந்தாலே நாம் நீண்ட ஆயிளுடனும் மனநிம்மதியுடனும் இருக்கலாம் தேவையில்லாத அழுத்தத்தை எதுக்காமல் இருப்பது பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.