சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
டோலோ 650 மாத்திரை(Dolo650 Tablet)
டோலோ 650 மாத்திரை தயாரிக்கும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் அவர்கள் 300 கோடி வரிஏய்ப்பு செய்ததாக தெரியவந்துள்ளது. கடந்த வரம் அந்நிறுவனம் சொந்தமான 36 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அந்த மாத்திரையை கொரோன காலகட்டத்தில் மருத்துவர் பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு பரிசுகள் மற்றும் சுற்றுலா ஏற்பாடுகள் செய்து கொடுத்து முறையற்ற விளம்பரப்படுத்த ரூ1000 கோடி செலவு செய்ததை வருமான வரித்துறையினர் கண்டுபுடித்துள்ளனர். மேலும் பல்வேறு முறையில் வருமானத்தை குறைத்துக்காட்டி வரிஏய்ப்பு செய்தது வருமான வரி துறையினர் சோதனையில் தெரியவந்தது. மேலும் கணக்கில் கட்டப்படாத 1.20 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் 1.40 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.