சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Dolo 650 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!(Dolo 650 Tablet Uses in Tamil)
கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர் அதாவது மருத்துவர்கள் ஒருவருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ மருத்துவர் இதை பரிந்துரைத்தனர் பின்பு இதை தெரிந்து கொண்ட பலர் காய்ச்சலுக்கான அறிகுறி வந்தால் மருத்துவரை அணுகாமல் தாங்களே இந்த மாத்திரை எடுத்துக்கொண்டு இருந்தனர் ஒரு கட்டத்தில் அதிகமாக காய்ச்சல் வந்தால் இந்த மாத்திரையை அதிகமாக சாப்பிட தொடங்கினர். இதனால் பக்க விளைவு இருக்காது என்று அவர்கள் எடுத்தது பலருக்கும் பல விளைவுகளை ஏற்படுத்தியது சிலர் கொரோனா இருந்தும் பரிசோதிக்காமல் இந்த மாத்திரை சாப்பிட்டு வந்தனர் இது அவர்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது இது போல் இருந்தவர்கள் உயிரிழக்கவும் நேரிட்டது. மேலும் பக்க விளைவுகளும் ஏற்படும்.
இந்த மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பருவ கலத்தொற்று, காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற நோய்களுக்கு முன்னதாக அறிகுறிகள் தோன்றினால் அது வராமல் இருக்க நாம் இந்த மாத்திரையை சாப்பிடலாம் ஆனால் மருத்துவரின் அறிவுரை மிக அவசியம் அது மட்டும் இன்றி தற்போது ஒருவருக்கு காய்ச்சல் அதிகமாகி இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுகாமல் இத மாத்திரை சாப்பிடுகிறார்கள் அது மிகவும் தவறான செயல் இது பல பக்க விளைவுகளை உண்டாக்கும்.
இந்த மாத்திரை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அதில் பெரும்பாலும் கல்லீரல் பிரச்சனை, ரத்தசோகை, உடலில் வீக்கம், சரும பிரச்சனைகள், தடிப்புகள், வயிற்று போக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அளவுக்கு அதிகமான மாத்திரை எடுத்து கொள்வதால் இது போன்ற பிரச்சனை வந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது. பலரும் இந்த மாத்திரையை மருத்துவரின் ஆலோசனை இன்றி தான் இந்த மாத்திரையை சாப்பிடுகின்றன இது அவர்களுக்கு பெரும் விளைவை ஏற்படுத்தலாம் குறிப்பாக சிலர் வேறு ஒரு நோய்க்காக வேறு மாத்திரை சாப்பிட்டு வருவார் திடீர் என்று தாய் வைத்தால் அவர் இந்த மாத்திரை எடுத்து சாப்பிடுவர் அது அவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தலாம். மேலும் கர்ப்பினி பெண்கள் இது மட்டும் இன்றி எந்த ஒரு மாத்திரை சாப்பிடுவதாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை அவசியம். அதோடு குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் மருத்துவரின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்ல்து. மது அருந்திய பிறகு இந்த மாத்திரை சாப்பிடுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் உயிருக்கும் ஆபத்து வரும்.
எனவே குறிப்பிட்டதுபோல் அனைவரும் மருத்துவரின் அனுமதியோடு மாத்திரை எடுப்பது சிறந்தது. பிரச்சனை சரி செய்ய மாத்திரை சாப்பிட்டுவிட்டு, கடைசியில் அதுவே பெரும் பிரச்னை ஆகும்.