சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
இளநீர் பாயசம் | Preparation Of Elani Payasam In Tamil
இனிப்பு வகை உணவு எல்லோருக்குமே பிடித்த உணவாக இருக்கும். அதிலும் தென்னிந்திய விருந்துகளில் முக்கிய இடம் பிடிப்பது “பாயசம்”. சேமியா, ஜவ்வரிசி, அவல், பாசிப்பருப்பு, கேரட் என பலவிதமான பாயசம் உண்டு. இதில் பாராம்பாறிய சுவைகொண்ட இளநீர் பாயசம் செய்வதற்கு எளிதானது, மேலும் இது உடல் நலத்திற்கும் நல்லது. இளநீர் பாயசம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
இளநீர்- 200 மில்லி லிட்டர்
இளம் தேங்காய் – 200 கிராம்
பால் – ½ லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
மில்க்மெய்ட் – 1 காப்
முந்திரி, பாதாம், பிஸ்தா – சிறிது
சாரைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி – ¼ டேபிள் ஸ்பூன்
பச்சை கற்பூரம் – 1
நெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் இளம் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிவும். பின் அதை மிக்சியில் போட்டு பால் செர்த்து அரைத்க்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தாவை பொடிதாக நறுக்கிகொள்ளவும்.
பின்பு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதநோடு மில்க்மெய்ட் சேர்த்து கலக்கவும். பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். அதில் பச்சைக்கற்பூரம், ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதன் பின் ஒரு கடாயில் நெய் விட்டு அதில் சாரைப்பருப்பு, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவை சேர்த்து நன்கு மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும். பின்பு அதில் பால் சேர்த்து அடிப்பிடிக்காமல் 10 நிமிடம் கலக்கவும். பின்பு அடுப்பில் இருந்து இறக்கி, பால் ஆறும் வறை காத்திருக்கவும். பிறகு அதில் அரைத்த இளம் தேங்காயை செர்த்துக்கொண்டு, மேலும் அதில் கடைசியாக இளநீர் சேர்த்து நன்றாகக் கலக்கினால் இளநீர் பாயசம் தயார்.
தயாரான பாயசத்தை குளிரவைத்து பரிமறலாம்.