சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஏவியான் 400 மாத்திரையின் பயன்கள் (Evion 400 Tablet Uses in Tamil)..!
இன்று நாம் இருக்கும் சூழலில் உணவு அனைத்திலும் நாகரிக வளர்ச்சி அடைந்துள்ளோம். இதில் உணவு பழக்கத்திலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இதனால் நமது உடலும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால் உணவோடு மருந்தும் தற்போது தவிர்க்க முடியாத ஒரு விசயமாக இருக்கிறது. அதேபோல் இப்போது நாம் பார்க்க இருப்பது ஏவியான் 400 மாத்திரை பற்றி விரிவாக அதன் நலன்கள் மற்றும் அந்த மாத்திரை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பார்ப்போம்.
இந்த மாத்திரை வைட்டமின் E சத்து உள்ள மாத்திரை இது கேப்ஸுல்களாக மருந்து கடைகளில் கிடைக்கும், இந்த மாத்திரை வைட்டமின் E சத்து அதிகம் உள்ள மாத்திரை என்பதால் இது வைட்டமின் E சத்து குறைபாடு உள்ள நபர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
இந்த மாத்திரை எதற்காக பரிந்துரைக்கப்படுகிறது என்றால் இது முகப்பரு, வடுக்கள் மற்றும் வேறு எங்கும் பருக்கள் இருந்தால் இந்த மாத்திரை மூலம் சரி செய்யமுடியும். இதில் இருக்கும் வைட்டமின் E சத்து மூலம் தலைமுடிக்கு நன்மையாகும். இதனால் நமது தலை முடி கருநிறத்தில் மற்றும் அடர்த்தியாக வளரும்
மேலும் முடி உதிர்வை தடுக்கவும், தோல் அமைப்புகளையும் மேம்படுத்தும். மேலும் இது பல சிகிச்சைக்கு உதவுகிறது நெஞ்சு வலி, மாரடைப்பு, கால்வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
இந்த மாத்திரை மூலம் வரும் பக்கவிளைவு என்னவென்றால் ஆற்றல் இல்லாமல் போவது, வயிற்று பகுதியில் வலிகள் ஏற்படுவது, சிறு நீரகத்தில் வலிகள் ஏற்படுவது மேலும் வயிற்று போக்கு அதிகமாக இருக்கும். இதுபோன்ற வகையில் விளைவுகள் ஏற்பட்டால் யோசிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும், ஏனென்றால் இந்த மாத்திரை சாப்பிட்டால் பெரிதும் பக்க விளைவு ஏற்படாது. இந்த பக்க விளைவுகள் குரைவாக தான் இருக்கும், இருப்பினும் இதுபோன்ற ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த மாத்திரை மட்டுமின்றி எந்த மாத்திரையாக இருந்தாலும் மருத்துவரை பரிந்துரை என்பது மிக அவசியம் எனவே மருத்துவரின் பரிந்துரையோடு மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.