சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
போலி உறவுகள்..!(Fake Relationship Quotes in Tamil)
- எவ்வளவு தான் பாசம் வைத்தாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு.. நாம் மூன்றவது மனிதர்கள் தான்.
- ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்; ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்.
- தீடீரெனக் கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே! பொய்யான அன்பு காரியம் முடித்த பின் உன்னை விட்டு விலகி விடும்!
- தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும்! சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசமும் இருக்கும்!
- படிப்பு கற்றுத்தருவதை விட சிலரின் நடிப்பு சிறப்பாக கற்றுத்தரும் வாழ்க்கையை!
- முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட, அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்!
- நீ கேட்டு வாங்கும் அன்பு, கடைசி வரை வருவதில்லை!
- உனக்கு ஒரு முறை துரோகம் செய்தவன் உனக்கு மீண்டும் துரோகம் செய்வான் என்பதில் உறுதியாக இரு..!
- போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள்…
- துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் தூவப்படுகிறது..!
- நிரந்தரம் இல்லாத உலகம் சுயநலம் நிறைந்த உலகம் யாரும் யாருக்காவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம்..!
- தொல்லை செய்யாமல் தொடர்பில் இருங்கள்! யாரும் உங்களை தொலைக்க முயற்சிக்க மாட்டார்கள்.
- துன்பம் துன்புற செய்தாலும்.. சிலர் முகத்திரைய அவிழ்த்து காட்டி, மீண்டும் யாரையும் நம்பாதே.. எனும் அறிவுரையை வழங்கியே செல்லும்…!
- எந்த உறவிலும், அடுத்தவர் வாழ்வில் நம்முடைய இடம் எது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, உறவுகள் நீடிக்கும்..!
- எல்லா வகை முகமூடிகளையும் அனிய தெரிந்தவர்கள், வாழ்க்கையில் மிக அழகாக நடித்து ஜெயித்து விடுகின்றனர்.
- எந்தவொரு உறவும் நிரந்தரம் இல்லை தெரிஞ்சும் நான் உன் மேல பாசம் வச்சது ஏன் தப்பு தான்.
- அன்பானவர்களுக்காக இறங்கி போவதும் தவறில்லை.. நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை..
- நம்ம மனசாட்சிக்கு நாம நல்லவங்க தெரிஞ்சா போதும் எல்லாருக்கும் நிரூபித்து காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை..
- உண்மையான அன்பு ஆயிரம் தவறு செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது! ஆனால், பொய்யான அன்பு, பிரிவதற்கான ஆயிரம் வழியைத் தேடும்!
- உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாமல், உண்மை முகத்தை எப்போதும் காட்டு போலி வேடம் நிலையானதல்ல!
- வேஷத்துக்கு கிடைக்கும் மதிப்பு கூட, பாசத்துக்கு கிடைப்பது இல்லை!