சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Fake Relationship Quotes in Tamil | பொய்யான உறவுகளின் தத்துவங்கள்
உறவு என்பது நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய அனைத்திலும் பங்கேற்று நம்முடன் இறுதி வரை உறுதுணையாக இருப்பது தான் ஒரு ஆரோக்கியமான உறவுக்கு அடையாளம் .
இப்போதைய கால கட்டங்களில் ஒரு சிலர் மட்டுமே ஆரோக்கியமான உறவில் பழகுகின்றனர். மற்றவர்களெல்லாம் ஒரு பொய்யான தோற்றத்தில் உறவு வைக்கின்றனர்.
அவர்களுக்கு ஏதாவது ஒரு காரியம் நம்மிடம் ஆக வேண்டுமென்றால் நம்மிடம் வந்து பேசி பழகி அந்த காரியம் நம்மால் அவர்களுக்கு நடந்து முடிந்துவிட்டால் அவர்கள் நம்மிடம் வைத்திருந்த உறவை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் வேறு யாரிடமாவது உறவை தொடருவார்கள் . இந்த உறவின் பெயர்தான் போலியான உறவு ஆகும்
இதில் அவர்கள் நல்லவர்கள் என்று நம்பி நாம் அவர்களுடன் பழகி வந்ததை அவர்கள் நம் உறவை தூக்கி எறிந்த பின் நினைத்து வருந்தி மனதளவில் பாதிப்பு அடைகிறோம். நாம் முதலில் நம்மிடம் ஒருவர் வந்து பேசும் பொழுதே நாம் கணித்துக் கொள்ள வேண்டும் இவர்கள் எதனால் நம்மிடம் வந்து பேசுகிறார்கள் ? அல்லது நம் மீது உண்மையான நட்பின் ரீதியாக பேசுகிறார்களா என்று கணித்து அவர்களிடம் பேச வேண்டும் .இல்லை என்றால் நாம் பின்னர் மனதளவில் வருத்தம் அடையும் சூழ் நிலைக்கு தள்ளப்படுவர் .மேலும் இந்தப் பதிவில் பொய்யான உறவுகளின் தத்துவங்களை சிலவற்றை பார்ப்போம்.

- எவ்வளவு தான் பாசம் வைத்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நாம் மூன்றாவது மனிதர் இவர்தான்

- கண்மூடித்தனமாக ஒருவரை நேசித்து விட்டால் அவர்கள் சொல்லும் பொய்கள் கூட உண்மையாகவே தெரிகிறது

- ஒருவரை மன்னித்து விடும் அளவிற்கு நல்லவராக இருங்கள் ஆனால் அவரை மீண்டும் நம்பும் அளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்

- பொய்யான அன்பு பொழுதுபோக்கான பேச்சு தேவைப்படும் போது தேடல் இதுதான் இங்கே பலரது வாழ்க்கை

- எந்த உறவிலும் அடுத்தவர் வாழ்விலும் நம்முடைய இடம் எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டால் மட்டுமே உறவுகள் நீடிக்கும்

- நேர்மையாக இருப்பவனை அழ வைக்கிறது நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுபவனை வாழ வைக்கிறது

- உனக்கு ஒருமுறை துரோகம் செய்தவன் உனக்கு மீண்டும் துரோகம் செய்வான் என்பதில் உறுதியாக இரு

- என்னைத் தவிர யாரும் எனக்கு நிரந்தரமில்லை என்று புரிவதற்குல் எத்தனை ஏமாற்றங்கள் என் வாழ்வில்

- கட்டாயத்தினால் காட்டப்படும் அன்பு கண்டிப்பாக நிலைக்காது

- வாழ்க்கையில் ஒரு சிலரை மட்டுமே நம்புங்கள் ஏனென்றால் யாரு உண்மையானவர்கள் என்று உங்களுக்கு தெரியாது

- வார்த்தைகளை அல்ல செயல்களை நம்புங்கள்

- உண்மையானவர்கள் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால் அவர்களின் முகத்தை அல்ல இதயத்தை பாருங்கள்

- ஒருபோதும் யாரையும் சார்ந்து இருக்காதீர் ஏனென்றால் அவர்கள் எப்போது உங்களை விட்டு வெளியேறுவார்கள் என்று உங்களுக்கு தெரியாது