சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பிடல் காஸ்ட்ரோ தத்துவங்கள் | Fidel Castro Quotes In Tamil
பிடல் காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். கியூபா என்ற நாடு இன்று உலகமறிய காரணம் காஸ்ட்ரோ. இவர் ஒரு வசதியான ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவின் பெரு முதலாளிகள் கியூபாவில் தொழில் செய்து கியூபா மக்களின் உழைப்பையும் செல்வதையும் சுரண்டுவதை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு அமெரிக்கா மற்றும் கியூபா நாட்டின் அரசுக்கு எதிராக போராடினார். இவர் கம்யூனிசம் கொள்கைகளை பின்பற்றினார் மேலும் இவர் கம்யூனிசம் கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் முன்னெடுத்து சிறை சென்றார். மெக்ஸிகோ தப்பி சென்ற காஸ்ட்ரோ அங்கு சேகுவாரா உடன் இணைத்து கியூபாவில் புரட்சியை உண்டாக்கினார். பல போர் முறிகளை பின்பற்றினார் குறிப்பாக கொரில்லா போர் முறை பின்பற்றி கியூபா நாட்டில் ஆட்சி அமைத்தார் இவர் ஆட்சிக்கு வந்ததும் கியூபாவில் இலவச கல்வி அறிவித்தார் இதனால் கியூபாவில் 96 சதவீதம் பேர் படிப்பறிவு பெற்றவர்கள் என்பதும் மேலும் அங்கு உள்ள தொழில்நுட்ப துறையில் 60 சதவீதம் பேர் பெண்கள் வேலைசெய்தனர், இன்றளவும் மருத்துவ துறையில் உலகத்துக்கு முன்னோடியாக கியூபா விளங்குவதற்கு கஸ்டோ தான் முக்கிய காரணம். இதற்கு உதாரணம் பல நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா ஏன்னும் நாடு இவரை கண்டு மிகவும் பயந்தது இவரால் பெரும் நஷ்டத்தையும் பெரும் இழப்புகளையும் சந்தித்தது இதனால் இவரை அமெரிக்கா 638 முறை கொலை முயற்சி செய்தது அனைத்தையும் வென்று காட்டியவர் காஸ்ட்ரோ. இதுபோன்ற காலத்தை வென்ற புரட்சியாளரை கூறிய சில தத்துவங்களை பார்க்கலாம்.
- நீ செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால் அது நீ போகும் பாதையே அல்ல வேறு யாரோ போன பாதை.
- போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள் வென்ற பின் விடா முயற்சி என்பார்கள்
- கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்
- நீங்கள் என்னை தண்டியுங்கள், சிறையில் அடையுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் வரலாறு எனக் நீதி வழங்கும்.
- விதைத்தவன் உறங்கலாம். ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.
- தயங்குபவர் கை தடுக்கிறார், துணிந்தவர் கைதட்டல் பெறுகிறார்.
- ஒரு மனிதனை விலைக்கு வாங்கி விடலாம், ஆனால் மக்களை ஒரு போதும் வாங்கிவிட முடியாது.
- தெரியாதவர்கள் கற்று கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள்.
- தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவனே மாமனிதன்.
- உன்னை அதிகம் விமர்சிப்பவர்களே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறார்.